Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 13 to 24 of 63

Thread: சங்கராச்சாரியர் கைது !

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    நண்பர் கூறுவதும் உண்மைதான். ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கையில் எல்லா விவரங்களையும் வெளியே சொல்வது நன்றன்று. அது அந்தச் சாட்சியங்களைக் கலைக்க உதவும். இந்துத்துவா அமைப்புகள் இந்த விஷயத்தில் மதச்சாயம் பூசக்கூடாது. வேறு எந்த மதத்தினர் செய்திருந்தாலும் இது போன்ற நடவடிக்கை சரியாகத்தான் இருக்கும். இது மத விஷயமல்ல. சட்டம் ஒழுங்கு தொடர்பானது. ஆகவே மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய விஷயம்.

    ஒரு நடவடிக்கை எடுக்கும் முன்னம் ஜெயலலிதா பலமுறை சிந்தித்திருப்பார் என்றே கருதுகிறேன். வழக்கு நியாயமாகச் செல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. மேலும் நேற்றைய ஜெயலலிதாவின் சட்டமன்றப் பேச்சும் (அவைக்குறிப்பில் இடம்பெற்றது) அதிர்ச்சியைத் தருகிறது. மற்றொரு கொலைக்கும் திட்டம் தீட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். எதை நம்புவதென்றே தெரியவில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பது ஜெயலலிதாவிற்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியும் சில அரசியல்வாதிகளின் பேட்டியும் நாகரீகமாக இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    அரைமூடித் தேங்காய்ச் சாமியாருக்கு மாரப்பன் முக்தி கொடுத்தது எப்படி? இதோ இப்படி!
    http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92224#92224
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:26 PM.

  2. #14
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இப்பொழுது சூரியபகவானைக் கூட கைது செய்ய
    யோசிக்கிறார்களாம், கன்னிப் பெண்ணனான குந்தி தேவிக்கு
    குழந்தை [கர்ணன்] கொடுத்தற்காக. அதனால் தான்
    மேகங்களின் பின்னால் ஒளிந்து திரிகிறாறாம்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:26 PM.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    1
    Uploads
    0
    சங்கராசாரியார் ஸ்ரீ ஜெயேந்திரர அவர்களை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் உத்தரவு என்று நேற்று இரவு செய்திகளில் அறிந்தேன்.

    உண்மை முழுவதுமாக வெளியாகும் வரை ஒருவரையும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை :(

    அன்புடன்,
    மைதிலி
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:26 PM.

  4. #16
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரத்தை அறிந்த யாரும் அவரது இந்த நடவடிக்கையினால் எந்த சலனமோ அல்லது ஆச்சர்யமோ அடைந்திருக்க மாட்டார்கள். இந்த விஷயம் முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக போடப்பட்டதாக தெரிகிறது.

    பல்வேறு தோல்விகளுக்கு பின்னால் தான் முக்கியத்துவன் அற்று வருகிறோம் எனபதால் தன்னை பற்றி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைக்க அவருக்கு கிடைத்த வழி இதுதான்.

    சில வேளை இந்த வழக்கில் அவர் கூறிய அனைத்தும் பொய் என நிருபணமானாலும் அவரது தைரியம் அனைவராலும் பேசப்படும். அது வே அவருக்கு வெற்றிதான். அதுதான் அவர் இதன் மூலம் எதிர்பார்ப்பதும்.

    ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான். அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

    கருணாநிதி தனது மகனை ( அழகிரி) தா.கிருஷ்ணண் கொலையில் சம்பத்தப்படுத்திய போதும் இதைப்போல வீரம் காட்டியிருந்தால் அவரது உண்மைதன்மையை நாம் பாராட்டியிருக்கலாம்.

    இங்கு தமிழன் முட்டாளாக இருப்பதால்தான் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:26 PM.

  5. #17
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    தஞ்சை தமிழரே உங்கள் உண்மை உணர்ந்த் உணர்வுக்கும்,
    உரைத்த தைரியத்திற்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.

    __________________________
    எண்ணம், சொல், செய்ல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:27 PM.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரத்தை அறிந்த யாரும் அவரது இந்த நடவடிக்கையினால் எந்த சலனமோ அல்லது ஆச்சர்யமோ அடைந்திருக்க மாட்டார்கள்...................
    .....................ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான்.
    உண்மை தான். அவர் எவரையுமே, இரவிலே தான் கைது செய்வார். எல்லோருமே ஏதோ கொடுங்குற்றவாளிகள் போலத் தான் நடத்துவார். கருணாநிதியின் கைது, அரசு ஊழியர் போராட்ட பங்கேற்பாளர்கள்... இப்பொழுது சங்கராச்சாரியார். இது ஜெஜெ-யின் பாணி.


    இந்த விஷயம் முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக போடப்பட்டதாக தெரிகிறது.........
    ...............சில வேளை இந்த வழக்கில் அவர் கூறிய அனைத்தும் பொய் என நிருபணமானாலும் அவரது தைரியம் அனைவராலும் பேசப்படும். அதுவே அவருக்கு வெற்றிதான். அதுதான் அவர் இதன் மூலம் எதிர்பார்ப்பதும்.
    அப்படி ஒரு எண்ணம் ஜெஜெவிற்கு இருக்கும் என்று எண்ணத் தோன்றவில்லை. இந்த வழக்கு, பொய்த்துப் போகும் என்றால், அதற்கு ஜெஜெ கொடுக்க வேண்டிய விலை மிக மிக அதிகம்.

    பொய்யாக இந்த வழக்குப் போகும் பட்சத்தில், ஜெஜெவின் மீது வெறுப்பு ஹிந்துத்வா அமைப்புகளிடமிருந்து மட்டும் வருவதில்லை. எல்லா மூலை முடுக்குகளிலும் இருந்து எழுந்து வரும். நல்லவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ள பாமர மக்களிடமிருந்தும், நடுநிலை விமர்சகர்களிடமிருந்தும் வரும். சங்கராச்சார்யாருக்கே 'harassment' கொடுக்க இந்த அரசு துணிந்தால், சாதாரண மக்களுக்கு எந்த கதி என்ற பயம் மக்கள் மத்தியில் எழத்தான் செய்யும்.

    ஜெஜெ ஆணவம் மிக்கவர் என்றாலும், திடுதிப்பென்று தன் நிலையை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி படைத்தவர் தான். ஆனால், அரசியல் சதுரங்க களத்திலே அந்த உத்தி பயன்படக்கூடும். ஒரு தனி மனிதனையும், மடத்தையும் அது போலவே சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, பின்னர் நிலை மாறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    ஒருவேளை சங்கராச்சாரியர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டாலும், இந்த பிரச்னை ஓயப் போவதில்லை. விடுதலை ஆகிவிட்டால், ஜெஜெ எப்படி அந்த சூழ்நிலையை அணுகுவார்? இப்படியாகத் தான் இருக்கும்:

    [size=12]காஞ்சி சுவாமிகளைக் கைது செய்ததே, அவரைக் காப்பாற்றாத் தான் என்று கூறிவிடுவார். பல பத்திரிக்கைகளும் செய்திகளைத் தங்கள் இஷ்டம் போல திரித்து கூறிக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தன. காஞ்சி நகரில், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடினால், அதனால், காஞ்சி மடத்திற்கே கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும். இத்தகைய இன்னல்களிலிருந்து மடத்தைக் காப்பாற்றவே சங்கராச்சரியாரைக் கைது செய்து சிறையில் வைத்தேன். அவர் பாதுகாப்பும் பொருட்டும், மடத்தின் பாதுகாப்பு பொருட்டும் அவ்வாறு செய்தேன்

    இவ்வாறாக நிலைமையை தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளலாம். ஆனால், அது இந்த வழக்குத் தோற்கும் பொழுது தான்.
    அவ்வாறாகத் தோற்கும் பொழுது, ஜெஜெவிற்கு, இந்த சால்ஜாப்பு மட்டும் போதாது. உட்னே எதிர்க்கட்சிகள் அடுத்த கட்ட போராட்டத்தை ஆரம்பிக்கும். கோயிலுக்குள் நடந்த சங்கரராமனின் படுகொலையை நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி. வெறும் கூலிப் படை ஆட்களைக் காட்டி, சங்கரராமனின் கொலையை மூடி மறைத்து விட முடியாது. கூலிப்படைகளின் எஜமானன் யார் என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

    இந்த சிக்கல்களையெல்லாம், ஜெஜெ நிச்சயம் சிந்தித்திருப்பார். இவ்வளவு இன்னல்களை அனுபவித்து தன் முக்கியத்துவத்தை அதிகரிக்க, காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய நிச்சயமாக துணிந்திருக்க மாட்டார். தன்னால், இந்த வழக்கை வெற்றியடைய முடியும் என்ற நிச்சயமான அணுகுமுறையினால் மட்டுமே அவர் இந்த காரியத்திற்கு துணிந்திருக்க முடியும்.


    பல்வேறு தோல்விகளுக்கு பின்னால் தன் முக்கியத்துவம் அற்று வருகிறோம் எனபதால் தன்னை பற்றி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைக்க அவருக்கு கிடைத்த வழி இதுதான்.
    [size=18]இதற்கு முன்னால் மடத்து ஊழியர் ஒருவரை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது - அந்த கூலிப்படையும் இதே கூலிப்படையினர் தான் என்பதும் விசாரணையில் இருக்கிறது. மற்றொரு தகவலாக, இன்னொரு ஊழியரும் கொலைப்பட்டியலில் இருந்திருக்கிறார் என்றும் தகவல் சொல்லியிருக்கிறார். சங்கராச்சாரியார் கைது மட்டுமே பரபரப்புக்குப் போதுமென்னும் பொழுது, முன்பின் நடக்க இருக்கும் கொலைகளைப் பற்றி பேச வேண்டிய தேவையில்லையே?

    அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
    பெண்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்று விளங்கவில்லை. முதலில் அவர்களைப் பெண் என்று ஏன் பார்க்கிறீர்கள். அவர்கள் அரசியல்வாதிகள். பல ஆண்கள் நிற்கும் அரசியல் களத்திலே அவர்களும் நிற்கிறார்கள். அங்கு விளையாடப்படுவது அரசியல் ஆட்டம். அந்த ஆட்டத்தின் விதிகள் தான் அங்கு நிகழும் விளைவுகளை சித்தரிக்கின்றனவே தவிர, ஆண், பெண் என்ற பாகுபாட்டினாலில்லை. மிக மிக கடினமான போட்டிகள் நிறைந்த அரசியல் உலகில், அவர்கள் தங்கள் (பெண்கள் என்ற )பலவீனங்களைக் காட்டிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அரசியல்வாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஆண் பெண் என்ற பால் மூலம் பூசுவது தேவையில்லை. பெண் விடுதலையைப் பற்றி விழிப்புணர்வுககள் கூடிக் கொண்டே போகும் இக்காலத்தில், பெண்ணை இன்னமும் தன் அடிமையாகப் பார்ப்பது தேவையற்றதாகும்.

    கருணாநிதி தனது மகனை ( அழகிரி) தா.கிருஷ்ணண் கொலையில் சம்பத்தப்படுத்திய போதும் இதைப்போல வீரம் காட்டியிருந்தால் அவரது உண்மைத் தன்மையை நாம் பாராட்டியிருக்கலாம்.
    கருணாநிதியின் மகன் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுவிட்டார் - கொலைக்குற்றத்திற்காக. ஆனால், சங்கரராமனின் கொலை வழக்கில் கைது ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நிக்ழவில்லை. இப்பொழுது கருணாநிதி மட்டுமல்ல - எல்லோருமே சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பார்கள். தேவையில்லாமல், இதை இந்துத்வா - திராவிடம் என்ற பாதையில் திருப்பி விட முயற்சிகள் நடக்கின்றன. அரசியல் சூழல்களில் கொலைகள் எப்பவுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அதனால் பெரிய அளவில் அதிர்ச்சியடையப் போவதில்லை. இன்னமும் சொல்லப்போனால், அவர்கள் தங்களை மாவீரகள் என்று கூறிக் கொள்வார்கள். (குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி.) ஆனால், மடாதிபதிகள், ஆன்மீகவாதிகள் தங்களை அப்படி கூறிக் கொள்ள முடியாது. சந்தேகம் என்ற நிலையில் கூட அவர்கள் தங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ள கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். இப்படி இருக்கும் பொழுது, உங்களுடைய மேற்கண்ட வாதத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கருணாநிதியைப் பழிப்பது என்பது மட்டுமே சாத்தியம். அதனால், காஞ்சி சங்கராச்சாரியாரின் தூய்மை நிரூபணம் ஆகிவிடாது. இனி அவருக்கு இருக்கும் ஒரே வழி - நீதி மன்றத்தில் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பது தான். அவ்வாறு நிரூபித்தால் மட்டும் போதாது - தன் முன்னால் ஊழியரின் கொலையாளிகளையும் - அவர்கள் மடத்தினுள் இருக்கும் பட்சத்தில், இனம் கண்டு, நீதித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், அவர் விடுவிக்கப்பட்டாலும், மக்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும் - மடத்தின் மீது. மடத்திலிருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாவதும், கொலையாவதும் ஒன்றும் சாதாரண செயல் அல்ல.

    இங்கு தமிழன் முட்டாளாக இருப்பதால்தான் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.
    ஆமாம் - ஆர்யம் என்ற மாயையை விலக்கி சிந்திக்க முடியாதவனாகக் கிடந்தான். பின்னர் - திராவிடம் என்ற நம்பிக்கையில் கனவு கண்டு கிடந்தான். இவற்றிலிருந்தெல்லாம் என்று விடுபட்டு, '[u][b]நான் தமிழன் மட்டுமே. என் இனம், மொழி இவைகளைக் காத்து வாழச் செய்த பின்னரே, நான் பிறவற்றைப் பற்றி எண்ண இயலும்' என்று சுய உணர்வு கொள்கிறானோ, அன்று தான் விடிவு காலம் வரும் என்றே சொல்லத் தோன்றுகிறது. கருணாநிதி, ஜெஜெ என்பவர் போன்ற சக்கரவர்த்திகளும், மகாராணிகளும் அன்று காணாமல் போய்விடுவர். அந்த விழிப்புக் காலத்தில், முதல்வர் கூட நம் தோழராக இருக்கக் கூடும்......

    [b][u]இந்த விடிவுகாலத்திற்கான சேவல்கள் இன்று தமிழ்கத்தில் கூவத்தொடங்கி விட்டன என்றே தோன்றுகிறது இன்று பலரும் அதைக் கேட்கின்றனர். பலருக்கு அது உற்சாகத்தைத் தருகிறது. சிலருக்கு நடுக்கத்தைத் தருகிறது. ஆனாலும் வெகுசீக்கிரமே, தமிழ் எழுச்சியின் அடுத்த கட்ட பயணம் வேகம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் சிறிது காலத்தில், திராவிட கட்சிகள் நொடித்துப் போகும். தலைமையற்றுப் போகும். அப்பொழுது மக்கள் இந்த தமிழ் விழிப்புணர்ச்சியின் மீது முழுகவனமும் தருவார்கள்.

    அன்று தமிழ் வெல்லும்.....
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:27 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் suma's Avatar
    Join Date
    02 Apr 2003
    Location
    Toronto
    Posts
    2,102
    Post Thanks / Like
    iCash Credits
    8,945
    Downloads
    0
    Uploads
    0
    இப்பொழுது சூரியபகவானைக் கூட கைது செய்ய
    யோசிக்கிறார்களாம், கன்னிப் பெண்ணனான குந்தி தேவிக்கு
    குழந்தை [கர்ணன்] கொடுத்தற்காக. அதனால் தான்
    மேகங்களின் பின்னால் ஒளிந்து திரிகிறாறாம்.
    :lol: :lol: :lol:
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:27 PM.

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    ஜெயலலிதா அவர்கள் எந்த விஷயத்தையும் சாத்விகமான முறையுல் அணுகியதே கிடையாது. எதிலும் ஒரு போர்க்குணம்தான். அதேதான் இங்கும். இந்திய அரசியலில் உள்ள திருமணமாகாத பெண்கள் ( ஜெயா, மாயா, உமா & மமதா) அனைவருமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
    வணக்கம் தஞ்சைத் தமிழன்! திருமணமாகாத பெண்களைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டாம். அது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. பொதுவாகவே அரசியலில் எல்லாருமே அசிங்கம்தான் செய்கிறார்கள். பெண்கள் குறைவான அளவில் இருப்பதால் அது தெளிவாகத் தெரிகிறது. எல்லா அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகளே! என்ன நினைத்து ஜெயலலிதா இந்தக் கைதைச் செய்தாரோ! நமக்குத் தெரியாது. அரசியல் லாபமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனாலும் நடப்பவைகளை வைத்துப் பார்க்கையில் கைது நடவடிக்கை சரியென்றே தோன்றுகிறது. ஜெயலலிதா செய்வதால் கைது நடவடிக்கை தவறாகி விடாது. எனக்கும் ஜெயலலிதாவின் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு சரி அல்லது தவறு என்றே விவாதிக்க வேண்டும். அதை விடுத்து இந்தக் கைதை செயல்படுத்த ஜெயலலிதாவிற்கு என்ன அருகதை உண்டு என்று விவாதிப்பது முறையாகாது.

    நண்பர் சொன்னது போல, ஆரிய, திராவிட மாயைகள் எல்லாம் நீங்கி, மதங்களையும் தாண்டி தமிழ் உணர்வு பரவ வேண்டும். இன்றைக்கு அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக ஆசைப்படுவது நன்றே.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:27 PM.

  9. #21
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    நண்பண் மற்றும் கோ.ரா அவர்களுக்கு,

    எனக்கு பெண்களை பற்றிய எந்தவிதமான வெறுப்பும் கிடையாது. பெண்களை மேலானவர்களாகவும், அன்புடையவர்களாகவும், கருணையுள்ளவர்களாகவும் நினைப்பதால்தான் அவர்களில் சிலரது செயல்கள் நம்மை இப்படி யோசிக்க வைக்கிறது.

    ஆடு, கோழி பலியிடலாம்,
    கூடாது.

    மதம் மாறக்கூடாது.
    மாறலாம்.

    அரசு ஊழியர்களை சிறையில் அடைத்து பழிவாங்குதல்.
    அவர்களுக்கு தடாலடியாக சலுகைகள்.

    இப்படி எந்தவித ஜனநாயக உணர்வில்லாத நடவடிக்கைகளை எப்படி நாம் புரிந்து கொள்வது.

    மேலே சொன்னதெல்லாம் இந்த தலைப்புக்கு தேவையற்றது.

    இப்படி ஒரு மததலைவரை கைது செய்ய வேறுவழிகளை பயன்படுத்தியிருக்கலாம்.

    கைது வாரண்ட்டை பெற்று அவரை கைது செய்ய போயிருந்தால், அவர் தனது பதவியை விட்டு விலக சமயம் கொடுத்திருக்கலாம். இதன் மூலம் ஒரு சமயத் தலைவர் கைது என்பதிலிருந்து ஒரு தனி மனிதன் கைது என்பதாக மாற்றியிருக்கலாம்.

    அவர் வேறு நாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார் என கூறுவதெல்லாம் கற்பனைதான் என்பதாக நான் நினைக்கிறேன்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:28 PM.

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் rajeshkrv's Avatar
    Join Date
    05 Aug 2003
    Location
    Texas
    Posts
    1,208
    Post Thanks / Like
    iCash Credits
    21,893
    Downloads
    0
    Uploads
    0
    z பிரிவு பாதுகாப்பு உள்ளவர் தப்பி ஓடுவர் என்று கூறுவது அபத்தம்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:28 PM.
    இசையரசி பற்றிய BLOG
    http://isaiarasi.blogspot.com/

    இன்றைய பாடல் " தங்கரதம் வந்தது வீதியிலே"
    http://www.tamilmantram.com/vb/showt...t=17730&page=8

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    உண்மைதான் ராஜேஷ். Z பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்கள் பாத்ரூம் போவதென்றாலும் பாதுகாவலர்களிடம் அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். அதனால்தான் சங்கராச்சாரியாரின் கைது முறையிலும் நேரத்திலும் தவறெனக் கூறி பல அமைப்புகளும் போராடுகின்றன.
    இதன் இன்னொரு முகத்தையும் பார்ப்போம்.
    தமிழ் நாட்டை விட்டுவிடுவோம், மக்கள் இங்கே மிகவும் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். பாபர் மசூதி இடிப்பின் போது நாடே கொந்தளித்துக் கிடந்த போதும் தமிழகத்தில் பாதிப்புகள் மிக மிகக் குறைவு. (அதற்கு அன்றைய ஜெயலலிதா அரசின் கண்டிப்பையும் கூறத்தான் வேண்டும்)
    ஏன் நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்பை மக்கள் காட்டவில்லை என்பதும் ஒரு நியாயமான கேள்விதான். இதற்கு சகிப்புத்தன்மை, மடாதிபதிகளின் மீது நம்பிக்கையின்மை என்று பல காரணங்கள் இருக்கலாம். மத அமைப்புகளின் மீதே மக்களின் நம்பிக்கைகள் குறைந்து கொண்டு வருகின்றன.
    தஞ்சைத்தமிழன் சொல்வதைப்போல் கைது முறை சரியாயில்லாததால் இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு அவல் கிடைத்தது போலாகிவிட்டது. சில பத்திரிகைகளில் சின்ன சாமியார் விஜயேந்திரரையும் பற்றி ஏடாகூடமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
    மக்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பார்க்கப் போகிறார்கள்!

    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:28 PM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    காத்திருப்போம் சந்தேக மேகங்கள் கலையும்வரை
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:28 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •