Page 100 of 232 FirstFirst ... 50 90 96 97 98 99 100 101 102 103 104 110 150 200 ... LastLast
Results 1,189 to 1,200 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1189
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அன்றாட செய்திகள் மட்டுமில்லாது, பயனுள்ளத் தகவல்களையும் தொகுத்தளிப்பதற்கு நன்றிங்க நம்பி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #1190
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    நாளை தொண்டர்களை சந்திக்கிறார் ஜெ....

    சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க விரும்பும் தொண்டர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் அவரைச் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டன. அ.தி.மு.க.,வில் இருந்து சில பழைய பிரமுகர்கள் தி.மு.க.,வுக்குத் தாவியது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தலைமையைச் சந்தித்து தங்கள் மனக்குமுறலைத் தெரிவிக்க முடியவில்லை; உள்ளூர் பிரச்னைகள், கட்சிக்குள் ஏற்படும் கோஷ்டி மோதல் பற்றிய புகார்களை தெரிவிக்க முடியவில்லை எனவும் சில புகார்கள், அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சென்றடைந்தன. இக்குறையைப் போக்கும் விதமாக நாளை அவர், தொண்டர்களைச் சந்திக்க உள்ளார்.


    இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை (புதன் கிழமை) பகல் 2 மணியளவில், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை நிலையத்துக்கு வர உள்ளார். அப்போது, அவரிடம் மனு கொடுக்க விரும்பும் தொண்டர்கள், தலைமை நிலையத்துக்கு வந்து, நேரடியாக மனுக்களை கொடுக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொண்டர்களை ஜெயலலிதா பெரிய அளவில் சந்திக்க உள்ளதால், கட்சித் தலைமையகத்தில் நாளை பெருங்கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    .....தினமலர் 08.06.2010

  3. #1191
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்ற 8 பேர் கைது....

    சென்னை, ஜுன்.8 (டிஎன்எஸ்) வெளிநாட்டிற்கு போலி ஆவணங்கள் மூலம் செல்ல முயன்ற எட்டு பேரை சென்னை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் இன்று (ஜுன்.8) கைது செய்தனர்.

    பஞ்சாப்பை சேர்ந்த 8 பேர் மலேசியா செல்வதற்காக இன்று காலை சென்னை வந்தனர். அ;பபோது அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கிளியரன்ஸ் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களது பாஸ்போர்ட்கள் உண்மையானதுதான் என்றும் ஆனால் கிளியரன்ஸ் ஆவணங்கள் மட்டுமே போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சென்னை வழியாக மலேசியா செல்ல முயன்றது ஏன் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (டிஎன்எஸ்)

    ....சென்னை ஆன்லைன் 08.06.2010
    Last edited by nambi; 09-06-2010 at 04:28 AM.

  4. #1192
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    டென்னிஸ் ஆட்டத்திலிருந்து சானியா ஒய்வு பெற முடிவு....

    இங்கிலாந்து: இங்கிலாந்தின் எட்பாஸ்டன் நகரில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகளில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றும் திருமண வாழ்க்கையும் முக்கியமானது என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் நான் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன் என்றும் டென்னிஸ் விளையாட்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் சானியா தெரிவித்துள்ளார்.

    .....தினமலர் 08.06.2010

  5. #1193
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    தொலைக்காட்சி (டிவி) நடிகை மர்மச்சாவு



    சென்னை, ஜூன் 8: ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தொலைக்காட்சி (டிவி) நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த டான்ஸ்மாஸ்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
    .
    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்சரை சாலையில் ஒரு கிளப் உள்ளது. அதன் சார்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்குவதற்கான வசதி கொண்ட பண்ணை வீடும் உள்ளது. இந்த பண்ணை வீட்டில் நேற்று இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வந்து அறை எடுத்து தங்கினார்கள்.

    மாலையில் அந்த இளைஞர் மட்டும் தான் கொண்டு வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பி சென்று விட்டார். அதன் பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் வராததாலும், அவர்கள் தங்கியிருந்த அறை பூட்டியே கிடந்ததாலும் கிளப் நிர்வாகத்துக்கு சந்தேகம் வந்தது.

    ரூம்பாய் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது உள்ளே அந்த இளம்பெண் துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தார். உடனடியாக இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சங்கர லிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் பெயர் சசிரேகா (வயது 20) என்பதும் அவர் வளசரவாக்கத்தில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் என்பதும் அவருடன் வந்து தங்கிய இளைஞர் கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ஷாம் என்கிற குமார்
    (வயது 26) என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் சசிரேகாவுக்கும், டான்ஸ்மாஸ்டரான குமாருக்கும், பழக்கம் ஏற்பட்டு இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்தது விசாரணையில் அம்பலமானது.

    பண்ணை வீட்டில் அறை எடுத்து தங்கிய போது கொடுத்த முகவரிக்கு சென்று டான்ஸ்மாஸ்டர் குமாரை போலீசார் தேடினர். ஆனால் அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    எனவே நடிகையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா? என்பது டான்ஸ்மாஸ்டரை பிடித்து விசாரித்தால் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    இறந்த சசிரேகாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள குண்டூராகும். இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறியுள்ளனர். சசிரேகாவின் மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ....மாலைச்சுடர் 08.06.2010

  6. #1194
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ''சரத்துக்கு தூக்கு'' கோட்டபய மிரட்டல்......



    கோட்டபய ராஜபக்சே

    இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ''அவர் தூக்கிலிடப்படுவார்'' என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

    பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ''தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக'' தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ''ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்'' என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.

    அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ''அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.'' என்று கூறீனார்.

    ஜெனரல் பொன்சேகா அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்று கூறப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் என்பதுடன், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் 40 வீத வாக்கையும் அவர் பெற்றிருக்கிறார். அத்துடன் கடந்த 35 வருடமாக இலங்கையில் எவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    முன்னதாக, இலங்கையில் இறுதிப்போர் நடவடிக்கைகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதையும் தான் நிராகரிப்பதாகவும் கோட்டாபாய அவர்கள் தெரிவித்தார்.

    இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூறுகின்ற போதிலும், இலங்கை இராணுவத்தினர் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
    .........பிபிசி தமிழோசை, தட்ஸ் தமிழ் 08.06.2010

  7. #1195
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ராஜபட்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது......




    சென்னை, ஜூன் 8- இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

    சென்னையில் உள்ள நினைவு அரங்கம் அருகே இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திருமாவளவன் உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ....தினமணி 08.06.2010

  8. #1196
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பழ நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு, டி.ராஜேந்தர், சீமான் உள்ளிட்டோர் கைது

    சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, ,இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

    ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும் அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

    வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

    பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

    இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

    ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.


    திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

    திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

    கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

    நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

    கோவையில் ரயில் மறியல்

    கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

    ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

    தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடந்தது.
    இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.


    புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின் சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

    .....தட்ஸ் தமிழ், வெப்துனியா 08.06.2010

  9. #1197
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு முடிக்கப்படவில்லை - மொய்லி.....

    யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கூறினார்.

    போபால் விஷவாயு கசிவு வழக்கின் தீர்ப்பில் வாரன் ஆன்டர்சன் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் நிருபர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டபோது அவர் அளித்த பதில்:

    இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வாரன் ஆன்டர்சனின் பெயரையும் அதில் சேர்த்திருந்தது.

    சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை நீதிமன்றம்தான் தயாரித்தது.

    வழக்கு நடந்தபோது நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை.

    மேலும் அதற்கு அவர் பதிலும் அளிக்கவில்லை. அவர்தான் வாரன் ஆன்டர்சன். இதையடுத்து அவர் தலைமறைவானவர் மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் அவர் மீதான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார் அவர்.

    .....தினமணி 09.06.2010

  10. #1198
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கோவை செம்மொழி மாநாடு முழு நிகழ்ச்சிகள்: முதல்வர் தகவல்.......

    சென்னை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்படும் பொது அரங்கில், ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.நிகழ்ச்சி நிரல் வருமாறு:மாநாடு, வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்க, சிறப்பு மலரை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிடுகிறார்.

    நிதியமைச்சர் அன்பழகன் தகுதியுரை வழங்குகிறார்.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். விருது பெறும், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, ஜார்ஜ் ஹார்ட், வா.செ.குழந்தைசாமி, சிவதம்பி வாழ்த்திப் பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமை உரையும், கவர்னர் பர்னாலா சிறப்புரையும், ஜனாதிபதி பிரதிபா துவக்க உரையும் ஆற்றுகின்றனர். தலைமைச் செயலர் நன்றி கூறுகிறார்.மாலை 4 மணிக்கு, வ.உ.சி., மைதானத்தில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில், இலக்கியம், கலை, வரலாறு நினைவூட்டும் வகையில் பேரணி துவங்கி, அவினாசி சாலை வழியாக மாநாடு வளாகத்தை அடையும்.வரும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு, லாரன்ஸ் குழுவின் மாற்றுத் திறனாளிகள் கலை நிகழ்ச்சி உட்பட, சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    பகல் 12 மணிக்கு, பொதுக் கண்காட்சியை மத்திய அமைச்சர் அழகிரி திறந்து வைக்கிறார். புத்தகக் கண்காட்சியை, மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைக்கிறார். விருந்தினராக மாலத்தீவு அரசின் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அகமது நசீர் கலந்து கொள்கிறார்.பிற்பகல் 2.30 மணிக்கு, அப்துல் ரகுமான் தலைமையில், "புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவியரங்கம் நடக்கிறது.வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு, "கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்' கவியரங்கம் நடக்கிறது.மாலை 4 மணிக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையில், "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது.

    மறுநாள், 26ம் தேதி, காலை 10 மணிக்கு, கவிஞர் வாலி தலைமையில், கவிஞர் மேத்தா துவக்கி வைக்க, "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்கம் நடக்கிறது.மாலை 4.30 மணிக்கு, சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்டு, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் துவக்கி வைக்கும், "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே! சின்னத் திரைக்கே! அச்சுத் துறைக்கே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.மாநாட்டின் இறுதிநாளான 27ம் தேதி, நடிகர் சிவகுமார் தலைமையில், சுப.வீரபாண்டியன் துவக்கி வைக்க, "வித்தாக விளங்கும் மொழி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.இதில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி வரவேற்க, சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா வெளியிடுகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலை வகிக்க, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகிக்க, மாநாட்டு நிறைவு உரையை முதல்வர் கருணாநிதி ஆற்றுகிறார். தனி அலுவலர் அலாவுதீன் நன்றி கூறுகிறார்.வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆய்வரங்கமும், தமிழ் இணைய மாநாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. தினமும் மாலையில், மாநாட்டு வளாகத்திலும், கொடிசியா அரங்கத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    .....தினமலர் 09.06.2010

  11. #1199
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பலத்த பாதுகாப்பு.....

    வேலூரில் இருந்து, பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய `இ-மெயில்' தகவல் எதிரொலி.....


    சித்தூர், ஜுன்.9-

    வேலூர் மற்றும் சித்தூரில் இருந்து, பாகிஸ்தான் உளவாளி ஒருவர் அனுப்பிய `இ-மெயில்' தகவலைத் தொடர்ந்து, திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    `இ-மெயில்' தகவல்

    பாகிஸ்தானின் `லஸ்கர் இ தொய்பா' அமைப்புடன் தொடர்புடைய புதிய தீவிரவாத அமைப்பான `இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தினர், தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று, மத்திய உளவு அமைப்பு (ஐ.பி.) சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் நகரில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட `இ-மெயில்' தகவல், கர்நாடக மாநிலம் பெங்களூர் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    வேலூரில் இருந்து

    சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்ïட்டர் மையத்தில் இருந்து பாகிஸ்தானின் `ஐ.எஸ்.ஐ.' உளவாளி என்று கருதப்படும் அகமதி என்பவர், பெங்களூர் முகவரி ஒன்றின் மூலம் இந்த தகவலை அனுப்பி இருக்கிறான்.

    இதேபோல், சித்தூருக்கு அருகில் உள்ள தமிழக நகரமான வேலூரில் இருந்தும் பாகிஸ்தானுக்கு `இ-மெயில்' தகவல் அனுப்பி இருந்ததை பெங்களூர் போலீசார் உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தை உஷார் படுத்திய கர்நாடக போலீசார் சித்தூர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு

    பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்ïட்டர் மைய உரிமையாளரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வேலூரில் இருந்து தகவல் அனுப்பப்பட்ட கம்ப்ïட்டர் மைய உரிமையாளரையும் அவர்கள் கைது செய்தனர். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் சித்தூர், வேலூர் இ-மெயில் தகவல்களை தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுலையான் கோவில் மலைப்பாதையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. கர்நாடக போலீசார் சித்தூர் வந்து விசாரணை மேற்கொள்ள சித்தூர் போலீசார் உதவி செய்தனர் என்றாலும், அதுபற்றிய மேல் விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையில், வேலூரில் இருந்து அகமதி அனுப்பிய `இ-மெயில்' தகவலில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் 30 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்ததாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    .....தினத்தந்தி 09.06.2010

  12. #1200
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இலங்கை; பாலியல் புகார் -6 சிப்பாய்கள் கைது

    இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் ரெட்பானா பகுதியில் இரவு வேளை வீடொன்றினுள்ளே புகுந்தவர்கள் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்பப் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

    செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து, வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

    நாடாளுமன்ற அமர்வின்போது இந்தச் சம்பவம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.

    ....பிபிசி தமிழோசை 08.06.2010

Page 100 of 232 FirstFirst ... 50 90 96 97 98 99 100 101 102 103 104 110 150 200 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •