Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: எதிர்பாராமல் தட்டுப்பட்டவைகள்...

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0

  எதிர்பாராமல் தட்டுப்பட்டவைகள்...

  எதிர்பாராமல் தட்டுப்பட்டவைகள்...

  புவிமிசை காண
  கண்கள் இருத்தல் நன்று..
  இல்லாதிருத்தல்
  மிக மிக நன்று..

  ****

  அந்தரங்கப்
  புனிதம் என்பதில்லாத
  போதும்
  குழந்தைகள் பிறக்கின்றன
  தெருவோரங்களில்..

  ****

  அர்த்தம் இழந்த
  சொற்கள் மட்டுமே
  உருவாக்குகின்றன
  தலைசிறந்த
  கவிதையை..

  ****

  மூளை மழுங்கடிக்கப்பட்ட
  பிரதேசத்தில் மட்டுமே
  புத்திசாலிகள்
  தோன்றுகின்றனர்..

  ****

  மொழிப்பிரச்சினை
  வியாபாரரீதியாக
  வெற்றி பெற்ற பொழுது
  நாம் தோண்டியது
  இடுகாடுகளில்
  புதைகுழிகள்..

  ****

  பொழுதுபோக்க
  திரையரங்கு சென்று
  தலையெழுத்தை
  மாற்றிய பிறகு
  பிறக்கின்றன
  நாளைய நட்சத்திரங்கள்..

  ****

  லிட்டர் பாலை விட
  தண்ணீர் விலை
  அதிகம்..
  பொருளாதாரம்
  இன்னும் ஏறவில்லை..

  ****

  பலத்த பாதுகாப்புகளுக்கிடையில்
  பலவந்தமாய்
  ஏற்றப்படுகிறது கொடி..
  ஆய பயன்?

  ****

  அடிப்படை தேவைகள்
  இல்லாத தேசத்தில்
  பறக்கின்றன
  தேவைக்கதிகமான கொடிகள்..

  ****

  வாசித்ததற்கு விமர்சணம்
  எழுதாதிருப்பதும்
  எழுதியதற்கு விமர்சணம்
  இல்லையென்று
  விசனப்படுவதும்
  எழுத்தாளருக்குரியது..

  ****
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:42 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  57,367
  Downloads
  4
  Uploads
  0
  மிக பிஸியா ராம்?

  எதிர்பாராத ஓர் சந்தர்ப்பம் அமைந்து
  இங்கே சட்டென நீ பதித்த உணர்வுகள்..

  நான் எதிர்பார்க்கிறேன்..
  தொடர்ந்து இதுபோல் தட்டுப்பட வேண்டுமென..

  சுதந்தரக்கொடி
  பால் நீர்

  அறைகிற உண்மைகள்..

  ராம்பால் முத்திரைகள்..

  தொடரட்டும் ..பாராட்டுகள்..
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:43 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 3. #3
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  பளிச் பளார் ரக 'சிறகு' கள்.
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:44 AM. Reason: யுனிக்கோடாக்கம்
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
  Join Date
  12 Aug 2003
  Posts
  1,319
  Post Thanks / Like
  iCash Credits
  5,064
  Downloads
  8
  Uploads
  0
  அருமை ராம் வழக்கம்போல். ஆழமாய், அழகாய், அறைவது போல் ஒவ்வொன்றும். ஆனால் அவையனைத்துக்கும் பதில்கள்தான் கேள்விக் குறி....
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:45 AM. Reason: யுனிக்கோடாக்கம்
  வாழ்வது ஒருமுறை
  வாழ்த்தட்டும் நம் தலைமுறை
  ----------------------------------
  அன்புடன்
  இ.த.செ

 5. #5
  இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
  Join Date
  08 Apr 2003
  Location
  குடந்தை
  Posts
  719
  Post Thanks / Like
  iCash Credits
  5,040
  Downloads
  0
  Uploads
  0
  வெளிச்சம் போட்டுக்காட்டும் வரிகள்.

  அருமை. பாராட்டுக்கள். ராமுக்கு.
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:45 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  அழகான, 'நச்'சன்ற ஆழமான வரிகள்..அசத்தல் ரகம்..
  அன்புடன்
  மன்மதன்
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:46 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 7. #7
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0
  இதற்கு முன் இங்கு
  வந்ததில்லை..
  வந்ததாகவும் தெரிகிறது..

  வந்திருக்கிறேன்..
  அந்தக் கல்லிற்கு
  அப்பால் கொஞ்சம் புற்கள்..
  எருக்கஞ்செடி..
  அதில் வடியும் பாலின்
  மணம்..

  கொஞ்சம் கொஞ்சமாய்
  தட்டுப்படுகிறது..
  நான் வந்ததற்கான
  நியாபகங்கள்..

  இறுதியாக
  என்னைப் புதைத்த பொழுது
  என்று நினைக்கிறேன்..

  இதற்கு முன் இங்கு
  வந்ததில்லை..
  வந்ததாகவும் தெரிகிறது..
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:46 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  57,367
  Downloads
  4
  Uploads
  0
  þÐ×õ áÁ¢ý ¾É¢Óò¾¢¨Ã..

  «ôÀʧ þ¨¾ ¦¾¡¼Ã¡ì¸×õ áõ..
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:47 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  5,136
  Downloads
  1
  Uploads
  0
  முன்பு வந்தபோது நடைப் பிணம்
  இப்போது நிஜப் பிணம்

  வராதது மாதிரியும் இருக்கிறது
  வந்தமாதிரியும் தெரிகிறது

  வாழ்த்துக்கள் ராம்பால்ஜி. சிந்தனை எங்கெங்கோ ஓடுகிறது தாங்கள் எழுதியதைப் படிக்கும்போது.

  ===கரிகாலன்
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:48 AM. Reason: யுனிக்கோடாக்கம்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  சிறப்பான கவிதைகள் ராம்.

  அதிலும்.....
  ****

  பலத்த பாதுகாப்புகளுக்கிடையில்
  பலவந்தமாய்
  ஏற்றப்படுகிறது கொடி..
  ஆய பயன்?

  ****

  அடிப்படை தேவைகள்
  இல்லாத தேசத்தில்
  பறக்கின்றன
  தேவைக்கதிகமான கொடிகள்..

  ****
  இந்த இரண்டு கவிதைகளும்.....
  தேசத்தின் நிலையை தெளிவாக விளக்குகின்றன...
  நாட்டுப்பற்றுள்ள மக்களும் நாமும் ...உச்... கொட்டியபடி..
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:49 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 11. #11
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0
  ரயில் நிலையப் பரபரப்பு
  எங்கும் உண்டு..

  ரயில்கள் கடந்து சென்றதும்
  காலியாய் கிடக்கும்
  பிளாட்பாரங்களின்
  வெறுமையும் உண்டு..

  ரயில் நிற்பதற்கும்
  கடந்து செல்வதற்கும்
  இடையில்
  அல்லாடுகிறது
  வாழ்க்கை..
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:49 AM. Reason: யுனிக்கோடாக்கம்

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  5,136
  Downloads
  1
  Uploads
  0
  ரயில் வரக்காத்திருக்கும் நேரமும் உண்டு
  ரயில் கடைசிப்பெட்டி கடந்த பிறகும்
  கை ஆட்டிக்கொண்டே நினைவுகளை
  அசை போடுவதும் உண்டு.

  வாழ்த்துக்கள் ராம்பால்Ji.

  ===கரிகாலன்
  Last edited by விகடன்; 25-04-2008 at 08:50 AM. Reason: யுனிக்கோடாக்கம்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •