முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாருக்கு இரங்கல் தெரிவிக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாருக்கு இரங்கல் தெரிவிக்கலாம்.
பரஞ்சோதி
உடல்நலமின்றி இருப்பதாய் செய்திகள் அண்மையில்.
எளிய பிறப்பு -- உயர்ந்த பதவி.
எளிமை - நேர்மை - பதவிக்கேற்ற பெருந்தன்மை.
கே.ஆர். நாராயணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தனது வாழ்வின் இறுதி நாட்களில் சமூக நலப் பணிகள் செய்து வந்தவர். ஏழைகட்கு மருத்துவ உதவி சென்று சேர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு தன் நண்பர்களைக் கொண்டு நலத் திட்டங்கள் வகுத்தவர். மிக எளிய வகுப்பைச் சார்ந்து தன் கடும் உழைப்பினால் நாட்டின் முதல் குடிமகன் ஆன முன்னாள் குடியரசுத்தலைவருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
டெல்லி வெடிகுண்டு சதிகார மிருகங்களுக்கு அரபு நாட்டில் இருந்து பண உதவி வந்திருப்பதாக செய்தி.
இந்த வகைக் குற்றவாளிகளுக்கும் வக்காலத்து வாங்க வக்கீல்கள் வருவாங்க -இல்லையா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நேற்றிரவு பீகார் மாநிலம் ஜெகானாபாத் ஜெயிலை நக்சல்பாரிகள் முற்றுகையிட்டுத் தகர்த்தனர்.
சிறைக்கைதிகள் 500 பேர் வரை வன்முறையால் விடுதலை செய்யப் பட்டனர்.
இதில் சிறையில் இருந்த முக்கிய நக்சல் தலைவரும் ஒருவர்.
நாடு முழுவதும் இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 ஆண்டுகளாக கனடாவை ஆண்டு வந்த லிபரல்ஸ் கட்சியை விட முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 11 தொகுதிகளில் அதிக இடங்கள் வென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் கனடாவின் அடுத்த பிரதமர் ஆகிறார்.
நடந்த தேர்தலில் 45 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர் என்பதும் சென்ற ஆட்சியில் இந்திய வம்சாவளியினர் மத்திய அமைச்சர்களாக (கேபினட்) இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. லிபரல்ஸ் கட்சியினர் கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தினரை ஆதரித்து வந்தனர். கன்சர்வேட்டிவ்களின் முடிவு என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
Last edited by mukilan; 24-01-2006 at 06:09 AM.
கன்சர்வேட்டினர் வென்றுள்ளனர். ஆனால் தனித்து ஆட்சி அமைக்க போதுமான பலம் இல்லை. எனவே முக்கியமான விசயங்களில் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றமுடியாது.... பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறது என.
மொத்தம் - 308
கன்சர்வேட்டிவ் - 124 (36.3%)
லிரல்ஸ் - 103 (30.2%)
இதர 3 கட்சிகள் - 81
மைக்கேல் ஹார்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிரஸ்டன் மானிங் தொடங்கிய ரிபாஃர்ம் பார்ட்டி 7 - 8 வருடங்களுக்கு முன்பே கன்சர்வேடிவ் கட்சியைத்தன் கட்சியுடன் இணணக்கும்படி கூறினார். அவர்கள் மறுத்துவந்த்தால் லிபரல் கட்சியை வெல்வதற்கு ஆள் இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஹார்பர் ரிபாஃர்ம் பார்ட்டியின் தலைவராக வந்தபொழுது அவர் எப்படியோ கன்சர்வடிவ் கட்சியை சமரசம்செய்து இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைத்ததலாம், ஆல்பர்டா மட்டுமில்லாமல் கணடாவின் அனைத்து பகுதியிலிருந்தும் இவருக்கு ஆதரவு கிடைத்து லிபரலை தோற்கடித்துவிட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.Originally Posted by அறிஞர்
ஆனால் முழுமையான பலம் இல்லையாதலால் இவரை லிபரல் கட்சி ஆட்சியை சரியாக நடத்தவிடாது கஷ்டப்படுத்தும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்தல் வரும் என்பது நிச்சயம். பார்க்கலாம் ஹார்பர் எப்படி சமாளிக்கிறார் என்று.
ஜான் கிரிஸ்டியானை மட்டமாக பேசிய பெளல் மார்டினால் தனியாக நிமிர்ந்து நிற்கமுடியவில்லை. லிபரல் கட்சிக்கு பெரும் அவமானம்.
ஜெனீவாவில் பேச்சு இரு சாராரும் இணக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று சனிக்கிழமை லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையையொட்டி அன்ரன் பாலசிங்கமும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கமும் இலங்கை வருகை தந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி புதினம்.கொம்
இலங்கை செய்தி தாள்களில்... அரசு பேச்சு வார்த்தை தயாராகி வருவதாக செய்திகள் உள்ளன.... அமைதி திரும்ப பிராத்தனைகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks