Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: கிரிக்கெட் - சிறுகதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0

    கிரிக்கெட் - சிறுகதை

    கிரிக்கெட் - சிறுகதை

    சேப்பாக்கம் மைதானம்.

    இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி. மைதானத்தில் பார்வையாளர்கள் குவியத்தொடங்கி விட்டனர்.

    கசங்கிய காக்கி நிற பள்ளிக்கூட உடுப்புடன் மைதானம் வெளியே நின்றிருந்த முரளிக்கு எப்படியாவது இந்த மேட்சை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அவன் சேரியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில்தான் மைதானம் இருந்தாலும் அவனால் எங்கே காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க முடியும். மைதானம் வாசலில் நின்று உள்ளே நுழையும் கிரிக்கெட் வீரர்களை வேடிக்கை பார்த்துட்டு, வீட்டிற்கு ஓடி கருப்பு வெள்ளை டிவியில் கிரிக்கெட் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

    இன்று எப்போதும் போல மைதானம் வெளியே நின்று வேடிக்கை பார்த்த கொண்டிருந்த போது , இந்திய அணியினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை பார்த்து கையசைத்த முரளிக்கு, தானும் மைதானத்தில் பார்வையாளனாக அமர்ந்து மேட்சை பார்த்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு பெருமூச்சு விட்டான்..

    அப்பொழுது அவனை ஓரமாக நிற்க சொல்லி காவலாளி விரட்ட , அவன் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ஆஸ்திரேலிய அணி உள்ளே நுழைவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.. 'என்னடா காதிலே விழலையா' காவலாளி அவனை பிடித்து தள்ள, அவன் அங்கே கூட்டமாக காக்கி நிற யூனிபார்மில் வந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கில்கிரிஸ்ட் ஸ்பான்சர் செய்யும் காது கேளாதவர் பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் கலந்து அவர்களுடன் மைதானத்திற்குள் நுழைந்தான்..

    ஆட்டம் ஆரம்பித்து சிக்சர்களும், போர்களும் பறக்க முரளியின் ஆனந்த கண்ணீர் அவன் வாய் கிழிய கிளம்பிய ஆரவார சத்தத்தில் கலந்து சென்றது..


    -
    மன்மதன்
    Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 05:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பாராட்டுகள் நண்பா.

    தட்டுங்கள் திறக்கப்படும், ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

    சிறுகதை என்பதால் சிக்கனாக எழுதி விட்டீங்க போல இருக்கிறது.
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:56 PM.
    பரஞ்சோதி


  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு பக்கக் கதை உத்தி..
    நல்ல முயற்சி மன்மதன்.
    இறுதி இன்னும் நச்சென இருந்திருக்கணுமோ???!!!!

    பாராட்டுகள்...
    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:57 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல முயற்சி மம்முதா! நல்ல முடிச்சு. அளவா எழுதிருக்க. பாராட்டுகள். ஒம் மேல நெறய நம்பிக்க இருக்கு. ஒன்னோட கதைகள இன்னோரு தளத்துல எதிர்பாக்குறேன்.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:57 PM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    சந்தடி சாக்குல எவ்வளவு ஏழையா இருந்தாலும் வீட்டில டி.வி. பொட்டி இருக்கும்னு போட்டு விட்டீகளே. உண்மைதான். எது எப்படியோ... இந்த விஷயத்தில இந்தியா ஜொலிக்குது.
    BTW, சிக்ஸ்களும், போர்களும் அடித்தது ஆஸ்திரேலிய காப்டன்தானே?
    நிறைய எழுதுங்கள்!!!
    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:58 PM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு மன்மதன்...அண்ணன் சொன்னது போல ஒரு பக்கக் கதை யுக்தி போன்றே படுகிறது. தொடரும் உங்கள் முயற்சி கண்டு வாழ்த்துகிறேன்.


    ஒன்னோட கதைகள இன்னோரு தளத்துல எதிர்பாக்குறேன்.
    .........????? :?: :cry: :shock:
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:58 PM.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அன்பு மன்மதன்...அண்ணன் சொன்னது போல ஒரு பக்கக் கதை யுக்தி போன்றே படுகிறது. தொடரும் உங்கள் முயற்சி கண்டு வாழ்த்துகிறேன்.


    ஒன்னோட கதைகள இன்னோரு தளத்துல எதிர்பாக்குறேன்.
    .........????? :?: :cry: :shock:
    ஆமாம் பாரதி. மன்மதன் எழுத்து மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. அவர் குமுதம் தனமான கதைகள் நன்றாக எழுதுகிறார். ஆனாலும் உணர்வியல் ஈதியான தளத்தில் கருக்களை எடுத்துக் கொண்டு எழுத முயலவேண்டும் என்பது எனது கருத்து. இதை ஏற்கனவே ஒரு முறை சொல்லிவிட்டேன். நான் சொல்வது சரிதானே!

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:59 PM.

  8. #8
    இனியவர்
    Join Date
    24 Jan 2004
    Posts
    506
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு சிறிய கதையை லாவகமாக கொண்டு சென்று இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்...
    ஆ.... கிரிக்கெட் பார்ப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா...
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:59 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு சிறிய கதையை லாவகமாக கொண்டு சென்று இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்...
    ஆ.... கிரிக்கெட் பார்ப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா...
    ஹீ ஹீ 8) 8)
    அப்படிதானே மன்மதா
    Last edited by அமரன்; 24-05-2008 at 12:59 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான ஆரம்பம் மன்மதன் அவர்களே. நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்களுக்குத் தெரிந்த கிரிக்கெட்டை அழகாக இங்கே கதையில் புகுத்தியிருக்கிறீர்கள்.

    முரளி மாதிரி நிறைய சிறுவர்கள் மாட்ச் நடப்பதை மைதானத்தின் வெளியிலிருந்துதான் பார்க்கின்றனர்.

    நான் சிறு வயதில் மாட்ச் பார்ப்பதற்காக அழுதிருக்கிறேன், அடம் பிடித்திருக்கிறேன். இப்பொழுது சென்னையில் சேப்பாக்கத்தில் நடக்கும் அனைத்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கும் ஒரு பெவிலியன் டிக்கெட் எங்கள் வீடு தேடி வருகிறது, ஆனால் பார்ப்பதற்குத்தான் ஆள் இல்லை. எங்கள் தெருவில் இருக்கும் சிறுவர்கள் சென்று பார்த்து மகிழ்கிறார்கள்.
    Last edited by அமரன்; 24-05-2008 at 01:00 PM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    படித்து கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
    அன்புடன்
    மன்மதன்
    Last edited by அமரன்; 24-05-2008 at 01:01 PM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Originally posted by priyan@Dec 3 2004, 11:24 PM
    ஒரு சிறிய கதையை லாவகமாக கொண்டு சென்று இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்...
    ஆ.... கிரிக்கெட் பார்ப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா...
    ஹீ ஹீ 8) 8)
    அப்படிதானே மன்மதா
    [snapback]92962[/snapback]
    அதுக்காக கூட்டதுல மாட்டி சிக்கிக்காதிங்க..
    அன்புடன்
    மன்மதன்
    Last edited by அமரன்; 24-05-2008 at 01:01 PM.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •