Results 1 to 1 of 1

Thread: இறப்பு

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0

    இறப்பு

    நான்

    நான் ஒரு டாக்டரா? - இல்லை
    நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? - இல்லை
    நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - இல்லை
    நான் ஒரு சிவில் என்ஜினீயரா? - இல்லை
    நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? – இல்லை
    நான் கடவுளா - இல்லை
    பின் நான் யார் ?. –

    நான் மனிதன் . இன்று நான் முதியவன். எனது தலை முடி கொட்டி விட்டது. இருக்கும் சில முடியும் வெளுத்து விட்டது. பற்கள் கொட்டி விட்டன. என்னால் நடக்க முடியவில்லை. எனது தசைகளும், எலும்புகளும், சக்தி அற்று போய்விட்டன. எனது ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய மறுக்கிறது. நாலடி எடுத்து வைத்தால், இதயம் பட படைக்கிறது.

    என்னால் படிக்க முடியவில்லை. டி வி பார்க்க முடியவில்லை. பாட்டு கேட்க முடியவில்லை., வாய் பேச முடியாமல், குழறுகிறது.
    என்னால் வெளியே எங்கும் போகமுடியவில்லை.

    பெண்கள் பேரில் எனக்கு இருந்த பற்று முழுக்க அற்று விட்டது. என் தோல் சுருங்கி விட்டது. என் வாழ்வு இப்போது வெறும் நோய் நொடி, வலி,
    பின் ஏன் இந்த வாழ்வு வாழ ஆசைப் படுகிறேன் ? மரணத்தை கண்டு பயப் படுகிறேன் ?

    ஏதோ ஒரு மருந்தினால், மாய சக்தியினால்,
    இழந்த இளமையை பெற்று விட முடியுமானால்,
    • என்னால் படிக்க முடிந்தால்,
    • டிவி பார்க்க முடிந்தால்,
    • பாட்டு கேட்க முடிந்தால்,
    • வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தால்,
    • எனது ஜீரண சக்தி மேம்பட்டால்,
    • முடி மீண்டும் வளர்ந்தால், -

    இதெல்லாம் நடந்து விடாதா என்ற நம்பிக்கையில் , இந்த வாழ்வு வாழ ஆசைப் படுகிறேன் ! மரணிக்க பயப் படுகிறேன் !
    இறைவா, எனக்கு மரணம் வேண்டாம் ! என் இளமையை திரும்பிக் கொடு. அது போதும் .

    இறைவன்

    நான் ஒரு டாக்டரா? சொல் ? - தெரிய வில்லை
    இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? - தெரிய வில்லை
    இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - தெரிய வில்லை
    இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா? - தெரிய வில்லை
    இல்லைநான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? - தெரிய வில்லை

    பின் ஏன் என்னைக் கேட்கிறாய். ?
    நான் : ஏனென்றால் நீ தானே கடவுள் !

    இறைவன்

    அட முட்டாளே, நான் கடவுள் என்றால் நீயும் தான் கடவுள். என்னிடம் உள்ள அத்துனையும் உன்னிடம் உள்ளது. நான் தான் நீ ! நீ தான் நான் !

    உன்னால், உன் உடலை பாதுகாத்து கொள்ள முடியும். யாருடைய உதவியும் இல்லாமல் , சாப்பிட்ட உணவை ஜீரணித்து கொள்ள முடியும் . உன் விருப்பபடி கை கால்களை அசைக்க முடியும். உட்கார முடியும், படுக்க முடியும்., குழந்தை பருவத்தை வயோதிக பருவம் வரை, உன்னையே கட்டு மானம் செய்ய முடியும். உன் நோயை இயற்கையாக குணப் படுத்திக் கொள்ள முடியும் அதனால், நீயும் ஒரு டாக்டர், என்ஜினியர்!

    இப்போது சொல் !

    நீ ஒரு டாக்டரா? - ஆம்
    நீ ஒரு கெமிகல் என்ஜினீயரா? - ஆம்
    நீ ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - ஆம்
    நீ ஒரு சிவில் என்ஜினீயரா? - ஆம்
    நீ ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? - ஆம்
    நீ ஒரு கடவுளா - ஆம்

    உண்மையில் நான் தான் நீ ! நீ தான் நான். உயிரினம் தான் இறைவன் ! . இறைவன் தான் உயிரினம்!
    மரணம் என்பது இயற்கையானது. பிறந்தவன் எவனும் இறக்க வேண்டும். இறந்தவை மீண்டும் பிறக்க வேண்டும். எல்லோரும் வாழ நினைத்தால், இந்த பூமியில் இடமேது ?

    மேலே சொன்ன டாக்டர், எஞ்சினீர் , கடவுள் எல்லாம் நீ என்றால், காக்கை, குருவி, எலி, பாம்பு, தேள் ,பூச்சி, ஆடு, கசாப்பு கடைக் காரன், சிங்கம் புலி, மான் , மீன் , முதலை , மாடு எல்லாமே உன்னை போலதான். உனக்கு இருக்கும் அத்துனையும் அதற்கு உள்ளதே.

    அதுவும் பிறக்கிறது, வளர்கிறது, நோயை கட்டு படுத்திக் கொள்கிறது, குனிகிறது, நிமிர்கிறது, வளைகிறது, பறக்கிறது, நீந்துகிறது. ஒரு நாள் இறக்கிறது.
    நீயும், பிறக்கிறாய், வளர்கிறாய், வாழ்கிறாய், இறக்கிறாய்.

    நான் : இறைவா, நான் வாழ்க்கையில் நிறைய தொலைத்து விட்டேன். அடையாமல் போய் விட்டேன். டாக்டர், எஞ்சினீர், விஞ்ஞானி, பைலட், கப்பல் கேப்டன், இப்படி பல வாழ்க்கைகள் வாழ வேண்டும். ஆனால், வாழ்க்கையில் துளியும் துன்பப் படக்கூடாது.

    இறைவன் இது சாத்தியமா ? இந்த ஜன்மத்தில் நடக்ககூடுமா ?

    ஒரு கடையில் எழுதியிருந்தது. “ இங்கு எதுவாக இருந்தாலும் சரி செய்து கொடுக்கப் படும். கதவை தட்டுங்கள். காலிங் பெல் வேலை செய்ய வில்லை “ .நீ வெற்றி பெற நினைக்கிறாய். ஆனால் முயற்சி செய்ய மறுத்து விட்டாய். “

    உன் வாழ்க்கை எவ்வளவோ மேல். நினைத்து பார், குருடனாக, செவிடனாக, வாழ்நாள் முழுதும் நோயாளியாக, நொண்டியாக , ஏழையாக இருப்பவனை விட நீ எவ்வளவோ தேவலை . அதை நினைத்து சந்தோஷபடு. “

    நான் :சரி, இறந்த பின் மீண்டும் பிறந்தால், எனக்கு அமெரிக்காவில் பிறக்க வேண்டும் , செல்வந்தனாக , புகழுடன் இருக்க வேண்டும். ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் , இதெல்லாம் வேண்டாம் . இறைவா ! இதற்கு என்ன காரண்டீ ? அதனால், இந்த வாழ்க்கையை விட மனமில்லை.

    இறைவன் : அது முடியாத காரியம். படைக்கப் பட்டவை ஒரு நாள் அழிந்து தான் ஆக வேண்டும் .

    நான் : நான் சொர்கத்திற்கு போக முடியுமா ?

    இறைவன் :சொர்கத்தை நீ பார்த்திருக்கிறாயா? அல்லது எப்போதாவது அங்கு சென்றிருக்கிறாயா ?

    நான் :இல்லை . கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு போக ஆசை. ஆனால், என்னை நரகத்தில் தள்ளி விட்டால் ?

    இறைவன் :: நரகத்தை நீ பார்த்திருக்கிறாயா? அல்லது எப்போதாவது அங்கு சென்றிருக்கிறாயா ?

    நான் :இல்லை. கேள்விப் பட்டிருக்கிறேன்.

    இறைவன் : இது எதுவுமே நிஜமில்லை .

    நான் :அது எப்படி உனக்கு தெரியம் ?

    இறைவன் : நல்ல கேள்வி . எனக்கும் தெரியாது தான் . கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் தானே நீ !! நீதானே நான் ? ஒன்று மட்டும் நிச்சயம் , நீ இறப்பு பற்றி என்ன நம்புகிறாயோ, அது தான் உன் கடைசி காலத்தில் உன்னை இட்டுச்செல்லும். இப்போது எழுந்து, உன் கடமையை ஆற்று. நடப்பது தானாக நடக்கும்.

    நான் : இறைவா ! மற்றவர்கள் இகழும்படியான நிலையில், தர்மத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாத குழப்பமான மனநிலையில் உம்மை கேட்கிறேன். எனக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அதை நிச்சயமாக சொல்லும். நான் உம்முடைய சிஷ்யன்.உம்மை சரணடைகிறேன். எனக்கு உபதேசிக்கவேண்டும் ( கீதா 2.7)
    இறைவன் : சரி, சொல்கிறேன் ! பகவத் கீதையில் நான் சொன்னதை நினைவில் கொள் : -ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது மீண்டும் சொல்கிறேன் :

    .நீ துக்கப்பட தேவையில்லதவர்கள் குறித்து துக்கப்படுகிறாய். ஞானிகளை போன்று ஞானவார்த்தைகளை பேசுகிறாய். பண்டிதர்கள் இறந்தவர்களை குறித்தோ, உயிருடன் இருப்பவர்கள் குறித்தோ புலம்புவதில்லை (2.11 )

    நான் முன்பு இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை. அதேபோல் இந்த அரசர்கள் இல்லாத காலம் என்பதும் இல்லை. இனிமேல் நாமெல்லாம் இருக்கமாட்டோம் என்பதும் இல்லை. (அதாவது நாம் எல்லோரும் எப்போதும் இருக்கிறோம்) (2.12) .

    எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் ஏற்படுகிறதோ அதேபோல்தான் வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை (2.13)

    கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும், அதற்குரிய பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,கேட்டல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் முதலியவை உண்டாகின்றன.தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.(2.14)

    இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன். (2.15)

    இல்லாமல் இருப்பது ஒருபோதும் இருப்பதில்லை. இருப்பது ஒருபோதும் இல்லாமல்போவதில்லை. தத்துவத்தை தர்சித்தவர்களாலேயே இவ்விரண்டின் முடிவை காணமுடியும்.( 2.16)

    எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது (2.17 ).


    ****.

    நான் தள்ளாடி, எழுந்து, என் வேலையை பார்க்க சென்றேன். வெட்ட வேண்டும் . ஆடு வெட்டும் கசாப்பு கடை முதலாளி நான் தானே!
    ஆடுகளும் கோழிகளும், தங்கள் மரணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு முக்தி கொடுக்கும் தேவதை நான் ! நானும் இறைவன் தான் !

    தன் இறப்புக்காக காத்துக் கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று நினைத்துக் கொண்டது :
    மேமே என கனைத்தது .

    நான் ( ஆடு ) ஒரு டாக்டரா? - இறைவன் - "ஆம் "
    நான் ( ஆடு ) ஒரு கெமிகல் என்ஜினீயரா? - இறைவன் - "ஆம் "
    நான் ( ஆடு ) ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - இறைவன் - "ஆம் "
    நான் ( ஆடு ) ஒரு சிவில் என்ஜினீயரா? -இறைவன் - "ஆம் "
    நான் ( ஆடு ) ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? – இறைவன் - "ஆம் "
    நான் ( ஆடு ) முதியவனா ? - இறைவன் - "இல்லை"

    பின் நான் ( ஆடு ) யார் ?. எனக்கு மட்டும் ஏன் இப்போதே இறப்பு ? ஏன் என் காலம் மட்டும் இப்போதே முடிய வேண்டும் ? இறைவா ! பதில் சொல் ?

    இறைவன் சிரித்தான் : அதுதான் விதி. உன் தலை விதி. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் !

    நான் : விதியா ? அப்படி என்றால் ?

    இறைவன் : முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி

    நான் : எனக்கு ஏனிந்த விதி?

    இறைவன் : அதுதான் ரகசியம் . உனக்கு செடி கொடிகளை அழிக்க விதி. பூனைக்கு எலியை கொல்ல விதி. புலிக்கு மானை கொல்ல விதி.
    அது போல் , கசாப்புக் கடைக்காரனுக்கு உன்னை வெட்டும் விதி.

    ஆனால், இறப்பு என்பது இயற்கையானது. ஜெனித்தது எதுவும் இறக்க வேண்டும். இறந்தவை மீண்டும் பிறக்க வேண்டும். அதுதான் விதி . !


    ......முற்றும்
    Last edited by murali12; 06-03-2021 at 02:48 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •