Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 51

Thread: ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்கள&a

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்கள&a

    இந்தியாவில் பிறந்து, ஆங்கில மொழியைக் கற்று அதில் புலமை பெற்று, கவிதை எழுதும் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறேன். தமிழ் மொழியின் பெருமை கூறும் அதே நேரத்து, பிற மொழி இலக்கியங்கள் எங்கு செல்கின்றன, வளமை பெற்றனவா என்றெல்லாம், நாம் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. நம் மொழி இலக்கியங்களுக்கு ஒரு உரை கல்லாகவும், புதிய சிந்தனைகளின் வரவாகவும் அது இருக்கக் கூடும்...........

    முதலில், அருண் கோலாட்கர் என்ற கவிஞர்.............

    1932ஆம் ஆண்டு, மராட்டிய தேசத்தில், கோலாப்பூர் என்ற இடத்தில் பிறந்தவர்...
    பிறந்த ஊரிலும், பின்னர் புனே, மும்பை நகரங்களிலும் கல்வி கற்றவர்.......

    இதோ அவருடைய கவிதைகளில் ஒன்று........
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:42 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    [fade:330d2903f6][u][i]நண்டுகள்............





    பாருங்கள்,

    நன்றாகப் பாருங்கள் -

    நண்டுகள்,

    இரண்டு நிற்கின்றன.



    அவைகள் காத்து நிற்கின்றன.

    யாருக்காக ?

    எல்லாம் உங்களுக்காகத் தான்,

    அல்லாமல், வேறு யாருக்கு?



    பாருங்கள்,

    அவை எப்படிப் பார்க்கின்றன?

    உங்களைத் தான்

    பார்க்கின்றன,

    இயற்கையாக.

    அவைகள் கண்

    இமைத்துப் பார்க்க

    முடியாது - உங்களால்.



    இந்தப் பக்கம் ஒன்று,

    அந்தப் பக்கம் ஒன்று

    என்று இரண்டு பக்கமும்

    நூற்று அறுபது கோணத்தில்

    உங்களுக்கு இடமும், வலமுமாக

    நிற்கின்றன.



    அவைகள்

    உங்கள் கண்களைச்

    சாப்பிடப் போகின்றன.

    பயம்மாக இருக்கிறதா?

    தேவையில்லை -

    உங்களுக்குத் தெரியும்.

    உடனே சாப்பிடாது என்று

    உங்களுக்குத் தெரியும்.



    ஆனால், ஒருநாள் சாப்பிடும் -

    நாளைக்கு? யாருக்குத் தெரியும்?

    நாளை இல்லையென்றால்,

    நாளை மறுநாள்.

    இல்லையென்றால்

    ஒரு பத்து வருடங்கள் கழித்து!

    யாரால் சொல்ல முடியும்?



    அவைகள் அவசரப்படாது.

    நிறைய அவகாசமிருக்கிறது.

    அவைகளால் உணவில்லாமல்

    நீண்ட நாட்கள் வாழ முடியும் என்று

    நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.



    இந்தப் பக்கம் பாருங்கள் -

    சீக்கிரம்,

    தலையைத் திருப்பாதீர்கள்!

    கண்களை மட்டும்

    உருட்டிப் பாருங்கள்.



    அங்கே ஒரு நண்டு தெரிகிறதா?

    புதிதான நண்டு ஒன்று -

    இன்னும் முழுமையடையாமல்,

    தெரிகிறதா?

    அசைவது தெரிகிறதா?



    மீண்டும் பாருங்கள் -

    இல்லை, இல்லை,

    தலையைத் திருப்ப வேண்டாம்.

    கண்களை மட்டும்

    உருட்டிப் பாருங்கள்,

    நான் சொன்னவாறு.



    உங்களுக்குத் தெரிவதெல்லாம்,

    அதன் கொடுக்கு மட்டும் தான்.

    ஆனால், நீங்கள் பார்ப்பீர்கள்,

    முழு நண்டையும்,

    சற்று நேரம் பொறுத்து -

    தெளிவாகப் பார்ப்பீர்கள்.

    அவைகள்

    தங்கள் கடமையைத் தான் செய்கின்றன.

    பொறுமையை

    அவைகளிடமிருந்து தான்

    நீங்கள் கற்று கொள்ள வேண்டும்.



    அந்த நண்டுகள்

    உங்களுக்குச் சொந்தமானவை -

    உங்களுக்கு மட்டுமே!

    வேறு யாரோ ஒருவரின்

    கண்களைச் சாப்பிடாது அவை.



    எங்கிருந்து வந்தன அவை?

    ஆச்சரியமாக இருக்கிறதா -

    உங்கள் தலையிலிருந்து தான்,

    பின் வேறு எங்கிருந்து வரும் -

    உங்கள் பிரத்யேகமான நண்டுகள்?



    எத்தனை அழகாகக் வளர்ந்திருக்கின்றன

    பாருங்கள் அவைகளை -

    பருத்த, பெரிய கொழுத்த நண்டுகள்!

    அவைகள் உங்களுடைய

    பொறுமையுடன்

    விளையாடிக் கொண்டிருக்கின்றன!

    உங்கள் தலையிலிருந்து

    வந்த காலத்திலிருந்தே!



    அவைகள் உங்கள்

    கண்களைப் பார்த்து வரும் -

    எந்த நேரத்திலும்.

    சில சமயங்களில்

    எனக்குத் தோன்றுகிறது -

    உங்களின் அனுமதிக்காக

    அவைகள் காத்திருக்கின்றனவோ என்று!



    உங்களால் செய்வதற்கு ஒன்றுமில்லை -

    வார்த்தை கொடுப்பதைத் தவிர.

    அனுமதி கிடைத்ததும்

    உங்கள் கண்களைச் சாப்பிட்டு

    அவை தம் பணி நிறைவேற்றிப்

    போய்விடும்.



    அந்த நண்டுகளை

    அப்புறம்

    எந்தக் காலத்திலும்

    உங்களால்

    பார்க்கவே முடியாது..........!







    (புரிகிறதா, கவிதை.........?



    மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள்.......



    எழுதுவதற்கு மட்டுமல்ல, வாசிப்பதற்கும் அசாத்தியமான கற்பனைத் திறன் தேவைப்படும். ஆனால், புரிந்ததும் எழும் இன்பம் இருக்கிறதே - விவரிக்க இயலாத, இலக்கிய இன்பத்தையும், கவிதை நயத்தையும் தரக் கூடியது.........)
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:43 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நண்பன்

    உங்கள் பங்களிப்பு மன்றத்தின் பெரும் சக்தியாக

    பெருகிவருவது கண்டு ரொம்ப மகிழ்கிறேன்.

    இந்த முயற்சியை வரவேற்று பாராட்டுகிறேன்.





    (கவிதை அர்த்தம்..._ இருண்மைக் கவிதைகள் என்னைக்கு எனக்கு புரிஞ்சிருக்கு சொல்லுங்க...? நீங்க பொழிப்புரை சொன்னபின்தானே

    குறியீடு விளையாடும் படைப்புகளுக்கு "கருத்து" சொல்ல வருவேன்..



    இங்கே நீண்ட நேரம் யோசித்ததில் ஈகோ, மரணம் என்னென்னவோ

    நண்டாய் தோன்றி மண்டை (மூளை அல்ல :lol: ) குழம்பிவிட்டது நண்பனே!)
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:43 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை ..

    புலனும் , வாக்கும் தவறானால் ..

    யாரையும் அழிக்கும்தானே ...



    தன் வாயால் கெடுவது நுணல் மட்டுமா .. ?

    மனிதனும்தானே ...

    அற்புதம்.. நன்றி...

    நண்பன் அவர்களே ....

    அறிமுகப்படுத்தியமைக்கு ...





    -------------------------



    வலையில் சிக்கிய கோலேட்கரின் இன்னொரு கவிதை .....







    வண்ணத்துப்பூச்சி !!


    பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை ....

    இது நொடிபோல் பிரிந்திருக்கிறது

    தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது ..


    இதற்கு நாளை என்பது இல்லை ..

    தொடர்பில்லை நேற்றுடனும் ..

    இது இன்றுகூட பலபொருள் காட்டி மயக்கும் சிலேடையாய் ...



    சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!

    இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது ..

    தன் இறகுக்குக் கீழேயே ..



    சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய் ..

    திறக்கிறது மூடும்முன்.. திறக்குமுன் மூடுகிறது ..

    அட ..!!


    எங்கே அது ..??
    Last edited by முத்து; 12-05-2005 at 12:37 AM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிகவும் சிறப்பு நண்பா...முத்துவுக்கும் பாராட்டுக்கள்.
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:44 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முத்து அருமை அருமை

    (இருந்தாலும் இந்த அண்ணனுக்கு தனிமடலில் க்ளூ கொடுத்திருக்கலாம்.)
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:44 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அற்புதம், முத்து. என்னுடைய புத்தகத்திலும் அந்த கவிதை இருந்தது. என்றாலும் நண்டு கவிதைகள் தான் என்னை மிகவும் கவர்ந்தது - ஒரு கவிதையைப் படித்ததுமஎ, உடனே அந்த கவிஞரின் மற்ற கவிதைகளையும் தேடி நெட்டில் இறங்கி விட்ட ஆர்வம், சிறப்பானது......



    பட்டாம் பூச்சி கவிதையின் மொழி பெயர்ப்பும் கூட நன்றாக இருக்கிறது - ஆங்கிலத்தில் அந்தக் கவிதையை வாசித்ததினால் தான் சொல்கிறேன்.



    நண்டுகள் என்ற அந்தக் கவிதைக்கு கவிஞர் எந்தக் குறிப்புகளும் கொடுக்கவில்லை. படித்து நாமே விளங்கிக் கொள்ள வேண்டியது தான். இளசு குறிப்பிட்டது போல இது மரணத்தைப் பற்றியது.



    பூச்சாண்டி பயம் காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய சிறு குழந்தையைப் போன்று அறியாமையில் முங்கியிருக்கிறோம். அந்த மாதிரி குழந்தைகள் பயப்படும் பொருளைக் கொண்டு, நம்மைப் பயமுறுத்துகிறார்.



    ஒரே ஒரு நண்டு அல்ல, நமக்கு வயதாக, வயதாக, புதிது புதிதாக நண்டுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அது, ஈகோ, பொறாமை, கோபம், என்று பல வகையான குணங்களும், அந்தக் குணங்க்களால் விளைந்த விளைவுகளையும் குறிக்கிறது. இந்த நண்டுகள் பிறக்கும் பொழுதே நம்முடன் பிறக்க வில்லை. நம் தலையில் இருந்து - அது தானே தலைமைச் செயலகம் - அங்கிருந்து தான் தோன்றுகிறது. கொழுக்கிறது - ஒரு நாள் அது நம்மையே அழித்து ஒழித்து விட்டு அழிந்து விடும் - ஏனென்றால், நம் செயல்களின் விளைவுகள் நம்மைத் தான் அழிக்கும்.



    இந்தக் கவிதையின் சிறப்பு - அதன் எளிமை. நண்டு (நண்டு என்பது symbol of Cancer - புற்று நோயைக் குறிக்கும். உள்ளிருந்து அரித்து, மரணம் விளைவிக்கும்) என்ற ஒரு சிறு குறியீடைத் தவிர, வேறு பிரதானமான குறியீடுகள் எதையும் உபயோகிக்க வில்லை. வார்த்தைகளும் அத்தனை எளிமையானவை - ஆங்கிலத்தில் கூட. கூடிய வரையிலும் அதே எளிமையை அப்படியே மொழிபெயர்ப்பிலும் கூட வைத்திருக்கிறேன்.



    இதில் எல்லோரும், த்ங்களுக்குத் தெரிந்த பிற மொழி கவிதைகளை மொழி பெயர்ப்பின் மூலம், நம்முடைய சிந்தனைகள் - கவிதையின் கருப் பொருள் தேர்ந்தெடுத்தல், கவிதையின் வடிவம், வெளியீட்டு முறைகள், என்று பலவற்றையும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்..............
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:45 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பன் அவர்களுக்கு... நண்பன் கொடுத்த கொலாட்கரின் நண்டுகள் கவிதை நன்றாக இருக்கிறது .. சட்டெனெ அனைவரும் எளிதில் பொருள் விளங்க முடியாதபடி இருப்பதுதான் இதன் பலமும் , பலவீனமும் ..



    அண்ணன் இளசுவின் பதில் சரியாகவே இருக்கிறது . நண்பனின் பதிலும் அருமையாக இருக்கிறது.. மேலும் நண்பன் சொன்னது போல ஆசிரியர் எந்தக் "குளூ"-வும் தரவில்லை.. எனவே யோசித்துப் பார்த்து அவரவர் பொருத்தமாய் விளக்கிக்கொள்ளவேண்டியதுதான் ... மேலும் இதே கவிதைக்கு பல பொருள்கள் இருக்கவும் வாய்ப்புண்டு ... கவிதையைப் படித்தவுடன் எனக்கு என்ன தோன்றியது என்றால் ..



    நன்பன் சொன்னது போலவே நண்டுகள் பல்வென்றும் , அது நம் புலன்கள் குறிப்பாய் , காதுகள் , வாய் , நாக்கு மற்றும் சொற்கள் என்று எண்ணத்தோன்றியது ...





    (............ பார்க்க

    முடியாது - உங்களால்.



    இந்தப் பக்கம் ஒன்று,

    அந்தப் பக்கம் ஒன்று

    என்று இரண்டு பக்கமும்

    நூற்று அறுபது கோணத்தில்

    உங்களுக்கு இடமும், வலமுமாக

    நிற்கின்றன..... )



    இதைப் படித்தவுடன் காதுகள் மிகப்பொருத்தமாய் தோன்றியது ... காதால் பிறரின் சொற்களை , பிறரின் சிறப்பைக் கேட்டுப் பொறாமை கொள்வது , சினம் கொள்வது அல்லது ஏதாவது அரைகுறையாய்க்கேட்டு தவறாய்ப் புரிந்து மதி மயங்கிச் செயல்படுவது .......





    (அங்கே ஒரு நண்டு தெரிகிறதா?

    புதிதான நண்டு ஒன்று -

    இன்னும் முழுமையடையாமல்,

    தெரிகிறதா?

    அசைவது தெரிகிறதா?



    மீண்டும் பாருங்கள் -

    இல்லை, இல்லை,

    தலையைத் திருப்ப வேண்டாம்.

    கண்களை மட்டும்

    உருட்டிப் பாருங்கள்,

    நான் சொன்னவாறு.



    உங்களுக்குத் தெரிவதெல்லாம்,

    அதன் கொடுக்கு மட்டும் தான்.

    ஆனால், நீங்கள் பார்ப்பீர்கள்,

    முழு நண்டையும்,

    சற்று நேரம் பொறுத்து -

    தெளிவாகப் பார்ப்பீர்கள்.



    ( இது படித்தவுடன் நமது வாயைக் குறிப்பதாய் எனக்குத் தோன்றியது ... கொடுக்கு என்று குறிப்பிட்டிருப்பது நமது நாக்கு என்றும் , ஆனால் முழுமையான நண்டு என்பது நமது வாய் , நாக்கு மற்றும் சொல் ஆகியவை சேர்ந்தது .. )



    நாவடக்கம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது போல ஒருவன் என்னதான் பொறுமையாய் இருந்தாலும் , நாமே தவறியோ அல்லது பிறரில் தவறான சொல்கண்டு, அல்லது அவரின் பெருமை , பணம் , புகழ் போன்ற அறிவை , கண்ணை மறைத்து மனிதன் உதிர்க்கும் தவறான சொற்கள் அழிவுக்குக் காரணமாவதைக் குறிப்பிட்டிருக்கலாம் ...



    ஒரு தடவை வெளிப்பட்ட தவறான சொல்லைத் திரும்பவும் அழைக்கமுடியாது என்பதால் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதையே பாடலின் கடைசிப் பகுதில் வலியுறுத்தி இருப்பதாய்த் தோன்றியது ....



    இப்போது திரும்பவும் அதே கவிதையை ஒரு தடவை படிக்க அருமையாக இருக்கும் ....
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:45 AM.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உண்மைதான் முத்து

    படிக்க, படிக்க

    புதுப்புது அர்த்தங்கள்

    பூத்துக்கொண்டே இருந்தால்

    கவிஞன் சுவைஞனை வென்றுவிட்டான்!



    அவர் நல்ல கவிஞர்!

    நண்பனும் நீயும் நல்ல சுவைஞர்!!

    நான் உங்கள் அனைவருக்கும் நல்ல ரசிகன்!!!
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:46 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அருமை, முத்து அவர்களே. ஆம், நம் காதுகள் நம் முகத்தில் 160 கோணத்தில் தான் இருக்கின்றன. அதே போல நாவும், நம் கண்களால் கண்டும், காணாதும் போலத் தான் இருக்கிறது.



    இன்னும் பிறருக்கு, பிறிதொரு கோணத்தில் தோன்றி, வேறு எண்ணங்களும் எழலாம்....



    கவிதையின் இன்பம் இது தான்..............



    மீண்டும், மீண்டும் வாசிக்க, வாசிக்க வேறுபட்ட சுவைகளையும், அனுபவத்தையும் கொடுக்க வேண்டும்......
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:46 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அடுத்த கவிஞர் - அத்திப்பட்டு கிருஷ்ணசுவாமி ராமானுஜன் - A.K. ராமானுஜம். 1929ல், மைசூரில் பிறந்தவர். தமிழும், கன்னடமும் நன்கு அறிந்தவர். இவரின் கூற்றுப் படி, மனிதர்களுக்கு முகமூடி அவசியம் என்றும், அந்த முகமூடிகள் போதுமான அளவிற்கு மனிதர்களிடத்தில் இல்லையென்றும், புதிதாக முமூடி செய்ய வேண்டும் - அது, இயற்கையான முகத்திற்கு எத்தனை பொருந்துமோ, அத்தனை இயல்பானதாக இருக்க வேண்டுமாம். இனி கவிதை...........
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:53 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

    காற்று எனக்காகப் பாடிக்கொண்டிருந்த
    ஒருநாள் நான் பயணம் போய்க் கொண்டிருந்தேன்
    மெக்ஸிகோவிற்குப் போகும் நெடுஞ்சாலை ஒன்றில்.

    அடிபட்டு, நெளிந்து, நைந்து போன
    நீல மஸ்டாங்க் வண்டியொன்று எனக்கு முன்னே,
    அழுக்குப் படிந்த பின் கண்ணாடியுடன்
    விரைந்து கொண்டிருந்தது.

    விரைந்து செல்லும் காரிலிருந்து திடீரென
    அழகிய பெண்ணின் கரம் ஒன்று -
    கடிகாரம் கட்டிய கரம் ஒன்று,
    பலப்பல பொருட்களை
    தூக்கி எறிய ஆரம்பித்தது -
    பின்னோக்கி விரைந்திடும் சாலையின் மீது......

    ஒரு தொப்பி,
    ஒரு அழகிய வெள்ளை காலணி,
    பின்னர் அதன் ஜோடி,
    மடிப்புகள் நிறைந்த பாவாடை,
    எல்லாம் ஒழுங்கற்ற இயக்கத்துடன்
    காற்றில் ஒலியெழுப்பி
    கண்முன்னே பறந்து செல்கிறது -
    மார்புச் சட்டையும் கூட.

    எரிசக்தியை அழுத்தி,
    வண்டியின் வேகம் கூட்டி,
    முந்தைய காரின் பின்னே
    ஐம்பதடி தூரத்தில்
    ஆவலுடன் உற்றுப் பார்க்கிறேன் -
    உபயோகத்தில் பழமையான
    தேய்ந்து போன மார்புக் கச்சை ஒன்று -
    சிறிய மார்புகளுக்கானது,
    விரைந்து போய்
    சாலையோர வேலியில்
    சிக்கிக் கொள்கிறது -
    வேலிக்கு அப்பால்,
    மஞ்சளும், பச்சையுமான
    கோதுமை வயல்கள்.
    வெளிர் மஞ்சள் மார்புக் கச்சையை,
    வேலியில் ஆணியடித்தாற் போன்று
    நிறுத்தி வைக்கிறது,
    வீசியடிக்கும் காற்று....

    வியர்த்துக் கொட்டி,
    இன்னும் வேகமெடுத்து விரட்ட
    உத்தேசத்திருக்கும் வேளையில்,
    அட்டகாசமான சிவப்பில்,
    வெள்ளை நூல் எம்பிராய்டரி கொண்ட
    கீழ் உள்ளாடை,
    நான் அறியுமுன்னே
    விரைந்து வந்து என் பார்வையைத் தாக்க
    நிலைகுலைந்தும், இடம், வலம் தடுமாறியும்,
    அநாதையான அந்தச் சாலையில் விபத்தில்லாமல்
    நிலைக்கு வந்து சேர்ந்த பொழுது,
    காணவில்லை, அந்த உள்ளாடையை.
    காற்றின் வலிய கரங்கள்
    கீழ் உள்ளாடையை மட்டும் நகர்த்தவில்லை -
    என் நாவையும் வரளத்தான் செய்து விட்டது.


    அந்த துகிலுரியும் நங்கையை
    நன்றாகப் பார்த்து விட
    ஆவலும், பரபரப்பும், அதிகரித்தது -
    ஒரு பெண் மட்டும் தானா?
    இல்லை ஆணும் இருக்கிறானா?
    அல்லது பல ஆண்களா?
    அவள் மார்பின் மீது
    அல்லது அவள் தொடையின் மீது
    அவன் கைகள் இருக்குமோ?
    நிச்சயமாக இந்தக் காட்சியைக்
    கண்டே விட வேண்டும் -
    அந்த அழுக்கடைந்த பின்கண்ணாடி உதவாது.

    எரிசக்தி பெடலில் ஏறினின்று மிதிக்க
    விரைந்து சென்று
    அந்தக் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே
    பார்த்த அந்த முழுமையான விநாடியில்,
    அடுத்தவர் அந்தரங்கத்தை நோட்டம் விடும்
    அநாகரீக நரகவாசிகள் மிகுந்த உலகில்
    நானும் ஒருவனாக
    அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியே
    கிடைத்த தரிசனத்தில்
    நான் பார்த்தது ஒரே ஒரு மனிதனைத் தான் -
    நாற்பது வயதிருக்கும் மனிதன்,
    காரின் சக்கரத்தை இயக்கி கொண்டிருந்தான்.

    மூக்குக் கண்ணாடி அணிந்து
    சாலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
    வானொலியில் கால்பந்தைக் கேட்டுக் கொண்டு,
    நிர்ச்சலனமாய்,
    நிதானமாய் போய்க் கொண்டிருந்தான்.

    முந்திச் சென்ற நான்
    பின் வரும் பொருள் காட்டும்
    கண்ணாடி வழியே
    திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன் -
    என் வண்டியை
    நிதானத்துக்குக் கொண்டு வந்தவனாய்.
    பின்னோக்கி செல்லும் மரங்களுக்கிடையில்
    உறுதி செய்து விட்டேன் -
    ஒரு ஆண் தான்.

    ஏமாற்றமுற்ற எனக்குத் தெரியவில்லை -
    என்ன தான் நடந்தது?
    அவன் வீசியெறிந்தவை
    தொப்பியும், காலணிகளும்,
    மார்புக் கச்சையும்,
    கீழாடையும் மட்டும் தானா?
    அல்ல
    அவன் தான் அணிந்திருந்த
    (அணிவிக்கப்பட்ட)
    பெண்ணை தான் தூக்கி எறிந்தானா?

    அல்லது
    நான் தான் தூக்கி எறிகிறேனா?
    முன்னோர்களின் வழக்கத்தையும்
    எனது பழைய முதலீடுகளையும்,
    தூக்கி எறிந்து விட்டு -
    இவ்வுலகின்
    முகவரியற்ற இடங்களில்,
    அம்மண வெறுமையை
    துல்லியமாகப் புணர்ந்து ருசிக்க
    வெறிகொண்டு பாய்ந்து செல்லும்
    நான் தான் அந்த மனிதனா?
    Last edited by Iniyan; 03-05-2005 at 12:53 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •