Page 102 of 232 FirstFirst ... 2 52 92 98 99 100 101 102 103 104 105 106 112 152 202 ... LastLast
Results 1,213 to 1,224 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1213
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஏழு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன....

    இந்தியா இலங்கை இடையே ஏழு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்த உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

    ....பிபிசி தமிழோசை 10.06.2010

  2. #1214
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    தமிழால் எல்லாம் முடியும்; தமிழக அரசால் முடியுமா? ராமதாஸ் கேள்வி.....

    சென்னை, ஜூன் 9: "தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, பயிற்சி மொழியாக்கவோ தமிழக அரசால் முடியுமா?' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது:

    ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா? இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

    தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் உயர்வுக்காக பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை.

    உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

    எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ் என பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.

    வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் இதுவரை 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    அரசாணை வந்து 27 ஆண்டுகளாகியும், அவை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த அரசாணைகளை அமல்படுத்த முடியும்.

    தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ....தினமணி 09.06.2010

  3. #1215
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் குண்டு வெடித்து 40 பேர் பலி; 77 பேர் காயம்.....


    காந்தகார், ஜுன்.11-

    ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியானார்கள். 77 பேர் காயம் அடைந்தனர்.

    முதன்முறையாக

    ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் ராணுவ மற்றும் போலீஸ் கேந்திரங்களையும், அரசாங்க கட்டிடங்களையும் தான் தாக்குதல் நடத்துவதற்கான இலக்காக கொண்டு இருப்பார்கள். முதன்முறையாக அவர்கள் ஒரு திருமண வீட்டில் தாக்குதல் நடத்தி பெரிய அளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் காந்தகார் மாநிலத்தில் ஆர்கான்டாப் மாவட்டத்தில் நங்காகான் என்ற இடத்தில் நடந்தது.

    .....தினத்தந்தி 11.06.2010

  4. #1216
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் இன்று பதவி ஏற்கிறார்.....

    சென்னை, ஜுன்.11-

    சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஒய்.இக்பால் இன்று (வெள்ளிக்கிழமை) ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

    புதிய தலைமை நீதிபதி

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.கோகலே கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பணி இடம் காலியாக இருந்தது. தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த எம்.ஒய்.இக்பாலை சென்னை உயர்நீதமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


    எம்.ஒய்.இக்பால் 13.2.1951-ல் பிறந்தார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று தங்க மெடல் வென்றுள்ளார். 1975-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட இவர், சிவில் வழக்குகளில் அதிக கவனம் செலுத்தினார். 1990-ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் அரசு வழுக்குரைஞராக (பிளீடர்) ஆனார்.

    அதைத்தொடர்ந்து உரிமையியல் (சிவில்), குற்றவியல் (கிரிமினல்), அரசியல் அமைப்பு சட்டங்கள், வரி விவகாரங்கள் ஆகிய வழக்குகளில் ஆஜரானார். வங்கிகள், காப்பீடு, மின்வாரியம் நிறுவனங்கள் உள்பட பல்வேறு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 9.5.1996 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனார். அதன்பின்னர் 14.11.2000 அன்று ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

    .....தினத்தந்தி 11.06.2010
    Last edited by nambi; 11-06-2010 at 05:23 AM.

  5. #1217
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள் : முதல்வர் கருணாநிதி வழங்கினார்......

    சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, "சிடி பிளேயர்'களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். மேலும், உண்ணாவிரதம் இருந்த பார்வையற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார். மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் கோரி விண்ணப்பித்த, மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், கடந்த ஆண்டுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில், பேட்டரியில் இயங்கும் 761 மூன்று சக்கர வாகனங்களை வழங்க, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

    இதில் முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

    இதேபோல, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு, "டேப் ரிக்கார்டர்' மற்றும் கேசட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, முதல் முறையாக, பார்வையற்ற 124 மாணவ, மாணவியருக்கு 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில், "சிடி பிளேயர்' மற்றும் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட "சிடி'க்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக, அரசு சிறப்பு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வரும், பார்வையற்ற 50 மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு, "சிடி பிளேயர்' மற்றும் "சிடி'க்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

    பூந்தமல்லியில் உள்ள, அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த, 72 பேருக்கு வேலை வழங்க கோரி, உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளை, மருத்துவமனையில் சென்று முதல்வர் பார்வையிட்டார். பணி நியமனங்கள் வழங்கப்படுமென அப்போது முதல்வர் உறுதியளித்தார். அதன்படி, இடைநிலை பயிற்சி முடித்த அந்த 72 மாற்றுத் திறனாளிகளில், ஆசிரியர் பணிக்குத் தகுதி வாய்ந்த 60 பேருக்கு, தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை, முதல்வர் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் குற்றாலிங்கம், நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஜவகர், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் விஜயராஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ....தினமலர் 10.06.2010

  6. #1218
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்.....

    தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ மோதல்


    ஜோகனஸ்பர்க், ஜுன்.11-

    கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த உலக கோப்பை கால்பந்துபோட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பை கால்பந்து

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 19-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தென்ஆப்பிரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.

    போட்டியை நடத்தும் நாட்டை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்றுகள் மூலம் உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்திருக்கின்றன. இந்த உலக கோப்பையில் விளையாட மொத்தம் 204 நாடுகள் தகுதி சுற்று ஆட்டங்களில் கலந்து கொண்டன. அவற்றில் இருந்து 32 அணிகள் உலக கோப்பையின் பிரதான சுற்றில் விளையாட வந்திருக்கின்றன.

    உலக கோப்பை கால்பந்து போட்டி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நாடு ஒன்று உலக கோப்பையை நடத்துவது இது தான் முதல்தடவையாகும். தென்ஆப்பிரிக்க அணி தரவரிசையில் 83-வது இடம் வகிக்கிறது.

    மண்டேலா வருகிறார்

    உலக கோப்பை கொண்டாட்டம், தென்ஆப்பிரிக்காவில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் தென்ஆப்பிரிக்க நகரங்களில் குவிந்து இருக்கிறார்கள். போட்டி நடக்கும் 9 நகரங்களிலும் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் இசைவெள்ளத்தில் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    ஜோகனஸ்பர்க் நகரின் சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் முதலாவது ஆட்டம் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக 40 நிமிடங்கள் கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடக்க விழாவில் பிரமிக்க வைக்க காத்திருக்கிறார்கள். இதில் முதல் 7 நிமிடங்கள் மேலும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமானதாக இருக்கும் என்று போட்டி அமைப்பாளர் டேரெக் கார்ஸ்டென்ஸ் கூறினார். ஆனால் அந்த ரகசியத்தை வெளியிட மறுத்து விட்டார்.

    தொடக்க விழாவில் தென்ஆப்பிரிக்காவின் பெருந்தலைவர் 91 வயதான நெல்சன் மண்டேலா கலந்து கொள்ள இருக்கிறார். இது விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ

    இதை தொடர்ந்து ஆட்டங்கள் தொடங்க உள்ளன. பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து ஆட்டம் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதுவும் சமனில் முடிந்தால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டியின் முதல் நாளான இன்று `ஏ' பிரிவில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தொடக்க ஆட்டத்தில் (இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது) பாரோன் மோகோனா தலைமையிலான தென்ஆப்பிரிக்காவும், ரபெல் மார்கிïஸ் தலைமையிலான மெக்சிகோ அணியும் ஜோகனஸ்பர்க் சாக்கர் சிட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    அதிபர் வாழ்த்து

    உள்ளூர் அணியான தென்ஆப்பிரிக்கா தரவரிசையில் மிகவும் பின்தங்கிய (83-வது இடம்) அணியாகும். அதனால் அந்த அணி முதலாவது சுற்றை கடக்குமா? என்பதே கேள்விக்குறி தான். உலக கோப்பையை நடத்தும் நாடுகளில் இதுவரை எந்த அணியும் முதல் சுற்றுடன் வெளியேறியது கிடையாது. அந்த வரலாற்றை தென்ஆப்பிரிக்காவும் தொடர வேண்டும் என்று உள்ளூர் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா இதற்கு முன்பு முதல் சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சொந்த மண்ணில் ஆடுவது தென்ஆப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சம் என்றாலும், அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த அணி வீரர்களை தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தி, அணி வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார். அது அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்தி உள்ளது. ஸ்டீவ் பின்னியர், ஷபல்லாலா ஆகியோர் தென்ஆப்பிரிக்க அணியின் முக்கியமான வீரர்கள் ஆவர் என்றாலும் தென்ஆப்பிக்காவின் தடுப்பாட்டம் கொஞ்சம் பலவீனமானதாகும்.

    தென்ஆப்பிரிக்கா உலக கோப்பையில் பங்கேற்பது இது 3-வது முறையாகும். அதே சமயம் மெக்சிகோ அணிக்கு 13 உலக கோப்பைகளில் விளையாடி அனுபவம் இருக்கிறது. இளம் ரத்தத்தை பாய்ச்சியதால் உலக கோப்பைக்கு தகுதி பெற்ற மெக்சிகோ, அதே வேகத்தை காட்ட ஆர்வமாக உள்ளது. தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள மெக்சிகோ அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு கடுமையான சவாலாக விளங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த ஆட்டத்தை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசிக்க உள்ளனர்.

    உருகுவே-பிரான்ஸ்

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு கேப்டவுனில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் உருகுவேயும், பிரான்சும் மோதுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் முதலாவது ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால், இரு அணியும் கடுமையாக களத்தில் மல்லுக்கட்டும்.

    போட்டிகளை ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடக்க ஆட்டத்தையும், கால்இறுதியில் இருந்து அனைத்து ஆட்டங்களையும் தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.


    .....தினத்தந்தி 11.06.2010

  7. #1219
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    நெல்லை மற்றும் சென்னையில் போலி மருத்துவர்கள் கைது....

    நெல்லையில் 5 பெண் போலி மருத்துவர்கள் உட்பட மொத்தம் 34 போலி மருத்துவர்கள் (டாகடர்கள்) காவல்துறையினரால் கைது செய்துபட்டுள்ளனர். உரிய சான்றிதழ் இல்லாமல், தகுதியில்லாமல் மருத்துவம் செய்ததும் தெரியவந்தது. நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் போலி மருத்துவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 3 மருத்துவர்கள் திருவொற்றியூர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தொடரப்பட்டு வருவதாகவும், மேலும் தொடரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    ......கலைஞர் செய்திகள் 11.06.2010 11.06
    Last edited by nambi; 11-06-2010 at 06:08 AM.

  8. #1220
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    தமிழகம் முழுவதும் 171 போலி டாக்டர்கள் கைது: கிராமப் பகுதி மக்களை ஏமாற்றி வந்தனர்.....

    சென்னை: எம்பிபிஎஸ் படிக்காமலேயே ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்த 171 போலி டாக்டர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் சித்த வைத்தியம் உள்ளிட்ட சில பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை படித்துவிட்டு பலர் அலோபதி மருத்துவ முறையி்ல் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகன்றனர்.

    இந் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். ஊர், ஊராக பல மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, நெல்லை, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த வேட்டையில் ஒரே நாளில் 171 பேர் பிடிபட்டனர்.
    நெல்லையில் 34 பேர் கைது:

    அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் தான் 34 பேர் பிடிபட்டனர். இவர்களில் பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருபவர்கள் ஆவர்.

    திசையன்விளை, களக்காடு, கோவில்பத்தை, கீழப்பத்தை கிராமங்கள் மற்றும் நாங்குநேரி, வள்ளியூர், ஏர்வாடி ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், புளியங்குடி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பெண்களும் அடங்குவர்.

    'எஸ்.எஸ்.எல்.சி. டாக்டர்':

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வரும் எஸ்.எஸ். ராயன் (70) என்பவர் ஆர்.எம்.பி. படித்து இருப்பதாக போர்டு வைத்துள்ளார்.

    ஆனால், இவர் ஊசி எல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளிப்பது வந்தார். விசாரணையில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது. 1969ம் ஆண்டு முதல் இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மட்டுமே படித்துவிட்டு, டாக்டர் தொழில் செய்து வந்த மாதம்மாள் (38), தர்மபுரிதொட்டம்பட்டியில் 2 பேர், சேலத்தில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி வந்த தபரே ஆலம் (42) ஆகியோரும் கைதாயினர்.

    மதுரை மாவட்டம் மேலூரில்..

    மதுரை மாவட்டம் மேலூரில் மூலம், பெளத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரஞ்சித் மோண்டல் (35) என்பவர் கைதானார்.

    அதேபோல இங்கு கிளீனி்க் நடத்தி வந்த நடத்தி வந்த மதார் (65), ராஜகோபால் (65) ஆகியோரும் கைதாயினர். அலங்காநல்லூரிலும் 3 பேர் கைதாயினர்.

    திருச்சி-கோவையில்...

    அதே போல திருச்சியில் 5 பேரும், மன்னார்குடியில் கிளினிக் நடத்தி வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கோவை ஈச்சனாரியை சேர்ந்த ரமா பூபதி (45) என்ற ஹோமியோபதி படித்த பெண் டாக்டர் அலோபதி சிகிச்சை அளிப்பது வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காளியம்மாள் (28) என்ற பெண் மருத்துவம் படிக்காமலேயே ஊசியெல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

    அதே போல பண்ருட்டியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இன்று பல மோசடி கிளீனிக்குகள் திறக்கப்படவே இல்லை. அங்கு சிகி்ச்சை அளித்த 'டாக்டர்களையும்' காணவில்லை. அவர்கள் எல்லாம் தலைமறைவாகியுள்ளனர்.

    இது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி ராதாகிஷ்ணன் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 153 பேர் கிராமப்புறங்களில்தான் பிடிபட்டுள்ளனர். கைதானவர்களில் 101 பேரிடம் எந்தவித சான்றிதழ்களும் இல்லை. 70 பேர் டிப்ளமோ சான்றிதழ்கள் வைத்திருந்தனர்.

    கிராமப்புற மக்களை ஏமாற்றி இவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடக்கும் என்றார்.

    .....தட்ஸ் தமிழ் 12.06.2010

  9. #1221
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    உலக கோப்பை கால்பந்து : தொடக்க ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்கா - மெக்சிகோ டிரா......

    ஜோகனஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது . முதலாவது ஆட்டத்தில் ஏ பிரிவில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதின. 55-வது நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா முதலாவது கோலினை போட்டது. அடுத்து 79-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் கேப்டன் ரபெல் மார்கிஹீஸ் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் விறுவிறுப்பான தொடக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதே போல் உருகுவே -பிரான்ஸ் அணிகள் மோதிய 2 வது ஆட்டத்திலும் , இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.

    ....தினமலர் 12.06.2010

  10. #1222
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    நெல்சன் மண்டேலாவுக்கு 'பிபா' தலைவர் இரங்கல் கடிதம்.....

    ஜுன்.12 (டிஎன்எஸ்) உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க ஒரு நாளுக்கு முன்னதாக ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த கார் விபத்தில் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஷெனானி உயிரிழந்தார். 13 வயதே நிரம்பிய ஷொனனி மண்டேலாவின் கடைசி பேத்தி ஆவார்.

    நேற்று (ஜுன்.11) நடைபெற்ற உலக கோப்பை துவக்க விழா நிகழ்ச்சியில் மண்டேலா கலந்து கொள்வதாக இருந்தது. பேத்தி இறந்ததையடுத்து அவர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் உலக கோப்பை கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

    மண்டேலாவின் பேத்தி இறந்ததையடுத்து 'பிபா'தலைவர் செப் பிளேட்டர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், ''இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. சரியான வார்த்தைகளை கண்டுபிடித்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன். கால்பந்து உலகமே உங்களுடன், உங்கள் குடும்பத்துடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற நெல்சன் மண்டேலா கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.அவரால் உலக கோப்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது தென்ஆப்பிரிக்க மக்களையும் சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

    ....(நன்றி தமிழ் ஸ்போட்ஸ் நியூஸ்)...சென்னை ஆன்லைன் 12.06.2010

  11. #1223
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    உலக கோப்பை கால்பந்து குழுக்களின் பட்டியல்.....

    தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இலக்கு (கோல்) அடித்த விவரங்களும்..போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அடங்கிய குழுக்களின் (குழு A, B, C, D, E, F, G, H) பட்டியல்கள்....

    உலக கோப்பை கால்பந்து குழு '' பி பா'' இணையதளம்

  12. #1224
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    உலக கால்பந்து ஆட்டங்களின் நேரங்கள்.....

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் காலம் மற்றும் பங்கும் பெறும் நாடுகள் ஆடங்கிய பட்டியல்....(சாதாரணமாக சுட்டும் பொழுது தெ.ஆ நாட்டின் நேரப்படி குறிக்கப்பட்டிருக்கலாம் இதை சுட்டி மாற்றி வசிப்பிடத்திற்கேற்ப இருக்கும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்...)

    (//Match times are currently set to your time zone, please click here to revert to local time.//) சுட்டியபின் இப்படி மாறும்...


    தெ.ஆ. உலக கோப்பை கால்பந்து ஆட்டங்களின் நேர விவரங்களின் பட்டியல்... (இந்திய நேரப்படி மாற்றியமைக்கப்பட்டது....வசிப்பிடத்திற்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளவும்)

Page 102 of 232 FirstFirst ... 2 52 92 98 99 100 101 102 103 104 105 106 112 152 202 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •