Results 1 to 4 of 4

Thread: வெகுமதி...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    வெகுமதி...

    சட்டசபைகளை
    விளையட்டு மைதானங்களாக்கும்..
    மக்கள் பணத்தை
    தன் பணமாய் பாவிக்கும்..
    நீதிபதிகளை
    மாற்றிப்பார்க்கும்..
    வழக்குகளை
    உடைத்துப்பார்க்கும்..
    எதிர்ப்பவர் வீட்டிற்கு
    தானியங்கி மூவுருளி அனுப்பும்..

    லஞ்சம் வாங்குவதை
    புண்ணியமாய் பாவிக்கும்..
    வழக்கு வந்தால்
    நீதிமன்றம் போய் திரும்புகையில்
    வெற்றிக் களிப்பில்
    பத்திரிக்கைக்கு
    சிரித்தபடி காட்சியும் அளிக்கும்..

    போராட்டத்திற்கு
    பொதுச்சொத்து பேருந்தை
    கொளுத்தச்சொல்லும்..

    சந்தர்ப்பம் கிடைத்தால்
    சிக்கியவனை தீயும்
    குளிக்க வைத்து
    தியாகியும் ஆக்கும்..

    பொழுதுபோகாமல்
    அவ்வப்பொழுது
    மத்திய சபையையும்
    மாற்றிப்பார்க்கும்..

    நேர்மை அதிகாரியை
    ராஜஸ்தானுக்கு
    மாற்றும்..

    இவர்கள் சொத்தை
    எடுத்துக் கொடுத்தாலே
    உலகவங்கி கடன் அடையும்..

    இத்தனை
    சாதனைகளுக்குச்
    சொந்தக்காரர்களுக்கு
    என்ன வெகுமதி
    கொடுக்கப்போகிறோம் நாம்?

    நான் ஹமுரபியாயிருந்தால்
    என் வெகுமதி வேறாயிருக்கும்..
    வக்கத்த வாக்காளன்..
    என் ஓட்டை நானே போட
    முடியாதபடி வேறொருவன்
    களவாடிய பிறகு
    வேறு என்ன செய்ய?
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:48 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அருமை ராம், அருமையாய் சொன்னாய்
    பாராட்டுகள்

    நீதிபதி கேள்வி கேட்டால்
    பதிலாய் அடுக்குதும்மல்
    படத்திலே அழகு காட்டி
    வாழ்க்கையில் நடிப்புச் செம்மல்

    கூட வந்த பொறப்பு கொறச்சலா
    ஓடிவந்து நீதிமன்ற வாசலிலே
    " மூச்சு பேச்சில்லாம " படுத்துக்கும்
    குளுகோஸ¥ ஊசி கூட ஏத்திக்கும்

    தலையெழுத்து ஏதோ ஒண்ணு போட்டாச்சு - தன்
    கையெழுத்தே தனதில்லன்னு ஆயாச்சு
    அறிவுஜீவி புலம்பல் எல்லாம் வெறும் பேச்சு
    உருட்டுதடி, பணம் இதுதான் என் பேச்சு
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:48 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ம்ஹ¥ம்........பெருமூச்சுதான் விடமுடிகிறது.
    அறிவிலிகள் .... வாக்களித்தவர்கள்
    அறிவிலிகள் .... ஆள்பவர்கள்
    அறிவிலிகள் .... சும்மா இருக்கும் மத்திய அரசு.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:48 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நாடே இப்படியென்றால் நாமெங்கே போவது?!!!
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:49 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •