Page 101 of 232 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast
Results 1,201 to 1,212 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1201
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இலங்கை; உண்மையை சொல்வது துரோகமல்ல.....



    இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்

    அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.

    தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

    தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

    இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

    ......பிபிசி தமிழோசை 08.06.2010

  2. #1202
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.........




    தமிழக எம்.பி.க்கள் குழு இன்று சந்திப்பு
    முகாம்களில் உள்ள 80 ஆயிரம் தமிழர்களை மறுகுடியமர்த்த வலியுறுத்துகிறார்கள்


    இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார். அவரை தமிழக எம்.பிக்கள் குழு இன்று சந்தித்து பேசுகிறது. முகாம்களில் உள்ள 80 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களில் மறுகுடியமர்த்த அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    புதுடெல்லி, ஜுன்.9-

    இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    டெல்லி வந்தார்

    அவர் தனி விமானம் மூலம் கொழும்பில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்தார். அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பிறகு அவர் இந்தியா வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அவருடன் இலங்கை அரசின் உயர் மட்ட குழு ஒன்றும் வந்துள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கினார்.

    இன்று காலை ராஜபக்சேவுக்கு ஜனாதிபதி மாளிகையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒப்பந்தம் கையெழுத்து

    வரவேற்பு முடிந்ததும் அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது ஒருங்கிணைந்த கூட்டு பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    மேலும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகள், உலக மற்றும் மண்டல விவகாரங்கள் உள்பட இரு நாட்டு நல்லுறவு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஜனாதிபதியுடன் சந்திப்பு

    டெல்லியில் அதிபர் ராஜபக்சே ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.

    நாளை அவர் தனது குடும்பத்துடன் சிம்லா செல்ல இருப்பதாகவும் அங்கிருந்து கொழும்பு திரும்புவார் என்றும் தெரிகிறது.

    தமிழக எம்.பி.க்கள்

    டெல்லியில் இன்று (புதன்கிழமை) மதியம் அதிபர் ராஜபக்சேயை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றும், இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சரியான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அதிபர் ராஜபக்சே மீது எழுந்துள்ளது.

    வலியுறுத்தல்

    தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அதனை வலியுறுத்த உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை கேட்டு கடந்த 6-ந் தேதியன்று டெல்லிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமரை டி.ஆர்.பாலு சந்தித்து, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசுவதற்காக நேரத்தினை பெற்றிட வலியுறுத்தினார். இதற்கான அனுமதி பெறப்பட்டு ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்து பேசுகின்றனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை சொந்த ஊர்களில் குடியமர்த்தி மறுவாழ்வு பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

    ராஜபக்சேவை சந்திப்போர் யார்?

    ராஜபக்சேவை சந்தித்து பேசும் தமிழக எம்.பி.க்கள் பெயர் மற்றும் கட்சியின் விவரம் வருமாறு:-

    தி.மு.க:- டி.ஆர்.பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.தாமரைச்செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.

    காங்கிரஸ்:- மணிசங்கர் ஐயர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன், பி.எஸ்.ஞானதேசிகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    .....தினத்தந்தி 09.06.2010

  3. #1203
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மன்மோகன் சிங்குடன் சிரஞ்சீவி சந்திப்பு.......

    துடில்லி: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரஜா ராஜ்ய கட்சி தலைவர் சிரஞ்சீவி தமது கட்சியின் 14 எம்.எல்.ஏ.,க்களுடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேசிய விவசாய திட்டத்தின் கீழ் ஆந்திராவின் போலாவரம், பிரணகிதா நீர்பாசன திட்டங்களை சேர்க்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். மேலும் ஆந்திராவில் மதுக்கடைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
    .....தினமலர் 10.06.2010

  4. #1204
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    திருப்பதி கோவில் உண்டியலில் திருடிய வாலிபர் கைது 4 பேருக்கு வலை வீச்சு........

    நகரி, ஜுன்.10-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏழுமலையானுக்கு அபிஷேக நீர் எடுக்கும் தங்க கிணறு அருகே ஒரு மொபைல் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் பிரதான உண்டியல் நிரம்பிவிட்டால் அதை காலி செய்வதற்குள், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இந்த மொபைல் உண்டியலை வைத்துள்ளனர்.

    நேற்று நள்ளிரவு இந்த மொபைல் உண்டியலில் காசு போடுவது போல, ஒருவர் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்ததை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது. இதுபற்றி கேமரா ஆப்பரேட்டர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கேமராவில் உள்ள படத்தை வைத்து, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காரு பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோவில் உண்டியலில் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

    மேலும் இந்த சம்பவத்தில் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.5,137-ஐ பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி உள்ளவர்களை வலை வீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    .....தினத்தந்தி 10.06.2010

  5. #1205
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மத்திய பிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு...........

    போபால், ஜுன்.10-

    போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் அறிவித்து உள்ளார்.

    20 ஆயிரம் பேர் பலிக்கு 2 ஆண்டு ஜெயில்

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கி வந்த ïனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மகிந்திரா உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் ஒருவர் வழக்கு நடந்து வந்த போது மரணம் அடைந்து விட்டார். 26 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தலைமை ஜ×டீசியல் மாஜிஸ்திரேட்டு மோகன் பி.திவாரி தீர்ப்பளித்தார்.

    அதிருப்தி

    இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாக காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது. அதிக தண்டனை வழங்க வேண்டும். ïனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்த வழக்கை சி.பி.ஐ. சரியாக நடத்தவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லியே இது குறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சாட்டி இருப்பது அனைவரின் புருவத்தையும் உயரச் செய்து உள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமைக்கப்பட்ட குழுவினர், சி.பி.ஐ.க்கு பிரதமர் மன்மோகன்சிங்தான் பொறுப்பு. ஆகவே அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்தவும், குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஐகோர்ட்டில் அப்பீல்

    இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் அரசு சார்பில் அப்பீல் செய்யப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போபால் விஷ வாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து போபால் ஐகோர்ட்டில் மாநில அரசே அப்பீல் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    5 பேர் குழு

    அப்பீல் செய்வதற்கு முன்னதாக சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளோம். மாநில அட்வகேட் ஜெனரல் ஆர்.டி.ஜெயின், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் விவேக் தன்கா, ஆனந்த் மோகன் மாத்தூர், மாநில சட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஏ.கே.மிஸ்ரா, பிரபல சட்ட மேதை சாந்திலால் லோதா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

    இவர்கள் விஷ வாயு வழக்கின் தீர்ப்பை படித்து 10 நாட்களுக்குள் முதல் கட்ட அறிக்கை ஒன்றை அரசுக்கு அளிப்பார்கள். இறுதி அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் கொடுப்பார்கள். குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க மாநில அரசு வாதாடும்.

    சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு

    சி.பி.ஐ. இந்த வழக்கை சரியாக நடத்த வில்லை. இ.பி.கோ. 304-2-வது பிரிவில் (கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கம் இல்லாமல் நடந்த மரணம்) பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து, 304-ஏ பிரிவின் கீழ் (கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்) என்று மாற்றிய போது அதை எதிர்த்து ஏன் சி.பி.ஐ. மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வில்லை?

    அதே போல, இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாக உள்ள, வழக்கில் சம்பந்தம் இல்லாமல் சுதந்திரமாக அமெரிக்காவில் இருக்கும் வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்த ஏன் சி.பி.ஐ. முயற்சி எடுக்க வில்லை? சி.பி.ஐ.யை பொறுத்தவரை இந்த விஷயத்தில் வெறும் காகித அளவிலான வேலைகள் மட்டுமே நடந்துள்ளன.

    இவ்வாறு முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

    பயனில்லை

    இதற்கிடையே மத்திய அரசின் இந்த அப்பீல் பயனற்றது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முதலில் 304-2-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து இருக்கும். ஆனால் 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எம்.அகமது தலைமையிலான பெஞ்ச் 304-2-வது பிரிவை நீக்கி விட்டது. தற்போது 304-ஏ பிரிவின் கீழ் வழக்கு நடந்து இருப்பதால் தண்டனை அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    தலைமறைவு குற்றவாளியான, ïனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. ஆகவே அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    .....தினத்தந்தி 10.06.2010

  6. #1206
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஹூண்டாய் நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் இன்று முதல் வேலைக்கு திரும்புகிறார்கள்......

    சென்னை, ஜுன்.10-

    ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அதன் தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலைக்கு திரும்புகிறார்கள்.

    இதுதொடர்பாக ஹூண்டாய் நìறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.டபிள்ï.பார்க், மூத்த துணைத் தலைவர் ஆர்.சேதுராமன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ரூ.65 கோடி நஷ்டம்

    சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனியில் 29.4.2008 அன்று நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து 87 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 20 பேரை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வது பற்றி 28.7.2009 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில், மீதமுள்ள 67 பேரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளக் கோரி அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3800 கார்களின் உற்பத்தி பாதித்து ரூ.65 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

    முக்கிய கோரிக்கை

    எனவே, இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டோம். அதன்படி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அவரது இல்லத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டி.பிரபாகரராவ், தொழிலாளர் ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் உடனிருந்தனர்.

    சமாதான பேச்சுவார்த்தையின்போது, 67 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் 35 பேரை வேலைக்கு சேர்த்துக் கொள்வது பற்றி கூட்டுக் குழு ஒருமாதத்தில் முடிவு செய்யும் என்று தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ள 32 பேர் மீது கோர்ட்டில் வழக்கு இருப்பதால் சட்டப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படும்.

    28.7.2009 அன்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 20 தொழிலாளர்களின் பணி கடந்த 9 மாதங்கள் கண்காணிப்பு செய்யப்பட்டது. வரும் ஜுலை 1-ந் தேதி முதல் அவர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுகின்றனர்.

    கருணாநிதிக்கு, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

    ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து சமாதானக் கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் 100 சதவீத கார் உற்பத்தி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    ......தினத்தந்தி 10.06.2010

  7. #1207
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி : அமெரிக்கா அளித்தது விளக்கம்......

    வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்கும் வல்லமை பெறுவதற்காக அந்நாட்டுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறோம். இந்த ராணுவ உதவி எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது, என்ற உறுதி மொழியை பாகிஸ்தானிடம் பெற்றுள்ளோம்.சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, வாஷிங்டன் வந்த போது, அவரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். பாதுகாப்பு ரீதியாக பாகிஸ்தான் வலுவுள்ளதாகவும், ஜனநாயக ரீதியாக மேம்படவும் தான் இந்த உதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக தெளிவுபடுத்தியுள்ளது.

    .........தினமலர் 09.06.2010

  8. #1208
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பழனி முருகன் கோவிலில் ஒரு மாத உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 81 லட்சம்......

    பழனி, ஜுன்.10-

    பழனி முருகன் கோவிலில் கடந்த 31 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1 கோடியே 81 லட்சம் வருவாய் கிடைத்தது.

    உண்டியல் எண்ணிக்கை

    பழனி முருகன் கோவிலில் கடந்த 31 நாட்களில் உண்டியல்கள் மூலம் கிடைத்த காணிக்கை மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டது.

    பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் நடராஜன், மதுரை துணை ஆணையர் செல்வராஜ், முதுநிலை கணக்கு அதிகாரி கார்த்திகேயன், அறங்காவலர் குழுத்தலைவரின் பிரதிநிதி பொன்னுச்சாமி மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர். பழனி கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கார்த்திக் பள்ளி மாணவ-மாணவிகள் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

    இரண்டு நாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 37 ஆயிரத்து 900 கிடைத்தது. இது தவிர 13 ஆயிரத்து 145 கிரா ம் வெள்ளியும், 1,381 கிராம் தங்கமும் கிடைத்தது. வெளி நாட்டு கரன்சி நோட்டுகள் 418 எண்ணம் கிடைத்தன.

    இதுதவிர பக்தர்கள் செலுத் திய தங்கம் மற்றும் வெள்ளியா ல் ஆன வேல்கள், கட்டிகள், பாதங்கள், மாங்கல்யம், காவடி கள், அம்புகள், ஆபரணங் கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் கிடைத்தன. பட்டம், பரிவட்டம், நவதா னியங்கள், ஏலக்காய் மாலை, புடவை, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் அதிகம் கிடைத்தன. கடந்த மே மாதம் கோடை விடுமுறை என்பதால் உண்டியல் வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.

    ரூ.30 லட்சம் அதிகம்

    கடந்த ஆண்டு இதே காலத் தில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் கிடைத்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.31 லட் சம் கிடைத்துள்ளது.


    .....தினத்தந்தி 10.06.2010

  9. #1209
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    முத்தரப்புத் தொடரை வென்றது இலங்கை............

    ஹராரே, ஜூன் 9: ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரை இலங்கை அணி வென்றது.

    ÷இறுதி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை அணி கேப்டன் தில்ஷன் சதமடித்தார்.

    ÷முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 49 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ÷இந்த இருநாடுகளைத் தவிர இந்தியாவும் இந்த போட்டியில் பங்கேற்றது; ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    ÷ஹராரேயில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஜிம்பாப்வே வீரர்கள் மசாகட்சா, டெய்லர் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

    ÷மிகவும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி 5-வது ஓவரில் பிரிந்தது. 23 பந்துகûளை சந்தித்த மசாகட்சா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தைபு களம் இறங்கினார். அவர் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். 10-வது ஓவரில் டெய்லர் (19 ரன்கள்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த இர்வின் 24 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ÷லம்ப் 37 ரன்கள் (65 பந்துகள்) சேர்த்து வெளியேறினார். ஜிம்பாப்வே அணியில் தைபு மட்டும் நிலைத்து நின்று ஆடி அதிகபட்சமாக 93 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் ஜிம்பாப்வே 49 ஓவர்களில் 199 ரன்களுக்குச் சுருண்டது.

    ÷இலங்கை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும், அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குலசேகரா 7 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    ÷200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. உபுல் தரங்காவும், தில்ஷனும் ஆட்டத்தைத் தொடங்கினர். சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாப்வே வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. 10 ஓவர்களில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 63 ரன்களைக் கடந்தது. 16-வது ஓவரில் தில்ஷன் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் தரங்கா 50 ரன்களைக் கடந்தார்.

    ÷இந்த ஜோடி 26-வது ஓவரில் பிரிந்தது. 79 பந்துகளில் 72 ரன்கள் சேர்ந்திருந்த தரங்கா ரன் அவுட் ஆகி வெளியேறினார். 33-வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தில்ஷன் சதமடித்தார். இது ஒருநாள்போட்டிகளில் அவர் அடிக்கும் 7-வது சதம்.

    ÷அடுத்த ஓவரில் அவரே மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 34.4 ஓவரில் இலங்கை 203 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் முத்தரப்புத் தொடரையும் இந்த அணி கைப்பற்றியது.

    ÷தில்ஷன் ஆட்டநாயகனாகவும், ஜிம்பாப்வே வீரர் டெய்லர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    .....தினமணி 09.06.2010

  10. #1210
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கை கழுவிய நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனையானது.....

    சென்னை : "பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, "கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கை: சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறியுள்ளார்.

    ....தினமலர் 09.06.2010

  11. #1211
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    விவசாயிகளுக்கு செலவு வெகுவாக குறையும்: ஒரு மணிநேரத்தில் 40 டன் கரும்பு வெட்டும் எந்திரம்....

    உசிலம்பட்டி, ஜுன்.10-


    உசிலம்பட்டி மற்றும் பேரைïர் பகுதியில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை கூலி ஆட்களை வைத்து தான் கரும்பு வெட்டப்பட்டு வந்தது. இதில் காலதாமதமும், செலவும், ஆட்கள் பற்றாக்குறையும் இருந்து வந்தது.இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள இடையபட்டியில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையின் சார்பில் புதிய கரும்பு வெட்டும் எந்திரம் அறிமுக விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரூ.2.28 கோடி மதிப்பிலான இந்த கரும்பு வெட்டும் அறிமுக விழா நடைபெற்றது.

    40 டன்

    இந்த எந்திரத்தை பார்ப்பதற்காகவும், அதன் சிறப்புகளை அறிந்து கொள்ளவும் உசிலம்பட்டி மற்றும் பேரைïர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சர்க்கரை ஆலையின் உதவி பொதுமேலாளர் (கரும்பு) பாஸ்கரதாஸ் இந்த எந்திரத்தின் நன்மைகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த எந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 40 டன் கரும்பு வெட்டலாம். ஒரு டன்னுக்கு ரூ.275 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆட்களை வைத்து கரும்பு வெட்டினால் ஒரு டன்னிற்கு ரூ.340 வரை செலவிட வேண்டியிருக்கும். இந்த எந்திரத்தால் பணம் மிச்சமாவதுடன், காலதாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

    மேலும் ஆட்களை வைத்து வேலை செய்வதால் கரும்பு பல நாட்கள் வெயிலில் காய்ந்து, ஈரத்தன்மை இழந்து எடையும் குறைந்து விடுகிறது. எந்திரத்தின் மூலம் வேகமாக வெட்டப்படுவதால் எடையும் குறையாது. மேலும் ஆட்கள் கரும்பு வெட்டும் போது அரையடி உயர கரும்பை விட்டுதான் வெட்டுவார்கள். ஆனால் எந்திரத்தின் மூலம் வெட்டும்போது தரையை ஒட்டி கரும்பு வெட்டப்படுவதால் ஒரு ஏக்கருக்கு கூடுதலாக 2 டன் கரும்பு கிடைக்கும். அத்துடன் அடிக்கரும்பில் தான் சாறு அதிகமாக இருக்கும். இதனால் ஆலைக்கும், விவசாயிகளுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கும்.

    எரிக்க கூடாது

    எந்திரத்தின் மூலம் கரும்பு வெட்டப்படுவதால் அடுத்து முளைக்கும் கரும்பு நல்ல தடிமனாகவும், அதிக சிம்புகளும் வெடிக்கும். கரும்பு வெட்டியபின்பு கழிவுகளை தீ வைத்து எரிக்க கூடாது. அப்படி எரித்தால் கரும்பு தடிமனாக வராது. கரும்பு கழிவுகளை காட்டிலே போட்டு நுண்ணுயிர் கிருமிகளை செலுத்தி அவற்றை மக்க செய்ய வேண்டும். இது கரும்புக்கு சிறந்த உரமாகும். மேலும் மனிதர்களை வைத்து வெட்டும்போது, தட்டையை சீவுவதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.1,500 வரை விவசாயிகள் செலவழிக்க வேண்டியுள்ளது. இதுவும் இந்த முறையில் தவிர்க்கப்படுகிறது. மேலும் 2,3 ஏக்கர் வைத்துள்ள சிறிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் மற்றொரு சிறிய எந்திரமும் வாங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    .....தினத்தந்தி 10.06.2010

  12. #1212
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மீள்குடியேறியவர்களுக்காக 50,000 வீடுகளை அமைக்க இந்தியா திட்டம்.....

    இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

    இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் வடபகுதிக்கான இரயில் பாதைகளை மீள அமைப்பதற்கும் இந்தியா உதவி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

    கடந்த ஆண்டில் நிவாரண முகாம்களுக்காக இந்தியா 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ......வீரகேசரி 09.06.2010

Page 101 of 232 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •