Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 24 of 24

Thread: துளசி தளம்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    ஒரு வில்லன் ஒரிசாவில் இருக்கும் ஒரு மந்திரவாதியின் உதவியுடன் காஷ்மோரா என்னும் பூதத்தை குழந்தையின் மேல் ஏவுவான். இது கிட்டத்தட்ட நம்மூரு செய்வினை மாதிரி.

    இந்த காஷ்மோரா பூதம் 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் உயிர் பெறும். இந்த பூதம் விழிக்கும் நேரத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சில சிக்கலான விதிமுறைகள் இருக்கும் இந்த பூதத்தினை ஏவ. இதில் ஏதேனும் தவறினால் ஏவினவனுக்கே ஆப்பு அடித்து விடும்.


    அதே நேரம் இன்னோரு வில்லன் அறிவியலைப் பயன்படுத்தி துளசியைக் கொல்ல முயற்சிப்பான்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    குழந்தை துளசியின் தகப்பன் ஸ்ரீதர் ஒரு இன்ஜினியர். ஸ்ரீதரின் குடும்ப டாக்டர், துளசியின் ஒவ்வொரு சுகவீனத்துக்கும் சரியாக ஒரு மருத்துவ காரணம் சொல்லுவார். அதே நேரம் அந்த சுகவீனங்கள் எல்லாமே காஷ்மோரா பூதத்தின் ஏவல் தான் என ஒரு டிராக்கில் ஆசிரியர் கொண்டு செல்வார். கடைசியில் என்ன என்பதை அப்பறமாய் பேசலாம்.

    முதல் பாகத்தில் காஷ்மோரா மற்றும் அறிவியல் பூர்வமான வில்லன்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து குழந்தை துளசி தப்பிப்பாள்.

    அடுத்து 12 வருடங்அள் கழித்து அடுத்த அட்டாக்.

    அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    தான் படித்த படிப்பினால் இந்த செய்வினை பூதம் பிசாசு இவற்றில் நம்பிக்கை இல்லாமலும் அதே நேரம் தனது ஒரே குழந்தை படும் பாட்டினை பார்த்து பரிதவித்தும் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டும் ஸ்ரீதரின் உணர்ச்சிகள், சொட் சொட் என விழும் தண்ணீர் துளிகளால் ஏதோ சோதனை செய்யப் போக அதனால் பாதிப்படைந்து பாதி பைத்தியமாயும், மீதி அதி புத்திசாலி விஞ்ஞானியாயும் திரியும் ஒரு வில்லன், ஆவி பேய் பூதம் என ஒரிசாவில் ஏதோ ஒரு சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கும் மந்திரவாதி, என சூடு பறக்கும்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    அதிலும் பாகம் இரண்டில் எண்டமூரி அறிவியலை துணைக்கு வைத்துக் கொண்டு கலக்குவார் பாருங்கள்.

    இந்திரா சவுந்திரராஜன் கதைகள் நான் படித்திருந்தாலும், துளசி தளம் மற்றும் மீண்டும் துளசி அளவு எந்த திகில் மர்ம கதையும் என்னை பாதித்ததில்லை.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ்
    சந்திரமுகி படத்தில் கூட மாடி அறைக்கு படியில் கால் வைத்ததும் தூசி, துரும்பு எல்லாம் ஆடுகிறது, கால் எடுத்தால் அமைதியாகிறது, கடிகாரம் உடைகிறது, படத்தின் இறுதியில் பேயே இல்லை என்றும் சொல்கிறார், அப்படி என்றால் அந்த சம்பவங்கள் எல்லாம் எப்படி நடைபெற்றன என்பதற்கு விளக்கமே இல்லை.
    எண்டமூரி கதையின் சிறப்பம்சமே விரிவான விளக்கம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் விளக்கம் ஒன்று, அறிவுக்கெட்டாத மாய பேய் பூத பிசாசு விளக்கம் ஒன்று. கதையின் முடிவில் அறிவியலா பேயா என்ற கேள்விக்கான பதிலை படிப்பவர் கற்பனைக்கே விட்டிருப்பார்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    இந்திரா சசுந்திரராசனுடைய கதைகளும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். ஏன்? இப்பொழுது ஆங்கிலத்தில் கலக்கிக் கொண்டு இருக்கும் டாவின்சி கோடு புத்தகமும் கிட்டத்தட்ட அப்படியொரு புத்தகமே. எனக்கும் அப்படியொரு கதை எழுத ஆசையுண்டு.

    அதற்குக் கருவையும் யோசித்து வைத்து விட்டேன். ஊரில் குழந்தைகள் இறந்து போகிறார்கள். அதற்கு ஒரு குழந்தைதான் காரணம். இதுதான் கரு.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    மங்குவதெல்லாம் எவை?
    http://www.tamilmantram.com/vb/showt...7255#post97255
    எழுதுங்க இராகவன். ஆர்வமாய் காத்திருக்கிறேன் படித்து ருசிக்க.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ்
    அண்ணா இது கொஞ்சம் ஓவராக தெரியுது.

    அது சரி, இனியன் சொன்னதை எப்போ பேச போகிறோம்.
    என்ன ஓவரு? சுசாதா சீரங்கத்தப் பத்தி மூச்சுக்கு முவாயிரந் தடவ சொல்றாரு. கி.ரா இன்னமும் கோயில்பட்டி சுத்து வட்டாரத்துக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்காரு. அவங்க அளவுக்கு இல்லைன்னாலும் நானும் ஏதோ நாம் பொறந்த மண்ணுக்கு ஏதாச்சும் செய்யனுமுன்னு பாக்குறேன். கொட்டிக் குடுக்க கோடி இல்ல. அதான் இப்படி.
    அன்புடன்,
    கோ.இராகவன்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இனியன்
    எண்டமூரி கதையின் சிறப்பம்சமே விரிவான விளக்கம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் விளக்கம் ஒன்று, அறிவுக்கெட்டாத மாய பேய் பூத பிசாசு விளக்கம் ஒன்று. கதையின் முடிவில் அறிவியலா பேயா என்ற கேள்விக்கான பதிலை படிப்பவர் கற்பனைக்கே விட்டிருப்பார்.
    எண்டமூரியின் கதைகளை நான் படித்ததில்லை. ஆனால் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இனிமேல் வாய்புகள் கிடைத்தால் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் இனியன்.
    அன்புடன்,
    கோ.இராகவன்

  9. #21
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ரொம்பவே ஆர்வமூட்டும் கதைகள்; இங்கே பதித்து நாங்களும் தெரிந்து கொள்ளச்செய்தமைக்கு நன்றி இனியன்.
    ராகவன் அண்ணாச்சி, சீக்கிரம் உங்க மாயாஜால கதைய ஆரம்பிங்க... கதைக்கருவே அபாரமா குழந்தைகளை வைத்து இருக்கு.
    குழந்தைகளுக்கும் சொல்றா மாதிரி எழுதுங்க...

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    துளசி தளம் புத்தகம் இந்தியாவில் இருந்து வருவதற்காக காத்திருக்கிறேன். வந்ததும் வாரம் ஒரு அத்தியாயமாக தட்டச்சி பதிக்கலாம் என உள்ளேன்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அருமை அருமை
    வாழ்க இனியன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by pradeepkt
    தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி ...
    எனக்கு வர கோவத்துக்கு???

    யாதும் ஊரே யாவரும் கேளிர்னு படிச்சதில்லையா நீங்க? அதுலயும் அந்தக் கால "மதுரை" மாவட்டத்தில இருந்துகிட்டு எப்பப் பாத்தாலும் ஊருப் பெருமை ...
    என்னைப் பாருங்க... மாமனிதர்வாழ் மதுரையின்னாலும் அடக்கி வாசிக்கிறேனில்ல ???

    (அப்பா! இப்பத்தான் நிம்மதியாச்சு)
    யாருவே அது தூத்துக்குடியைப் பத்தி சொல்றது. நாங்க திருநெல்வேலி மாவட்டத்திலதான முதல்ல இருந்தோம். மதுரை மாவட்டத்தில இருந்தோமானு தெரியலையே! எப்படி இருந்தாலும் கட்டபொம்மன், பாரதியார், சிதம்பரனார்னு பல தியாகிங்க உள்ள மாவட்டமய்யா எங்க ஊரு!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •