Results 1 to 2 of 2

Thread: உயில்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0

    உயில்

    “ டாக்டர், எனக்கு மண்டையில் அடிக்கடி ஏதோ பிராண்டுகிறது போல இருக்கிறது. பெரிய டாக்டர்களை பார்த்து விட்டேன். என் மண்டையில் கட்டி இருக்கிறதாம். அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டுமாம்” நீல கண்டன் , தன் குடும்ப வைத்தியர் மேகநாதனிடம் வருத்தமாக சொன்னார். . நீல கண்டன் பெரிய பணக்காரர்.

    டாக்டர் மேகநாதன் சொன்னார் “ ஆமாம் . அது தவிர உங்களுக்கு ரத்த அழுத்த நோயும் இருக்கிறது. அதற்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் .அதையும் சீக்கிரமே வேறு செய்ய வேண்டும் “

    “ அதுதான் என்ன செய்வது என் தெரியாமல் யோசித்து கொண்டிருக்கிறேன் . என் சொத்தை எப்படி யாருக்கு கொடுப்பது என தெரியவில்லை “ – நீலகண்டன்

    மேகநாதன் சொன்னார் “ இது உங்கள் வீட்டு விஷயம் . நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. அறுவை சிகிச்சை இரண்டுமே ரிஸ்க் கொஞ்சம் அதிகம். அதனால் நீங்கள் முதலில் ஒரு உயில் ஒன்று எழுதி வைத்து விடுங்கள்”

    நீலகண்டன் யோசித்தார் . “செய்யலாம் தான். எனக்கு ஒரு மகன் , ஒரு மகள் . மகன் உருப்படியில்லாதவன். செலவாளி. அவனுக்கு எழுதி எந்த பிரயோசனமும் இல்லை. காசை கரியாக்கி விடுவான் . பேசாமல் மகள் பேரில் எழுதி வைத்து விடுகிறேன்”

    “அப்படியே செய்யுங்கள். ஆனால் பசங்க யாருக்கும் தெரியாமல் செய்யுங்கள். குடும்பத்தில் பிரச்னைகள் வந்து விடும் ”

    நீலகண்டன்” சரி செய்கிறேன். ஒரு சின்ன உதவி டாக்டர் எங்கள் குடும்ப டாக்டர் நீங்கள். அதனால் , உங்களையே இந்த உயில் எக்செக்யுடர் ஆக போட்டு விடுகிறேன். யாருக்கும் தெரிய வேண்டாம் . எனக்கு ஏதேனும் ஆனால், நீங்கள் இந்த உயிலின் படி செய்து விடுங்கள்.

    மேகநாதன் “ அப்படியே ஆகட்டும் “

    நீலகண்டன் உயில் மகள் பேரில் எழுதப் பட்டது. உயில் பத்திரம் டாக்டர் மேகநாதனிடம் கொடுக்கப் பட்டது.

    நீலகண்டன் மூளை அறுவை சிகிச்சை மூன்று கழித்து செய்யலாம் என டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்கு பிறகு இதய அறுவை சிகிச்சை.

    ***

    அடுத்த நாள் டாக்டர் மேகநாதன் , நீலகண்டனின் மகள் அர்ச்சனாவை கூப்பிட்டார். “அர்ச்சனா, உன் அப்பா இப்படி ஒரு காரியம் செய்வார் என நான் எதிர்பார்க்க வில்லை. தன் உயிலை முதலில் உன் பெயரில் எழுதி விட்டு, இப்போது உன் அண்ணன் அர்ஜுனன் பேரில் மாற்றி எழுதி வைத்து விட்டார். இதோ பார், உன் பெயரில் எழுதி வைத்த உயில் . இப்போது உன் அப்பா, உன் அண்ணா பேரில் எழுதி விட்டு என்னையே எக்செக்யுடர் ஆக போட்டு விட்டார். அப்படின்னு கேள்விப் பட்டேன் . பாவம் நீ ! “

    உண்மையில், நீலகண்டன் அப்படி ஒன்றும் அர்ஜுன் பெயரில் உயில் எதுவும் மாற்றி எழுதவில்லை . டாக்டரின் நாடகம் அது .

    நொடிந்து போனாள் அர்ச்சனா . அப்பா தன்னை ஏமாற்றி விட்டார் என கோபம் . உடனே அப்பாவிடம் போய் சத்தம் போடலாம் என கிளம்பினாள்.

    டாக்டர் மேகநாதன் அவளை தடுத்தார். “அதெல்லாம் வேண்டாம். பேசாமல் ஒன்று செய்யலாம் . ஒரு மருந்து தருகிறேன். அதை உன் அப்பாவின் உணவில் கலந்து விடு. அப்பா இறந்து விடுவார். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த உயில் படி சொத்து உனக்கு தான் “

    அப்படியே அர்ச்சனா, அப்பாவின் உணவில் மருந்து வைத்து விட்டாள். நீலகண்டன் இறந்து விட்டார். டாக்டர் மேகநாதன் , உண்மையை மறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினால் அவர் இறந்தார் என ஒரு சான்று கொடுத்து விட்டார் . நீலகண்டனின் உடலை அடக்கம் பண்ணி விட்டனர்.

    அர்ச்சனா, பேசிய படி, ஒரு பெரிய தொகையை டாக்டருக்கு அன்பளிப்பாக கொடுத்தாள்.

    ****

    இரண்டு நாள் கழித்து , டாக்டர் மேகநாதன், நீலகண்டனின் மகன் அர்ஜுனை அழைத்தார். “ வருத்தமான விஷயம் . அப்பா உன்னை ஏமாற்றி விட்டார். சொத்து முழுக்க உன் தங்கை பேரில் எழுதி வைத்து விட்டார். இதோ பார் உயில் .”

    அர்ஜுனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “ இப்போதே போய் என் தங்கையை உண்டு இல்லை என் ஆக்கி விடுகிறேன்” என ஆக்ரோஷமாக கிளம்பினான்.

    டாக்டர் சொன்னார் : “ அவசப்படாதே ! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. நிதானமாக செயல் படு . ஒன்று செய் . இந்த மருந்தை எப்படியாவது நாடகமாடி உன் தங்கையை சாப்பிட வை. இது விஷம் . அவள் இறந்து விடுவாள். இந்த உயிலை கிழித்து போட்டு விடுகிறேன். பிறகு எல்லா சொத்தும் உனக்கு தான் . ஜமாய். என்னை மட்டும் கவனித்துக் கொள் . ஒரு கோடி ரூபாய் “

    “ சொத்து கிடைக்கட்டும் . அப்படியே செய்கிறேன் “ என்று சொல்லி விட்டு அங்கே இருந்து அகன்றான் அர்ஜுன்.

    அடுத்த நாள் . “ டாக்டர், நீங்க சொன்னபடி, என் தங்கைக்கு விஷம் வைத்து கொன்று விட்டேன் “

    டாக்டர் மேகநாதன் “அப்படியா! அப்பா சொத்து முழுக்க உனக்கு தான் . அனுபவி . என் பங்கு எனக்கு எப்போ கிடைக்கும்? . என் கைக்கு நான் சொன்ன பணம் வந்த பிறகு உங்க அப்பா எழுதின உயிலை கிழித்து விடுகிறேன். சரியா ? ”

    அர்ஜுன் சிரித்தான். “ உங்க பங்கு உங்களுக்கு கிடைக்காது. ஜெயில் வாசம் தான் கிடைக்கும் . “

    டாக்டர் முகம் வெளிறியது. “ என்ன சொல்றே நீ ?”

    அர்ஜுன் சொன்னான். “ என்கிட்டே பணம் வாங்கிட்டு, அப்புறம் அர்ச்சனா கொலை பழியை என் பேரில் சுமத்தி என்னையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டு, எக்செக்யுடர் ஆக, நான் ஜெயிலிலிருந்து வரும் வரை நீங்க சொத்தை அனுப்பிடலாம் என்னு தானே நினைச்சீங்க” .

    டாக்டர் முகம் செத்து விட்டது . சொத்து போச்சே! .

    அர்ஜுன் தொடர்ந்தான் .” நேத்து நானும் அர்ச்சனாவும் எல்லாம் பேசிட்டோம் . சொத்தை ரெண்டு பேரும் பங்கு போட்டுக்க முடிவு செய்து விட்டோம். இப்போ கேள்வி என்னன்னா , எல்லாத்தையும் போலீஸ்லே சொல்லவா, இல்லே நீங்களா எல்லாத்தையும் ஒப்புகொண்டு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு கிளம்பறீங்களா?”

    அப்போது அங்கே வந்தாள் அர்ச்சனா. “ அண்ணா, அவர் என்னை ஏமாத்தி வாங்கின பணத்தையும் கீழே வைக்க சொல்லுங்க அண்ணா ! நீங்க என்னை மன்னிக்கணும் அண்ணா. இவர் பேச்சை கேட்டு அப்பாவை கொன்னுட்டேன் “

    “அதனாலே என்ன அர்ச்சனா ! எப்படியிருந்தாலும் அப்பா உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க . அதுவும் நீ ஏமாத்தப் பட்டு தானே செஞ்சே ! தப்பு டாக்டர் பேரிலே தான். அப்படியே போலீஸ் வந்தாலும் பார்த்துக்கலாம் “ என்று ஆறுதல் சொன்னான் அண்ணன் .

    ****“முற்றும்

    ஆ. கு : பேராசை பெரும் நஷ்டம் . இதையே ஈஸா உபநிஷதும் சொல்கிறது



    ISāvāsyamidaṃ sarvaṃ yatkiñca jagatyāṃ jagat |tena tyaktena bhuñjīthā mā gṛdhaḥ kasyasviddhanam || 1st Mantra, Isha-Upanishad

    (ஈசா வாச்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யம் ஜகது தேனா த்யாகேத்ன புஞ்சித மா கிரத கச்யச்வித்தானம் )

    பொருள் : இவ்வுலகில் எதெல்லாம் மாற்றமுள்ளதோ, அவையெல்லாம் இறைவனுள் அடங்கும். அதனால், கர்மயோகியாய் , மற்றவரின் சொத்துக்கு ஆசைப்படாமல், வாழ்!

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    அடடா.. பணம் எப்போதும் பிரச்சனை தான் போல.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •