Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 86

Thread: தெரிந்தும் தெரியாமல்

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    தெரிந்தும் தெரியாமல்

    தெரிந்தும் தெரியாமல்

    அழுகிப்போகும் குப்பைகள்
    அமில மழை பொழியும் என தெரிந்தும்
    எரிக்காமல் புதைக்காமல்
    பக்கத்து காலி மனையில்
    உயிருள்ள பிணங்களாய் நாறும்!

    கொட்டும் மழை நீர்
    அதிரடி பரிசு என தெரிந்தும்
    வடிக்காமல் பிடிக்காமல்
    சகதிகளாய் ஓடவிட்டு
    ரோடு போடா சாலையை ஏசும்!

    பாலிதீன் பைகள்
    கால் நடைகளின்
    மூச்சு வாங்கிகள் என தெரிந்தும்
    அட்டைப்பைகளை
    அலட்சியப்படுத்தும்!

    மர மறைவு கழிவுகள்
    அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
    கட்டண கழிப்பறைகளை
    நிராகரிக்கும்!

    இழுத்து விடும் நிகோடின்கள்
    அருகாமை பாலகர்களுக்கு
    தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
    அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
    நொடிக்கொருதரம் விடும்!

    அருகே இருக்கும் தங்கையை
    காவல் செய்தவாறே
    எதிரே இருக்கும் நங்கையை
    நோட்டம் விடும்!

    தெரிந்தும் தெரியாமல்
    இந்த
    இயற்கை உபாதைகள்
    இலவசமாய் கழியப்படும்!

    ( கண்ட காட்சிகளை காணச்சகியாது ' நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று எழுதப்பட்டவை...இது குறித்த உங்களது விமர்சனங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.)
    தாழ்மையுடன்,
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:44 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:45 PM.

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..
    குசும்பா, மன்மதா
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:45 PM.
    பரஞ்சோதி


  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    சகோதரி உங்கள் கவிதை மிகவும் அருமை. சமுதாய அவலத்தை எழுத தொடங்கினால் ஒரு மன்றம் போதாது. பாராட்டுக்கள்.
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:45 PM.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..
    குசும்பா, மன்மதா
    அடடா .. நான் என்ன சொன்னாலும் குசும்பா தெரியுதா... கொஞ்சம் ஸ்டைலை மாத்திக்க வேண்டியதுதா
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:47 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    அன்புத் தங்கையே.... அருமையான கவிதை. பார்க்கும் காட்சிகளை நல்ல சமுதாய நோக்கோடு கவிதை ஆக்கி இருக்கும் நேர்த்தி காண ஆச்சரியம். பாராட்டுகள்.
    அழுகிப்போகும் குப்பைகள்
    அமில மழை பொழியும் என தெரிந்தும்
    எரிக்காமல் புதைக்காமல்
    பக்கத்து காலி மனையில்
    உயிருள்ள பிணங்களாய் நாறும்!
    உரத்திற்காக அப்படி போட்டிருப்பதாகச் சொல்வார்கள். விவசாயிகள் வாங்கிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படி இல்லைங்களா தங்கை?
    கொட்டும் மழை நீர்
    அதிரடி பரிசு என தெரிந்தும்
    வடிக்காமல் பிடிக்காமல்
    சகதிகளாய் ஓடவிட்டு
    ரோடு போடா சாலையை ஏசும்!
    நிலத்தடி நீராக மாறாதா தங்கை?
    பாலிதீன் பைகள்
    கால் நடைகளின்
    மூச்சு வாங்கிகள் என தெரிந்தும்
    அட்டைப்பைகளை
    அலட்சியப்படுத்தும்!
    கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று. சட்டம் ஆகி விடும் என நினைக்கிறேன். துணிப்பை கொண்டு சென்று வாங்குவது நல்லது அல்லவா?
    மர மறைவு கழிவுகள்
    அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
    கட்டண கழிப்பறைகளை
    நிராகரிக்கும்!
    அசுத்தம் மேலும் வெட்கம் கூட. அவர்களுக்கு இல்லாவிட்டாலும் பார்ப்பவர்களுக்கு வரும்.
    இழுத்து விடும் நிகோடின்கள்
    அருகாமை பாலகர்களுக்கு
    தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
    அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
    நொடிக்கொருதரம் விடும்!
    இங்கே அலுவலகத்திலேயே புகைப்பிடிப்பது அதிகம். அதுவும் சங்கிலித் தொடரில் புகைக்கிறார்கள். சட்டம் வரும். சில இடங்களில் ஏற்கனவே இருக்கிறது.
    அருகே இருக்கும் தங்கையை
    காவல் செய்தவாறே
    எதிரே இருக்கும் நங்கையை
    நோட்டம் விடும்!
    இப்படித்தான் நான்கு இந்திய வாலிபர்கள் என் மகள்களை நோக்கி வேகமாக ஏதோ கமெண்ட் கொடுத்தபடி பின் தொடர ஆரம்பித்தார்கள். நான் வேகமாக சென்று மகள்கள் தோள்களில் கை வைத்து தந்தை என காட்டி அவர்களை நோக்கி "என் மகள்கள் தான் " என்றேன் சிரித்தபடி. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மன்னிப்பு சொல்லியபடி வேகமாக கடை வாசலை நோக்கி சென்று விட்டார்கள்.

    -அன்புடன் அண்ணா.
    Last edited by அமரன்; 31-05-2007 at 06:27 PM.

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அருகே இருக்கும் தங்கையை
    காவல் செய்தவாறே
    எதிரே இருக்கும் நங்கையை
    நோட்டம் விடும்!
    இப்படித்தான் நான்கு இந்திய வாலிபர்கள் என் மகள்களை நோக்கி வேகமாக
    ஏதோ கமெண்ட் கொடுத்தபடி பின் தொடர ஆரம்பித்தார்கள்.
    நான் வேகமாக சென்று மகள்கள் தோள்களில் கை வைத்து தந்தை என
    காட்டி அவர்களை நோக்கி "என் மகள்கள் தான் " என்றேன் சிரித்தபடி.
    என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மன்னிப்பு சொல்லியபடி வேகமாக
    கடை வாசலை நோக்கி சென்று விட்டார்கள்.

    -அன்புடன் அண்ணா.
    என் மனைவி என்னுடைய வருங்கால மகளை எப்படி வளர்ப்பார் என்று சொல்லும் போது, பாய்ஸ் சைட் அடிக்கும் முன்பே என் மகள் அவர்களை பார்த்து சைட் அடிப்பாராம். அடி தாங்காமல் பாய்ஸ் ஓட வேண்டியிருக்கும் என்பார்.
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:48 PM.
    பரஞ்சோதி


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    என் மனைவி என்னுடைய வருங்கால மகளை எப்படி வளர்ப்பார் என்று சொல்லும் போது, பாய்ஸ் சைட் அடிக்கும் முன்பே என் மகள் அவர்களை பார்த்து சைட் அடிப்பாராம். அடி தாங்காமல் பாய்ஸ் ஓட வேண்டியிருக்கும் என்பார்.
    நானும் மகள்களிடம் அப்படி சொல்வதுண்டு. ஆனாலும் ஒரு பயம் இருக்கும். காரணம் நான் 11ஆம் வகுப்பில் படிக்கும்பொழுது படிப்பாளி அவ்வளவுதான். மற்ற எல்லா செயல்களிலும் விலகி நிற்பேன்.

    எங்கள் கிராமத்துப் பள்ளியில் சீருடை அணியும் கட்டாயம் இல்லை என்றாலும் நான் தினந்தோறும் அணிந்து செல்வேன். பேமஸ்.

    ஒரு நாள் பள்ளியில் புதிதாக பத்தாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவி நல்ல கலராக சுருள் முடியுடன் அழகாக இருப்பார். நகரத்தில் இருந்து வந்தவர். கலர் கலராக சட்டைகள் அணிந்து வருவார்.

    அவர் தன் தோழிகளுடன் சேர்ந்து "'என்னடி... கலர் சட்டையே இல்லையா? நான் வேண்டுமானால் என்னுடையதை தரட்டுமா?" என்று கிண்டலடித்து விட்டார்.

    அதுவரை பெண்களைப் பார்ப்பதையே கெட்ட செயல் என்பதும், பெண்கள் சம்பந்தமாக பேசுவது கெட்ட வார்த்தை என்ற எண்ணமும் மனதில் இருந்து மாறத் தொடங்கியது என்று சொல்லவும் வேண்டுமா?

    அதனாலேயே பையன்களை எதுவும் கிண்டல் செய்து அவர்கள் மனதில் உள்ள படிக்கும் எண்ணம் பாழாகி விடுமோ என்ற பயமும் வரும். எல்லாம் ஒரு அனுபவம்தானே.

    -அன்புடன் இக்பால்.
    Last edited by அமரன்; 31-05-2007 at 06:29 PM.

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    இக்பால் அண்ணா, பெண்களைப் பற்றிய எண்ணம் மனதில் மாறியதால் நீங்கள் என்ன கெட்டா போய் விட்டீர்கள்.

    நீங்கள் சொல்வது சரி தான் படிக்கும் போது அவர்கள் மனதில் அப்படி தேவையில்லாத எண்ணம் தோன்ற வேண்டாம்.

    ஆனால் நான் என்னுடைய மகளை வித்தியாசமாக வளர்க்க போகிறேன். பிறந்தவுடன் அவருக்கு மன்மதன் தான் முதல் பாய் பிரண்ட். போக போக நிறைய பாய் பிரண்ட்ஸ், எனவே அவள் மனதால் தைரியசாலியாக இருப்பாள்.
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:49 PM.
    பரஞ்சோதி


  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் சாகரன்'s Avatar
    Join Date
    27 Apr 2004
    Location
    �...
    Posts
    187
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அட... அடுத்த ஜெனரேஷன் இன்னும் தெளிவா இருக்கும் அண்ணா...
    எது சைட்.. எது படிப்பு.. எது பாதிப்பு... எல்லாமே சரியா ஹேண்டில் பண்ணுவாங்க...( நம்புவோம்... உதவி செய்வோம்...)
    ஆனாலும் ஒரு பயம் இருக்கும்
    அது என்னவோ உண்மைதான்...
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:50 PM.

  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வர்ணிகாவும், சக்தியும் சேர்ந்தால் அவ்வளவு தான். ஒரு பய கிட்ட வரமாட்டான்.
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:50 PM.
    பரஞ்சோதி


  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    பிறந்தவுடன் அவருக்கு மன்மதன் தான் முதல் பாய் பிரண்ட். போக போக நிறைய பாய் பிரண்ட்ஸ், எனவே அவள் மனதால் தைரியசாலியாக இருப்பாள்.
    கவலைப்படாதீங்க.. ரொம்ப தைரியசாலியாக வளர்வாள்.. ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம்..
    Last edited by அமரன்; 31-05-2007 at 03:51 PM.

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •