Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: நேற்றிரவு....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    நேற்றிரவு....

    நேற்றிரவு

    நேற்றிரவு
    எங்கிருந்தேனென்று
    யாருக்குத் தெரியும்?

    இருண்ட இரவில்
    தூக்கமென்ற மரணம்
    என்னைத்
    தூக்கிச் சென்றிருக்கலாம்.

    மதுக்கடலின் ஆழத்தில்
    முங்கிப் போயிருக்கலாம்.

    ஏதாவது ஒரு பயணத்தில்
    இனம் புரியாத கூவல்களிடையே
    சன்னல்களைச் சாத்திக் கொண்டு
    புத்தகம் படித்திருக்கலாம்.

    தூரத்தே தெரியும் சன்னலின்
    விளக்கொலியில்
    நகரும் ஆண்பெண் நிழல்கள்
    என்ன செய்யப் போகின்றன
    என்று நேரம் போக்கியிருக்கலாம்.

    எது எப்படியிருந்தால் என்ன?
    வரும் இன்றைய இரவில்
    என்ன செய்வேனென்ற
    கவலை இல்லாத பொழுது
    நேற்றைய இரவு
    ஏன் என்னை இம்சிக்கிறது....?
    Last edited by அன்புரசிகன்; 08-10-2007 at 08:14 PM. Reason: ஒருங்குக்குறியாக்கல்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம்...
    ஒரு நாள் இரவு உணவு உண்ணாமல்..
    விளையாடிய களைப்பில் இரவு ஏழு மணிக்கே உறங்கிவிட்டவன்
    காலைதான் கண்விழித்தேன்,,,

    அகோரப் பசி (இராப்பட்டினி அல்லவா?)
    பல் துலக்கி அவசரம் அவசரமாய் வர
    ஆவி பறக்கும் இட்லி, சட்னி, சாம்பார்...

    ஊஹூம்.. இரவு தாளித்த குழம்பு எங்கே? மணத்த பொரியல் எங்கே?
    முதலில் அது.. பிறகுதான் இது..
    அடம் பிடித்தேன்..அழுதேன்...

    போய்விட்ட உணவு வேளை...
    கடந்துவிட்ட காலம்..
    நகர்ந்துவிட்ட நதி..
    தடவி அகன்ற தென்றல்...

    சில பசிகளைப் பொறுத்தவரை
    மனம் இன்னும் குழந்தைதான்....


    பாராட்டுகள் நண்பன்....
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:19 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பாராட்டுக்கள் நண்பரே.
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:20 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ஊஹூம்.. இரவு தாளித்த குழம்பு எங்கே? மணத்த பொரியல் எங்கே?
    முதலில் அது.. பிறகுதான் இது..
    அடம் பிடித்தேன்..அழுதேன்...
    நான்கூட அண்ணா! மருதாணி வைத்து தூங்கிய நாட்களில் இப்படி காலையில் அழுததுண்டு!பழைய நினைவுகளை கிளறிவிட்ட நண்பருக்கு பாராட்டுகள்.
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:21 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இழந்ததையே நினைத்து உழலும் இந்த மனதின் விசித்திரப் போக்கு வினோதமானதுதான்...
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:22 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி நண்பர்கள் - இளசு, பாரதி, கவிதா, சேரன்கயல்....

    கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தது.. கடந்த காலமும், வரும் காலமும் நமக்குச் சொந்தமானதில்லை. நமக்குரியது, நிகழும் இந்த நிமிடமே... அதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் மகிழ்ச்சிக்கு சிறந்த வழி என்று சொல்லியிருப்பார்... அந்த வகையில், தான் இந்தக் கவிதையும்... கழிந்து போன காலத்தை நினைந்து வருந்தும் பலரை அறிவேன்... ஏன், சில சமயம் நானே கூட அப்படி நினைத்திருக்கிறேன்... அதுபோல, மிகப் பெரும்பாலான நேரங்களில், எதிர்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற கற்பனைகளிலும் பயங்களிலும் வாழ்ந்திருக்கிறேன்... இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை முற்றிலுமாக மறந்து விட்டு... இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அறிந்தாலும் அதை கொண்டாடுவதை விட மற்றவற்றில் தான் மனம் போகிறது. வருத்தத்திலும், துக்கத்திலும்....

    நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:24 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சாகரன்'s Avatar
    Join Date
    27 Apr 2004
    Location
    �...
    Posts
    187
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஆயினும் நண்பா,
    இன்றிரவு வந்துவிட்டால் நேற்றிரவு மறக்கப்படலாம்..

    எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் வாழ்க்கையின் பல நேற்றிரவுகளை மறக்கச்செய்கின்றனவோ...

    பாராட்டுக்கள் தோழரே!
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:24 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....
    உண்மை தான்!
    வாழ்க்கையின் முதல் 25 எதிர்கால கனவுகளிலும் லட்சியங்களிலும்..
    இறுதி 25 பழையவைகளை அசைபோட..
    இடைப்பட்ட காலத்தில் கூட நிகழ்காலத்தில் லயிக்க இயலாமல்...
    மனமுதிர்ச்சிக்கேற்ப இந்த கால அளவு மாறலாம்...
    குழந்தை போல் இந்த நிமிடத்தை அனுபவிக்க அதனிடம் கற்று கொள்ளத்தான் வேண்டும்!
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:25 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....

    உண்மை தான்!
    வாழ்க்கையின் முதல் 25 எதிர்கால கனவுகளிலும் லட்சியங்களிலும்..
    இறுதி 25 பழையவைகளை அசைபோட..
    இடைப்பட்ட காலத்தில் கூட நிகழ்காலத்தில் லயிக்க இயலாமல்...
    மனமுதிர்ச்சிக்கேற்ப இந்த கால அளவு மாறலாம்...
    குழந்தை போல் இந்த நிமிடத்தை அனுபவிக்க அதனிடம் கற்று கொள்ளத்தான் வேண்டும்!
    நிச்சயமாக?
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:26 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    சந்தேகம் ஏன் அண்ணா?
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:26 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    இல்லைங்க தங்கச்சி... என் மனம் நிகழ்காலத்திலும் சம அளவில்
    இலயிக்கிறது. உங்களுக்கு ஏன் அப்படி இலயிக்கவில்லை என்ற
    ஆச்சரியத்தில் கேட்டேன்.
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:27 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இல்லைங்க தங்கச்சி... என் மனம் நிகழ்காலத்திலும் சம அளவில்
    இலயிக்கிறது. உங்களுக்கு ஏன் அப்படி இலயிக்கவில்லை என்ற
    ஆச்சரியத்தில் கேட்டேன்.
    எதிபார்ப்புகள் இல்லாத வாழ்க்கை அமைக்கத் தெரிந்து கொண்டால், அவ்வாறு இருக்கலாம். எதிகாலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கும் பொழுது, நேற்றைய நாளைகளில், இழந்து விட்ட தருணங்கள் வலி தராது...

    இருக்கிறதை வைத்து வாழ்வோம் என்று முடிவெடுத்து விட்டால், தவிப்பு ஏது, தாகம் ஏது....? சமன்பாடான மனநிலையை அடைந்து விட்ட இக்பாலுக்கு வாழ்த்துகள்......
    Last edited by அன்புரசிகன்; 11-10-2007 at 07:29 AM. Reason: ஒருங்குக்குறியாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •