Page 229 of 232 FirstFirst ... 129 179 219 225 226 227 228 229 230 231 232 LastLast
Results 2,737 to 2,748 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
 1. #2737
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்  நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

  இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

  கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

  இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.

  இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

 2. #2738
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.


  அப்ப புடிச்ச போட்டோ இல்லியா..?


 3. #2739
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  பாலச்சந்திரன் அண்ணனை கொன்னுட்டாங்க, நாங்க ஏதாச்சும் செய்யனும்.. ஆவேசத்துடன் உறுமிய சேலம் சிறார்கள்
  சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது.

  சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர்.

  அனைவரும் பாலச்சந்திரன் படத்திற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் என முழக்கமிட்டனர். இந்தக் குழந்தைகளை ஒருங்கிணைத்தவர் தமிழமுதன். இவரும் ஒரு சிறுவன்தான். அந்த உணர்ச்சிச் சிறுவன் கூறுகையில் எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

  நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தக்காரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார்.

 4. #2740
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி...

  தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக இதுவரை 22 தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்துள்ளனர்.இது தொடர் கதையாகி வருவது தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

  தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முன்பு ஈழத்தில் மட்டுமே நடந்து வந்தது. இன்று ஈழத்தை சுடுகாடாக்கி விட்டது சிங்களம். இதனால் ஈழத்துக்கான போராட்டத்தை உலகத் தமிழர்கள் கையில் எடுத்துள்ளனர்.

  உலகின் பல பாகங்களிலும் ஈழத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதை அடக்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்கிறது இலங்கை.
  மறுபக்கம் தீக்குளிப்பு,உயிர்த் தியாகங்களும் உலகத் தமிழர்களை உறைய வைத்து வருகிறது. இதுவரை 22 பேர் ஈழத்துக்காக உயிரை ஈந்துள்ளனர்.

 5. #2741
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  முதல் அறிவாளி & தியாகி முத்துக்குமார்  சென்னை சாஸ்திரி பவன் முன் முத்துக்குமார் என்ற இளைஞன் முதன் முதலாக தீக்குளித்து உயிர் நீத்தபோது உலகம் முழுவதும் தமிழர்கள் அதிர்ந்து போனார்கள். முத்துக்குமாரின் உயிர்த் தியாகம் பல தமிழர்களை தீக்குளிப்புப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.

 6. #2742
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  என்னை வைத்து இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்: ராஜபக்சே தகவல்

  கொழும்பு: தன்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
  இலங்கை சுதந்திர கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் செயற்திட்ட கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.

  கூட்டத்தில் அவர் பேசியதாவது,

  பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை. நமக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து நாம் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை.

  இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான நட்புறவு ஒருபோதும் குறையாது. இலங்கை சுதந்திரக் கட்சி பயங்கரவாதத்தை ஒழித்தது. பிளவடைந்த நாட்டை ஒரே தேசமாக ஆக்கியுள்ளோம். பொய் மற்றும் வதந்திகளுக்கு பெரிய அளவில் சக்தி இருப்பது தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் வெல்ல கட்சி என்ற முறையில் எங்களால் முடியும்.

  கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கட்சியின் செயலாளர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக வதந்திகள் பரவியுள்ளன. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றனர் என்றார்.

 7. #2743
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  கோவையில் இருந்து சென்னைக்கு ஸ்கூட்டியில் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

  சென்னை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் கோவையிலிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக சென்னைக்கு வந்தார். ரவுடிகளிடம் மாட்டவிருந்த அவர் போலீஸாரால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  வாழ்க்கை ரொம்ப சின்னது. பெரிது போலத் தோன்றினாலும் எல்லாமே விரல் சுட்டும் நேரத்தில் முடிந்து போய் விடும். இந்த குறுகிய கால வாழ்க்கையில்தான் எத்தனை துயரங்கள், எத்தனை சோகங்கள், எத்தனை சவால்கள்.. எல்லாவற்றையும் சமாளித்து வெல்வதுதானே வாழ்க்கையின் மகா தத்துவம்.

  சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் பெண் சூரியாவின் வாழ்க்கை மிகப் பெரிய சோகமயமானது. சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்து விட்டார். தாயார் சாந்தி மற்றும் 3 சகோதரிகளுடன் வாழ்க்கை. சாந்தி கடுமையாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

  சூர்யா நன்றாகப் படிக்கக் கூடியவர். இதனால் அவரை ஒரு ஹோமில் சேர்த்து படிக்க வைத்தார். சூரியாவும் சூட்டிகையாக படித்தார். பட்டதாரியும் ஆனார். ஆனால் காலத்தின்கோலம் பாருங்கள்.. படித்தும் கூட அவரால் மேலே வர முடியவில்லை. மேலும் தாயாரின் நிலையும் மனதை வருத்தவே அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.

  இதையடுத்து மகளை கோவைக்கு அழைத்து வந்த சாந்தி, அங்கு அவரது பாட்டி வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு விடுவிடுவென தனது வீட்டை விட்டு வெளியேறிய சூர்யா, ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

  நேராக பெட்ரோல் பங்குக்குப் போன அவர் அங்கு புல்லாக வண்டியை நிரப்பிக் கொண்டு நேராக சென்னையை நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை எந்தவித பயமும் இல்லாமல் ஓட்டியே கடந்த அவர் திருவான்மியூர் வந்து சேர்ந்தார்.

  நள்ளிரவு வாக்கில் திருவான்மியூர் வந்த அவரை சிலர் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அப்போது பார்த்து அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் சூர்யாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு விசாரித்தபோதுதான் சூர்யாவின் நிலை தெரிய வந்தது.

  அழகான தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாகப் பேசியுள்ளார் சூர்யா. ஆனால் அவரை பாதித்த மன அழுத்தம்தான் அவரது நிலையைப் பரிதாபமாக்கியுள்ளது. சாந்திக்குத் தகவல் கொடுத்து அவரை வரவழைத்த போலீஸார் பின்னர் அவரிடம் சூர்யாவை ஒப்படைத்தனர். கண்ணீர் மல்கமகளைக் கட்டி அணைத்து அழுத சாந்தி மகளுடன் கோவை கிளம்பிச் சென்றார்.

 8. #2744
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  புனித வியாழனன்று சிறை கைதிகளின் கால்களை கழுவும் போப் பிரான்சிஸ்


  வாடிகன்: புனித வியாழனை முன்னிட்டு வரும் 28ம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறையில் இருக்கும் 12 கைதிகளின் கால்களை கழுவவிருக்கிறார்.

  அன்பு, கருணை ஆகியவற்றை இந்த உலகிற்கு போதித்த இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு பிரானை பின்பற்றும் விதமாக போப் ஆண்டவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

  வழக்கமாக போப் ஆண்டவர்கள் புனித வியாழன் அன்று வாடிகன் தேவாலயத்தில் வைத்து தான் கால் கழுவும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் போப் 16ம் பெனடிக்ட் இந்த வழக்கத்தை மாற்றி ரோம் நகரில் உள்ள கஸல் டெல் மார்மோ சிறைக்கு சென்று அங்கு இருந்த 12 கைதிகளின் கால்களை கழுவினார். இந்நிலையில் அவரது பாணியில் போப் பிரான்சிஸும் அதே கஸல் டெல் மார்மோ சிறைக்கு வரும் 28ம் தேதி அதாவது புனித வியாழன் அன்று மதியம் சென்று அங்குள்ள கைதிகளில் 12 பேரின் கால்களை கழுவவிருக்கிறார்.

 9. #2745
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  பாலியல் பலாத்காரம்: ஆதரவற்றோர் காப்பக நிறுவனருக்கு மரண தண்டனை

  மூளை வளர்ச்சி குன்றிய ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆதரவற்றோர் காப்பக நிறுவனர் ஒருவருக்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

  மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் கலம்போலி எனுமிடத்தில் ராமசந்திர கரஞ்ஜுலே (54) என்பவர் பெண்களுக்காக ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு வசித்து வந்த மூளை வளர்ச்சி குன்றிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கரஞ்ஜுலே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என புதன்கிழமை தீர்ப்பாகியது. வியாழக்கிழமை இவர்களின் தண்டனை அறிவிக்கப்பட்டது.

  பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். அதில் இருவர் ஊமை மற்றும் காது கேளாதோர். இவர்கள் இருவரும் சைகை மூலம் சாட்சியம் அளித்தனர்.

  பெண்களில் ஒருவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பிறகு அவர் உயிரிழந்தார். அதன் காரணமாக முக்கிய குற்றவாளியான ராமசந்திர கரஞ்ஜுலேவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

  ஆதரவற்றோர் காப்பகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சோனாலி படாடே, பொறுப்பாளர் பார்வதி மாவ்லே ஆகிய இரு பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

  இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்றொருவரான காண்டூ கஸ்பே, பிரகாஷ் கட்கே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கஸ்பே தனியாக ஓர் ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்திவருகிறார். கட்கே அதில் ஆசிரியராக உள்ளார்.

  பாலியல் தாக்குதல் நடத்தியதாக நானாபாவ் கரஞ்ஜுலே என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

  ராமசந்திராவுக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி தெரிவித்தது: இவர் சமூகத்துக்கு ஒரு அச்சுறுத்தல். இவருக்கு ஆயுள் சிறை வழங்குவதென்பது குறைவான தண்டனை. இவர் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்.

  தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. சமூக தேவைகளுக்கேற்ப சட்டங்களும் மாற வேண்டும். குற்றங்களை தடுக்க வேண்டுமானால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

 10. #2746
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  கேஜரிவால் போராட்டத்தில் பங்கேற்க ஹசாரே மறுப்பு

  ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க சமூக சேவகர் அண்ணா ஹசாரே மறுத்துவிட்டார்.

  கட்சி ரீதியான அரசியலில் பங்கேற்கத் தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்தார்.

  நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக ஹசாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:÷""அரவிந்த் கேஜரிவால் என்னைச் சந்தித்து, அவர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். நாங்கள் எந்தவொரு கட்சியையும் சார்ந்து செயல்பட மாட்டோம் என்பதையும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். எனவே, மார்ச் 23-ஆம் தேதி கேஜரிவால் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன்'' என்றார்.

 11. #2747
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  சிபிஐ சோதனை ஏற்கத்தக்கதல்ல: நாராயணசாமி


  மத்திய பணியாளர்நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமியிடம், "அரசியல் காரணங்களுக்காக, ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதா?' என செய்தியாளர்கள் கேட்டனர்.

  அதற்கு அவர், "சோதனை நடவடிக்கை மிகவும் துரதிருஷ்டவசமானது. ஸ்டாலின் மீது சிபிஐ எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது சிபிஐ அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரது வீட்டுக்குச் சோதனைக்காகச் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

 12. #2748
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,893
  Downloads
  0
  Uploads
  0
  கடற்படை வீரர்கள் தூக்கிலிட மாட்டோம்: இத்தாலிக்கு மத்திய அரசு உறுதி

  கடற்படை வீரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கமாட்டோம் என்று மத்திய அரசு அளித்த உறுதிமொழியின் பேரில்தான், அவர்களைத் திரும்ப அனுப்ப இத்தாலி ஒப்புக் கொண்டுள்ளது.இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இத்தாலிய கடற்படை வீரர்களை திரும்ப கொண்டு வர எந்த பேரமும் நடக்கவில்லை. கடற்படை வீரர்கள் திரும்ப வருவதற்கு இத்தாலியுடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனக் கூறினார்

Page 229 of 232 FirstFirst ... 129 179 219 225 226 227 228 229 230 231 232 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •