Page 1 of 25 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 292

Thread: அதிமேதாவி அம்மாஞ்சி

  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile அதிமேதாவி அம்மாஞ்சி

    நான் கேட்ட படித்த பல மொழி சிரிப்புத் துணுக்குகளை தமிழில் மாற்றி நம்மூர் ஸ்டைலுக்கு நகாசு செய்து அம்மாஞ்சி எனும் கற்பனைக் கதாபாத்திரத்தின் உதவியுடன் வழங்குகிறேன். அம்மாஞ்சிக்கு முன்னோடிகள் யாரு தெரியும்ல?

    நம்ம ஆண்டிப்பண்டாரம், குவாட்டர் கோவிந்து, கோயான் கோபு மற்றும் பாண்டேஜ் பாண்டியன் இவர்கள் தான்.
    Last edited by Iniyan; 15-04-2005 at 10:26 AM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    ஆசிரியர்: கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

    அதிமேதாவி: அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லேன்னு தெரியுது.....
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:40 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    கடந்த இரண்டொரு வருடங்களாக நானும் என் மூளையை கசக்கி வந்தேன். தூக்கமின்மை, போதிய உடற்பயிற்சி இல்லை, அதிக வெயில், வேலை பளு, எல்லாம் என் பரம்பரை வியாதி, அது இது என பல காரணங்கள் கற்பித்து வந்தேன் எனது அதீத சோர்வுக்கு.

    ஆனால் ஆண்டவன் அருளால் கடைசியில் சரியான காரணம் கண்டுபிடித்து விட்டேன். மிக அதிக வேலைப்பளு தான் காரணம்....எப்படியா? ரமணா விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லுறேன். கேட்டுக்கோ...

    இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 273 மில்லியன்.

    இதில் 140 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள்.
    ஆக மிச்சம் 133 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 85 மில்லியன் பள்ளியில்.
    ஆக மிச்சம் 48 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 29 மில்லியன் Federal கவர்மெண்ட் வேலையில்.
    ஆக மிச்சம் 19 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 2.8 மில்லியன் ராணுவத்தில் உலகமெல்லாம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் வேலையில்.
    ஆக மிச்சம் 16.2 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதிலும் மாநிலம், மாகாணம், நகரம், கிராம அலுவல் என்று 14,800,000 பேர் போக
    மிச்சம் 1.4 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதிலயும் மருத்துவமனையிலிருக்கும் 188,000, மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் 1,211,998 பேர் கணக்கு.

    ஆகக் கூடி இருக்குற வேலையெல்லாம் பார்க்க மிச்சம் இருக்குறது நீயும் நானும் தான். இதுலயும் நீ இப்படி கம்ப்யூட்டர்ல உட்க்கார்ந்து வெட்டி பொழுது கழிக்கிறே..............
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:40 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    நம்ம அம்மாஞ்சி பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து கை நிறைய மிட்டாய்களை வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நாலு, ஐந்து, ஆறு என இடைவிடாது நம்மாள் மிட்டாய் தின்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் 'தம்பி, இவ்ளோ மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை. தெரியுமா? இதனால உன் பல்லு கெட்டு போகும். கொழுப்பு ஜாஸ்தியாகும்' என்றார். அதற்கு நம்மாள் 'எங்க தாத்தா 102 வயசு வரைக்கும் இருந்தார். அது உங்களுக்கு தெரியுமா?' என்றான். 'அப்படியா. உங்க தாத்தா தினமும் இவ்ளோ மிட்டாய் சாப்பிட்டாரா என்ன 102 வயசு வரைக்கும் இருக்குறதுக்கு?' என்றார் அந்த பெரியவர். அம்மாஞ்சி 'அதெல்லாம் இல்லை. எங்க தாத்தா தேவையில்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடாம தன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருந்ததால தான் அவ்ளோ நாள் உயிரோட இருந்தார்' என்றான்.
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:40 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    ஒரு ஆமை தன் முதுகில் உள்ள ஓட்டை இழந்து விட்டால் இப்போது அந்த ஆமை நிர்வாணமாய் உள்ளதா இல்லை வீடில்லாமல் உள்ளதா?
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:41 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    விமானங்களில் இருக்கும் 'கருப்பு தகவல் பெட்டி' எப்படிப்பட்ட விபத்திலும் பாதிப்படையாது எனில் ஏன் முழு விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி தயாரிக்கும் பொருளிலேயே தயாரிக்கக் கூடாது?
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:41 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    ஜோசியர்கள் எல்லாம் எதற்கு இன்னும் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்? ஏன் ஒரு பெரிய ஜெயிக்கப் போகும் லாட்டரி நம்பரை ஜோசியத்தால் அறிந்து வாங்கக் கூடாது?
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:41 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    ஒரு விமானம் நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டது. வானில் விமானம் பறாக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமான கேப்டன் குரல் ஒலி பெருக்கியில் கேட்டது. 'நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் இந்த விமானத்தில் உள்ள பயணியர் அனைவரையும் வரவேற்கிறேன். தட்ப வெப்பத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாதால் அமைதியான பிரச்சனைகள் இல்லாத இனிய பயணமாக இருக்கும் இது. எனவே அனைவரும் நிம்மதியாக ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஐயோ.....ஆண்டவா......'

    சற்றே நேர அமைதிக்குப் பின் கேப்டனின் குரல் மீண்டும். 'மன்னிக்கவும். எனது கூக்குரல் உங்களை பயப்படுத்தி இருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் அப்போது பேசிக் கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண் எனக்கு சூடாக காபி கொண்டு வந்தார். அதை தவறுதலாக என் மடியில் கொட்டி விட்டேன். அதனால் தான் என்னையும் அறியாமல் அப்படி கத்தி விட்ட்டேன். என் பேண்ட்டின் முன்புறத்தை இப்போது நீங்கள் பார்க்க வேண்டுமே...பெரிய கறை.....'

    இப்போது பயணிகளில் ஒருவரான நம்ம அம்மாஞ்சி உரக்க 'உங்க பேண்ட் முன்னாடி ஆனது ஒண்னும் பெரிய கறை இல்லை. நீங்க கத்துனதுக்கப்பறம் இப்போ என் பேண்ட்டுல பின்னாடி இருக்குற கறைய நீங்க பாக்கணும்'
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:41 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    AT&T தொலைபேசிக் கம்பெனி பிரசிடெண்ட் ஜான் வால்டர் 9 மாதங்களுக்கு பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கத்திற்காக AT&T தரப்பில் சொல்லப்பட்ட காரணம் - தலைமைப் பதவிக்கு தேவையான கூரறிவு அவருக்கு இல்லை.

    பதவியை விட்டு அவர் செல்லும் போது அவருக்கு வழங்கப்பட்ட மொத்த ஓய்வூதிய தொகை $26 மில்லியன்.

    எனக்கென்னமோ கூரறிவு இல்லாதது வால்டருக்கு அல்ல என்றே தோணுகிறது....
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:41 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையனை அடையாளம் காண ஒரு அடையாள அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.

    கொள்ளையன் சம்பவத்தின் போது முக மூடி போட்டிருந்ததால் குரலை வைத்து அடையாளம் காணும் முயற்சியில், சந்தேகத்திற்குறிய அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து 'எல்லா பணத்தையும் கொடுத்துடுங்க. இல்லேன்னா சுட்டுருவேன்' என்று சொல்லும்படி காவல் துறை கேட்டது. அப்போது வரிசையிலிருந்த ஒருவன் 'நான் ஒண்ணும் அப்படி சொல்லலியே...' என்று ரொம்ப கோபமாய் கத்தினான்.............!!!!!!!!!!!!!!!!
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:42 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    தொலைபேசியில் ரொம்ப ரொம்ப அவசரமாக அம்மாஞ்சி டாக்டரை கூப்பிட்டு பதற்றத்துடன் 'டாக்டர் என் பொண்டாட்டி பிரசவ வேதனைல துடிச்சுகிட்டு இருக்கா. நீங்க உடனே வர முடியுமா?' என்றார். டாக்டர் பதற்றத்தில் இருக்கும் கணவனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் 'இது அவளோட முதல் குழந்தையா?' என்றார். அதற்கு நம்மாளின் பதில் 'இல்ல டாக்டர். நான் அவளோட புருஷன்'. என்றார்
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:38 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    Smile

    அம்மாஞ்சி புத்தம் புதிதாக ஒரு விசைப்படகு வாங்கினார். ஒரு சனிக்கிழமை படகை பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய ஏரியில் சென்று ஓட்டி மகிழலாம் என்று தன் காரின் பின்னால் படகை கட்டி இழுத்து செல்லும் வசதியுள்ள சக்கரம் வைத்த இழுவை படகிலேயே இருந்ததால் படகை காருடன் இணைத்து ஏரிக்கு சென்றார்.

    ஏரியில் அந்த புத்தம் புது விசைப்படகு நகர்வதாகவே தெரியவில்லை. முழு விசை கொடுத்தாலும், இஞ்சின் பெரிதாய் உருமியபடி மெல்ல மெல்ல அசைந்ததே தவிர வேகமாய் போகும் வழியை காணோம். அப்படி இப்படி என்று படாதபாடு பட்டு பக்கத்திலிருக்கும் ஒரு படகுத் துறையிலிருக்கும் ஒரு படகு செப்பனிடுபவனிடம் படகை ஏரியிலேயே இழுத்து போனார் அம்மாஞ்சி. மெக்கானிக் நன்றாக படகை பார்த்தான். ஏதும் பிரச்சனை இருப்பது போலவே தெரியவில்லை. எல்லாம் செவ்வனே இருந்தது. என்ன இது ஏன் படகு போகவே மாட்டேன் என்கிறாது என வியந்தபடி தண்ணீரில் குதித்து படகின் அடிப்புறத்தை பார்க்கப் போன மெக்கானிக் ரொம்ப விரைவாய் மேலே வந்தான் அடக்கமுடியாத சிரிப்போடும், தண்ணீருக்குள் சிரித்து அதனால் வாய் மூக்கிலெல்ல்லாம் தண்ணீர் புரை ஏறி இருமியபடியும்.

    ஒரு வழியாய் அவன் சிரித்து ஓய்ந்த பின் சொன்னது 'சார், உங்க கார் இன்னும் படகோட இணைச்சே இருக்கு சார். ஆனா இப்போ கார் தண்ணிக்குள்ள.....
    Last edited by Iniyan; 14-04-2005 at 05:39 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

Page 1 of 25 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •