Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 1

                  
   
   
 1. #1
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0

  பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 1

  பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும்


  மாலையில் வழக்கம் போல் கோழிக்கோடு நாயர் நடத்தும் மதுரை முனியாண்டி விலாஸ் முன்பு சேரன், பரம்ஸ், பூ, மன்மதன் அனைவரும் கூடினார்கள்.

  ஓரமா போட்டியிருந்த பெஞ்சில் பெருசுங்க உட்கார்ந்து ஊர் வம்பு அடித்துக் கொண்டிருந்தாங்க. :idea:  சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தலை நடந்து வந்தார், முகத்தில் உற்சாகமில்லை. :cry:

  தலை உற்சாகம் இல்லாமல் வந்தால் கீழ் கண்ட காரணங்களாகத் தான் இருக்கும் :!:

  1) இணைய இணைப்பு கிடைக்காமல் தமிழ் மன்றம் போயிருக்க முடியாது. :cry:

  2) அப்படியே போனாலும் ஆராய்ச்சி புகழ் அறிஞரும், ஸ்பெல்லிங் குயின் மைதிலியும் வந்திருக்கமாட்டாங்க. :evil:

  3) கஷ்டமான புதிர் என்று போட்டதை பரம்ஸ் கும்சாவா உடனே சரியான பதில் சொன்னது. :twisted:

  4) அந்த வாரம் முழுவதும் வேலை நிமித்த பயணம் ஏதுவும் இருந்திருக்காது. :oops:

  பரம்ஸ்: வாங்க தலை, உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். (மனசுக்குள்ளே அப்பாடா, டீ காசு கொடுக்க தலை வந்தாச்சு)

  சேரன்: ஏம்பா நாயரே! சூடா 5 பால் டீ போடு. இம்மாம் நேரம் குந்திகின்னு இருக்கிறது. 8)

  டீ கடை நாயர்: சூடா வெள்ளம், இல்லை அது கூட கிடையாது. :twisted:

  தலை : ஏம்பா? :?:

  டீ கடை நாயர்: சாரே! ஒரு மாசமா குடிச்ச டீ கணக்கு 498 ரூபாய் சாரே. :idea:

  சேரன்: ரவுண்ட் பிகர் ஆகட்டும், அப்புறமா கொடுக்கலாம்னு இருந்தேன் தலை. :wink:

  மன்மதன்: நாயரே! ஒரு போண்டா கொடு, பிகரு ரவுண்ட் ஆகிடும். :idea:

  சேரன்: மவனே, உன்னை ரவுண்டு கட்டி அடிச்சா, உன் பிகரு சேப்பு மாறிடும். :twisted:

  நாயர்: இ கணக்கை சரி செய்யுங்க சாரே! :x

  பூ: அடப்பாவி, டீயில் கிடந்த ஈக்கு கூட கணக்கு இருக்கா? :idea:

  பரமஸ்: பூ, அது ஈ கணக்கு இல்லை, இந்த கணக்கு, ஞ்நானு மலையாளம் கொரச்சு கொரச்சு :lol: சம்சாரிக்கும்.

  தலை: சரி சரி! பிரச்சனையை விடுங்க. நானே ... :cry:

  சேரன்: தலை, அப்போ நீங்க காசை கட்டிவிடுவீங்களா? தங்கமான மனசு, தலைன்னா தலை தான். :idea:

  தலை : ??????? நானே நொந்து நூலாகி வந்திருக்கேன். :oops:

  உடனே, அனைவரும் "கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி" என்ற செய்தியை கேட்டு அதிர்ந்தது போல் அதிர் ச்சி அடைந்தார்கள். :roll: :x :shock:

  மன்மதன்: என்னாச்சி தலை, நீங்க ஏன் சோகமாயிட்டீங்க? :x

  பூ: தலை, மாமி ஏதாச்சும் சொன்னாங்களா? :?

  சேரன்: அதான் தினமும் நடக்கிற கதை தானே. :lol:

  பரம்ஸ்: சும்மா இருங்கப்பா, தலை, சொல்லுங்க தலை.

  தலை: அது ஒன்னும் இல்லைப்பா, கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது தான் பிரச்சனை. :?:

  மன்மதன்: தலை உங்க கணக்கே தப்பா? (மனசுக்குள் குஷி, தலை, எத்தனை வாட்டி நான் சொன்ன கணக்கு விடையை தப்பு என்று சொல்லியிருக்கீங்க) :idea:

  தலை: நீ கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் வேலையில் சேர்ந்தது முதல் இது வரை வேலை நிமித்தம் காரணமாக சென்ற நாட்கள், நான் ஆபிஸில் இருந்து வேலை செய்த நாட்களை 3 மடங்கு அதிகமாம். அரசாங்க விடுமுறை நாட்களை விட 6 மடங்கு அதிகமாம், 2 1/2 மடங்கு எங்க பாஸ் ஆபிஸ்க்கு வந்ததை விட அதிகமாம்.

  பரம்ஸ்: அய் ஜாலி, தலை நான் பேப்பர், பென்சில் இல்லாம நீங்க எத்தனை நாட்கள் ஊர் சுத்தினீங்கன்னு சொல்லட்டுமா? :idea:

  சேரன்: ஏலே பரம்ஸ், நீ வேற, தலை என்னது இது, உங்க புதிர் திறமையை காட்டும் நேரமா இது, என்னாச்சு சொல்லுங்க. :twisted:

  தலை: அதான் சொல்லுறேன்ன, நான் சுற்று பயணத்தில் செய்த செலவு, எங்க கம்பெனி லாபத்தில் 35%, சென்ற ஆண்டு சுற்று பயண செலவை விட 11.5% மடங்கு அதிகமாம்.

  பூ: சே! தலையை திருப்பவே, மன்னிக்கவும் திருத்தவே முடியாது. :shock:

  தலை: எல்லாம் கூட்டி கணக்கு பார்த்து, என் கணக்கை முடித்து விட்டாங்க. :cry:

  மன்மதன்: தலை செட்டில்மெண்ட் பணம் வந்திருக்குமே, ஜாலியா கோவா போவோமா. :lol:

  பூ: ஆகா,என்னமா ஐடியா. டெஸ்ட் போட்டி வேற நடக்குது, 5 நாள் ஜாலியா இருந்து, பெரிய கட்டுரையே கொடுத்திடலாம். :P

  பரம்ஸ்: ஏம்பா, வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க, நொந்த இதயத்தை வேலை வைத்து நோண்டி எடுக்கிறீங்க. :oops:

  சேரன்: பரம்ஸ் இனிமே பழமொழியில் கூட வேலை பற்றி பேசவேண்டாம், பாவம் தலை. :oops:

  தலை: அ(ட)ப்பாவிங்களா (உபயம்: இராகவன்). :twisted:

  பூ: தலை அப்புறம் என்னாச்சு, மாமிக்கு தெரியுமா?

  தலை: மாமிக்கு தெரியுமாவா? என் சீட்டை கிழிக்கும் முன்பே, அவளை வரச் சொல்லி, என் செட்டில்மெண்டை கொடுத்துட்டாங்க. வாங்கின கையோடு திருச்சி போயிட்டா.

  டீ கொண்டு வந்த நாயர்: மாமி திருச்சி வருமா? :?:

  மன்மதன்: யோவ் நாயரு, இப்போ தான் தலை திருச்சி போயிருக்காங்க, என்று சொல்லுறாரு. காது கேக்கலை. :twisted:

  சேரன்: மவனே! அவர் கேட்டது மாமி திரும்பி வருவார்களா? நாயர் கவலை நாயருக்கு.

  நாயர்: நானு சம்சாரிக்கதை கிண்டல் செய்ய வேண்டாம், சம்பாதித்து காசை கொடுங்க. :evil:

  மன்மதன்: தலை, பெத்த அவமானம், உடனே ஒரு 100 ஆட்டோவை உங்க கம்பெனி முன்னால் போய் நிப்பாட்டட்டா? 8)

  பூ: அட, ஒரு லிட்டர் டீசல் காசை கொடு, நான் காக்கா பிரியாணியாவது சாப்பிடுகிறேன், அதை விட்டு விட்டு 100 ஆட்டோவாம்.

  பரம்ஸ்: சாமியே நடந்து போகும் போது, பூசாரி புல்லட் கேட்டானாம்.

  பூ: ஆமாம் தலை, நீங்க மாளவிகைவை மன்னிக்கவும் மாளவிகா காரை வைத்திருந்தீங்களே அது எங்கே?

  தலை: அதை ஏன் கேட்கிற? (சோகமாக)

  பூ: சரி கேட்கல

  தலை: அட நீ வேறப்பா, மாமி என் செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கி, நேரே என்கிட்ட வந்து கார் சாவி கொடுங்க, பெட்ரோல் போட்டுட்டு வாரேன்னு சொன்னா, நானும் ஆகா, செலவு மிச்சம் என்று கொடுத்தேன், அவ அந்த கார்ல தான் திருச்சி போயிருக்கா. :(

  சேரன்: தலை இத்தனை அவமானத்திற்கும் காரணாமான அந்த கம்பெனியை விடக்கூடாது, வாங்க எல்லோரும் போவோம். :twisted:

  தலை: அது முடியாதுப்பா. :cry:

  மன்மதன்: ஏன் தலை, நான் இருக்கேன்ல. :?

  தலை: கூட வாட்ச்மேனும் இருப்பானே

  பூ: ஏன் தலை வாட்ச்மேனுக்கு பயப்படுறீங்க, பகல்ல தானே போகப்போறோம்.

  தலை: அது இல்லப்பா, வரும் போது நாளைக்கு காசை கொடுக்கிறேன் என்று சொல்லி வாட்மேன்கிட்ட தான் கை மாத்தா 50 ரூபாய் வாங்கி வந்தேன், அதை வைத்து பஸ்ஸில் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு புட்போர்ட் அடித்தேன்.

  சேரன்: அப்போ தலை, இனிமே எங்க தான் போவது, இப்போதைக்கு டீ கணக்கை எப்படி செட்டில் செய்வது.

  திடிரென்று, பரம்ஸ், "அண்ணே, அண்ணே" என்று கத்த, எல்லோரும் எங்கே இளசு அல்லது இக்பால் வருகிறார்களோ என்று திரும்பி பார்த்தார்கள்.

  (தொடரும்..)


  (நண்பர்களே! ஏதோ எழுதிவிட்டேன், தவறு இருந்தால் இங்கே திட்டுங்க, ரொம்ப திட்டுவதாக இருந்தால் தயவு செய்து தனிமடலில் திட்டுங்க, யாருக்கும் தெரியாது தானே, அதிலும் அறிஞருக்கு தெரியாது)
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:47 PM. Reason: ஒருங்குறியாக்கம்
  பரஞ்சோதி


 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  படிக்க படிக்க சிரிப்பு .. அசத்து நண்பா அசத்து.. வரிக்கு வரி அட்டகாசமான சிரிப்பு.. :lol: :lol: :lol: :lol: :lol:

  அன்புடன்
  மன்மதன்

  அ(ட)ப்பாவி பரம்ஸ்.. எப்படி இருந்த தலையை இப்படி மாத்திபுட்டே.. அவர் மைக்ரோ சா�ப்டுக்கே ஸ்பான்சர் பண்றவர், போண்டா சாப்ட ஸ்பான்சர் பண்ண முடியலையா.. இதெல்லாம் ஓவர்.. அவர் நெற்றிக்கண்ணை திறக்க வைக்காதே.. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:38 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  போண்டா ஸ்பான்சர்.. போண்டியானது.. குறித்து உம் நக்கல் அருமை....

  மலையாளத்தை.... அழகாய் இரசித்து..... அதை நக்கலாய் மாற்றிய விதம் அருமை.....

  நன்றாக இருந்தது.. தொடருங்கள்.. நண்பா.
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:47 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 4. #4
  இளம் புயல் பண்பட்டவர் baranee's Avatar
  Join Date
  27 Jul 2003
  Location
  Ocean
  Posts
  444
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  நண்பரே .. பரமாத்ம குருவும் சீடர்களும் நன்றாகவே இருக்கிறது ...

  தொடருங்கள் உங்கள் டீக் கடை பெஞ்சினை..
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:49 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  5,136
  Downloads
  1
  Uploads
  0
  சம்பாஷணை நல்லாவே இருக்குது. தொடருங்க. மணியாஜி வேறு தொழில் பார்க்கப்போகிறாரா என்ன?!

  ===கரிகாலன்
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:50 PM. Reason: ஒருங்குறியாக்கம்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  13,995
  Downloads
  4
  Uploads
  0
  :twisted: :twisted: :twisted: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......நல்லாத்தான் இருக்கு........வரவங்களையும் நல்லா கவனி......... :roll: :roll: :lol: :lol: :wink:
  அன்புடன்
  மணியா...... :lol: :lol:
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:51 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 7. #7
  இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
  Join Date
  08 Apr 2003
  Location
  குடந்தை
  Posts
  719
  Post Thanks / Like
  iCash Credits
  5,040
  Downloads
  0
  Uploads
  0
  பரம்ஸின் சிந்தனை சிரிக்கவைக்கிறது
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:55 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  22,062
  Downloads
  5
  Uploads
  0
  தம்பி. பிரமாதம். பிரமாதம். பரமார்த்த குருவாகட்டும் காப்பியாத்துற நாயராகட்டும் உன் வாயில் விழுந்தால் சிரிப்பு வெடிதான். என்னமா எழுதுற. பிச்சுட்டடா கண்ணா! அரக்கிலோ வள்ளி பேக்கரி மக்ரூன் உனக்குப் பரிசா நான் குடுத்ததா நெனச்சுக்கோ. இப்போதைக்கு அதுதான முடியும். இதே மாதிரி அடுத்த அரக்கிலோவையும் கொடுக்கக் காத்திருக்கிறேன்.

  இரகசியத் தோட்டம் கதை பற்றிப் படிக்க.....
  http://www.tamilmantram.com/board/vi...?p=90036#90036

  பாராட்டுகளுடன்,
  கோ.இராகவன்
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:56 PM. Reason: ஒருங்குறியாக்கம்

 9. #9
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0
  படிக்க படிக்க சிரிப்பு .. அசத்து நண்பா அசத்து.. வரிக்கு வரி அட்டகாசமான சிரிப்பு.. :lol: :lol: :lol: :lol: :lol:

  அன்புடன்
  மன்மதன்

  அ(ட)ப்பாவி பரம்ஸ்.. எப்படி இருந்த தலையை இப்படி மாத்திபுட்டே.. அவர் மைக்ரோ சாப்டுக்கே ஸ்பான்சர் பண்றவர், போண்டா சாப்ட ஸ்பான்சர் பண்ண முடியலையா.. இதெல்லாம் ஓவர்.. அவர் நெற்றிக்கண்ணை திறக்க வைக்காதே.. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
  நன்றி நண்பா,

  நம்ம தலைக்கு இது எல்லாம் ஐவர் அணியில் சகஜம் என்று தெரியும். மற்ற மன்ற நண்பர்களும் அப்படியே நினைப்பார்கள், காரணம் எல்லோரும் வருவாங்க தானே. :wink:
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:58 PM. Reason: ஒருங்குறியாக்கம்
  பரஞ்சோதி


 10. #10
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0
  போண்டா ஸ்பான்சர்.. போண்டியானது.. குறித்து உம் நக்கல் அருமை....

  மலையாளத்தை.... அழகாய் இரசித்து..... அதை நக்கலாய் மாற்றிய விதம் அருமை.....

  நன்றாக இருந்தது.. தொடருங்கள்.. நண்பா.
  நன்றி அறிஞரே!

  கண்டிப்பாக தொடருவேன், உங்களுக்காகவே நான் தொடருவேன் :wink:
  Last edited by அக்னி; 22-03-2009 at 12:59 PM. Reason: ஒருங்குறியாக்கம்
  பரஞ்சோதி


 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
  Join Date
  17 May 2003
  Location
  வானலை...
  Posts
  3,192
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  ஏலா பரம்ஸ...
  என்னலா...இப்படி போட்டு தாக்கியிருக்கே...
  நீயும் என் மவனும் சேர்ந்து சிரிக்க வச்சுகிட்டே இருக்கீங்கல... :lol:
  அட்டகாசம் பரம்ஸ்...இந்த ரேஞ்சில் போனால் அப்புறம் நானும் எழுதவேண்டிய நிலை உருவாகும் சொல்லிட்டேன்...ஆமா... :twisted: :wink:
  Last edited by அக்னி; 22-03-2009 at 01:00 PM. Reason: ஒருங்குறியாக்கம்
  நலம் வாழ்க...
  சேரன்கயல்...

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  ஏலா பரம்ஸ...
  என்னலா...இப்படி போட்டு தாக்கியிருக்கே...
  நீயும் என் மவனும் சேர்ந்து சிரிக்க வச்சுகிட்டே இருக்கீங்கல... :lol:
  அட்டகாசம் பரம்ஸ்...இந்த ரேஞ்சில் போனால் அப்புறம் நானும் எழுதவேண்டிய நிலை உருவாகும் சொல்லிட்டேன்...ஆமா... :twisted: :wink:
  எப்ப சேரன் எழுதப்போறீங்க.. சீக்கிரன் கொடுங்க..... :roll: :roll: :roll: :roll:

  உங்க தலையை.. வார இத்தனை பேரு.. ரெடியாகுறீங்க.. வாழ்த்துக்கள் :lol: :lol: :lol:
  Last edited by அக்னி; 22-03-2009 at 01:01 PM. Reason: ஒருங்குறியாக்கம்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •