என்றென்றும் உனக்காக நான்.


அதிகாலையில் பனி சிந்திய
பூ போல நீ வேண்டும்!
அந்த வானத்து நிலாவாக

நீ எனக்கு வேண்டும்!
அந்த ஆழ் கடலில்

வரும் அலை ஓசை போல்
உன் சிரிப்பு வேண்டும்!

இதமான தென்றல் காற்றாக
நீ எனக்கு வேண்டும்!
உன்னை நான் காணும்

வேளையிலே நான்
கவிஞனாக வேண்டும்!
என்றென்றும் உனக்காகவே

நான் உயிர் வாழ வேண்டும்!
என்றென்றும் நீ

எனக்காக வேண்டும்!