Results 1 to 8 of 8

Thread: கூர்ந்து கவனி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    கூர்ந்து கவனி

    மருத்துவக் கல்லூரியில் புதிய ஆண்டு துவக்கம். அனைத்து புது மாணவர்களும் அவர்களது முதல் உடல் கூறு வகுப்பிற்காக பிரேத பரிசோதனை அறையில் குழுமி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் அளவிட முடியாத பதற்றமும், எல்லாம் ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஆர்வமும். பேராசிரியர் வந்து 'வணக்கம் எனதினிய மாணவர்களே! தங்கள் அனைவரையும் இந்த மருத்துவ கல்லூரியின் முதல் உடல் கூற்றாய்வு வகுப்பிற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த பரிசோதனை சாலையில் முதல் பாடம் அருவெறுப்பு ஏதுமின்றி இருக்கப் பழகுவது. ஒரு எடுத்துக் காட்டாக இதோ இங்கே இருக்கும் பிரேதத்தை நான் தொட்டு திருப்பி இதோ உள்ள கெட்ட உடல் திசுவை என் விரலால் தொட்டு.....' என்றபடி தன் ஒரு விரலால் பிரேதத்தை தொட்டு சட்டென தன் கையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த சில மாணவர்களுக்கு அருவெருப்பில் வாந்தியே வந்து விட்டது. 'சரி. எங்கே இப்போது நீங்கள் எல்லாம் இதே போல செய்யுங்கள். பார்க்கலாம்' என்றார். சில மாணவர்கள் தயங்கி நின்றாலும் ஆர்வக் கோளாறினால் ஒரு சிலர் மனதை திடப்படுத்திக் கொண்டு பேராசிரியர் போலவே பிரேதத்தை தொட்டு தங்கள் வாயில் கை வைக்கப் போக, 'நிறுத்துங்கள். உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்கவில்லை. நான் பிரேதத்தை தொட்டது என் ஆட்காட்டி விரலால். ஆனால் வாயில் வைத்துக் கொண்டது என் நடு விரலை....எனவே எப்போதும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள்' என்றார்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    இது எனக்கும் வந்தது - கொஞ்சம் "அசைவமாக"
    அருமை இனியன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    பிரதீப் !

    நீங்கள் படித்தது தான் ஒரிஜினல் வெர்சன். அதை நான் மொழி பெயர்த்த போது நம் தளத்தின் தன்மை கருதி கொஞ்சம் மாற்றி விட்டேன்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அதானே பாத்தேன்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இதுதான் ஒரிசினல் படிச்சப்ப எனக்குத் தோணிச்சு.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    என்னப்பா.... இதை படித்து பல வருடங்கள் ஆனாலும்... சினிமாவில் கூட காட்டி விட்டாலும்...

    இனியன் மூலம் படித்ததில் மகிழ்ச்சியே....

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    என்ன தோணிச்சு ராகவா

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    ஏதோ ஒரு சினிமாவிலும் இப்படிக்காட்டினார்கள்.....
    அப்படீன்னா நம்ம திரைக்கதாசிரியர்களும் இன்டெர்நெட்டில் ஜோக் படிக்கின்றார்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •