Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 32 of 32

Thread: டைட்டானிக் கப்பல் இன்று மூழ்கியிருந்தால் - உலக நாடுகளின் பார்வையில்..

                  
   
   
 1. #25
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,161
  Downloads
  161
  Uploads
  13
  இப்படித்தான் பலர் காலம் ஓட்டுறாங்கப்பா........ அட நம்ம இலங்கை அரசு கூட..................

  Quote Originally Posted by Narathar View Post
  ராஜபக்சே:

  இது புலிகளின் பயங்கரவாதச்செயல் என்பது எமது உளவுத்துறை தகவல்களிலிருந்து தெரிகிறது...

  வன்னிச்சுற்றிவளைப்பை முறியடிப்பதற்க்காக இவர்களது சதி வேலை இது!!!

  இத்தருணத்திலாவது உலகநாடுகள் புலிகள் பயங்கரவாதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
  நான் நினைச்சுக்கொண்டே கீழ வாறன். நீங்கள் போட்டிருக்கியள்... எப்படி முடியுது???
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 2. #26
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,990
  Downloads
  151
  Uploads
  9
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  இப்படித்தான் பலர் காலம் ஓட்டுறாங்கப்பா........ அட நம்ம இலங்கை அரசு கூட..................


  நான் நினைச்சுக்கொண்டே கீழ வாறன். நீங்கள் போட்டிருக்கியள்... எப்படி முடியுது???
  உங்கள் எண்ணத்தை கவரவா???
  நாராயணா..

 3. #27
  Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
  Join Date
  04 Feb 2009
  Posts
  149
  Post Thanks / Like
  iCash Credits
  4,916
  Downloads
  0
  Uploads
  0

  என்னது ரைற்றானிக் மூழ்கிற்றா?????

  ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...

  அமெரிக்கா...

  சுதந்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம். பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.

  இங்கிலாந்து...

  நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம் தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.

  இஸ்ரேல்...

  இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல. ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது. இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம் செய்வோம்.

  இந்தியா...

  இது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  இலங்கை...

  விடுதலைப் புலிகளை அழித்து விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

  ஐக்கிய நாடுகள் சபை...

  ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.


  கப்பல் பயணிகள்...


  ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா.............

  நண்பன் கோபிகிருஷ்ணாவின் பதிவு இது

 4. #28
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  25,385
  Downloads
  183
  Uploads
  12
  சன் டிவி:

  டைட்டானிக் கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. பல நூறு பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். துணை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைவு.

  மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயிர் தப்பிய தமிழர்களுக்கு தம் தாய்நாடு திரும்ப உடனடியாக தனி விமானம் அனுப்பி வைத்தார்.

  ஜெயா டி.வி:

  இலண்டனில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதற்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க அரசு நடுக்கடலில் தவிப்போரை மீட்காமல் அஞ்சலி என கண்ணீர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

  விஜய் டி.வி

  குற்றம்! நடந்தது என்ன?

  இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற டைட்டானிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது.

  இது மூழ்கியதற்கு காரணம் டெக்னிகல் கோளாறா? கேப்டன் மற்றும் ஊழியர்களின் அலட்சியமா அல்லது அமானுஷ்யமா என்பது பற்றி அலசல்.

  டைட்டானிக் கப்பல் ஸ்காண்டிநேவியா பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட போதே சிறிய விபத்தைச் சந்தித்தது. இதைக் கெட்ட சகுனம் என பல ஆண்டுகள் அன்பவம் வாய்ந்த காப்ட்ன்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் எச்சரிக்கையயும் மீறி கப்பலைச் செலுத்தியிருக்கிறார் கேப்டன்...

  இடைவேளைக்குப் பிறகு...

  நடுக்கடலில் செல்லும் பொழுது தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவத்தைக் கண்டிருக்கிறார் கப்பல் கோபுரக் கண்காளிப்பாளர் ஆண்ட்ரூஸ். அது என்னவென்று சொல்ல அவர் உயிருடன் இல்லை. அவருடன் பணியாற்றிய அவர் நண்பர் கில்பர்ட்டைப் பேட்டி கண்ட போது...

  ஆமாங்க.. அது வெள்ளையா மசமசன்னு இருந்தது.. மெதுவா கப்பலை நோக்கி வந்தது, அப்படியே தண்ணி மேல நடந்து வந்த மாதிரிதான் இருந்தது. ஆனா அதுக்கு காலே இல்லை..

  பக்கம் வர பக்கம் வர அது பெரிசா ஆக ஆரம்பிச்சது. மிகப் பெரிய பூதம் அது,, அது அப்படியே தன் கையை தூக்கி கப்பலை ஓங்கி அறைஞ்சது...

  எனக்கு கிறு கிறுன்னு வந்துச்சி.. லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு கடலில் குதிச்சிட்டேன்..

  முடிஞ்ச வரை நீந்தினேன்..

  கப்பலில் இருந்து வந்த லைஃப் போட்ல ஒண்ணில ஏறிகிட்டேன்.. அதனால தான் தப்பிக்க முடிந்தது.

  டைட்டானிக் கப்பல் கவிழக் காரணம் பூதமா? இடைவேளைக்குப் பிறகு...

  இதைப் பற்றி இன்னொரு பயணியிடம் கேட்டபொழுது..

  அது பூதமில்லை.. நானும் பார்த்தேன். அது மிகப் பெரிய திமிங்கிலம். வெள்ளை நிறத்தில் கடலின் அடியில் இருந்து மேல வந்தது.. அது தன் வாயால் கப்பலை இடிக்க கப்பல் ஓட்டையாயிடுச்சி..

  பிறகு கப்பலை கடிச்சி இழுத்தது இதனால் கப்பல் உடைந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பிச்சது... நான் பெண் என்பதால் உடனடியாக லைஃப் போட்டில் ஏற்றி அனுப்பிட்டாங்க.. அதனால் தப்பித்தோம்..

  அந்த திமிங்கிலம் கப்பலை கடித்து கடித்து மூழ்கடிச்சிருச்சி...

  டைட்டானிக் கப்பல் முழ்கியது பூதத்தினாலா, திமிங்கிலத்தினாலா? இல்லை தீவிரவாதிகள் செயலா..

  நாளை தொடரும்
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 5. #29
  இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
  Join Date
  22 May 2007
  Location
  புதுச்சேரி.
  Posts
  541
  Post Thanks / Like
  iCash Credits
  4,917
  Downloads
  0
  Uploads
  0
  மணி ரத்னம் :

  மூழ்கிடுச்சு.. டைட்டானிக் மூழ்கிடுச்சு.. ஒட்டுமொத்தமா மூழ்கிடுச்சு.

  டி.ஆர்.

  என் பேரு டைட்டானிக்கு ; கடலுக்குள்ள போயி வெயிட்டா நிக்கு(ம்).

  விஜய்..

  டைட்டானிக்குங்ணா.. டைவ் அடிச்சிருச்சுங்ணா..

  வடிவேலு..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முதல்ல ஒழுங்காத்தான் போச்சு.. ஒரு முட்டுச்சந்துல திரும்பும்போது ..

  .... மூச்சுத் தெணறத் தெணற முழுகிப்போச்சு..!

  விவேக்.

  இப்புடிப் போன நான், இப்புடி முழுகிட்டேன்..
  வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

 6. #30
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
  Join Date
  20 Oct 2005
  Location
  சென்னை
  Posts
  1,217
  Post Thanks / Like
  iCash Credits
  7,938
  Downloads
  3
  Uploads
  0
  ஆகா சூப்பருங்கோ தாமரை கலக்கல் தொடருங்கள்

  விஜய் டிவியால் மட்டும் எப்படி தான் ஓவராக பில்ட் அப் கொடுக்க முடியுமோ தெரியல சாமி

  பகிர்வுக்கு நன்றி லோஷன்

  ஐக்கிய நாடுகள் சபை தான் சூப்பர்

 7. #31
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
  Join Date
  09 Jan 2009
  Posts
  1,560
  Post Thanks / Like
  iCash Credits
  13,125
  Downloads
  33
  Uploads
  0
  தேன் தமிழ் தான் லோஷனா?

  சூப்பர் கற்பனை தேன் தமிழ்...

  பக்கபலமாக தாமரை அண்ணா மற்றும் அய்யாவின் கற்பனைகளும் அசத்தல்....
  முயற்சி என்பது மூச்சானால்
  வெற்றி என்பது பேச்சாகும்....

 8. #32
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  5,013
  Downloads
  32
  Uploads
  0
  நல்ல நகைச்சுவை.அதிலும் தாமரை அண்ணா தந்த கற்பனை, முக்கியமாக விஜய் டிவியின் நடந்தது என்ன வெகு அருமை

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •