Results 1 to 3 of 3

Thread: நிர்மலாவின் கனவு

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0

    நிர்மலாவின் கனவு

    நிர்மலாவுக்கு கல்யாணமான புதிது. அவளது கணவனின் அம்மா, அத்தை சியாமளா , அவளை தாங்கு தாங்கு என தாங்கினாள். இருக்காதா பின்னே ?. தலையில் சொட்டை விழுந்த, சுமாரான சம்பளத்தில் இருக்கும் 34 வயதான மகனுக்கு, நல்ல வேலையிலிருக்கும் , முப்பதே வயதான நல்ல குடும்பத்து பெண் கிடைப்பது என்பது, குதிரைக் கொம்பாச்சே ! பெண் பார்க்க சுமார் தான்.

    ஆனால் என்ன, தேடி தேடி அலைந்து, நொந்து நூடுல்ஸ் ஆன பிறகு அமைந்த வரன். அதனால் பெண்ணுக்கு எந்த வித சிரமமும் கொடுக்காமல் , சியாமளா, நிர்மலா ஆபிஸ் கிளம்பும் வரை எல்லா வேலையும் அவளே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள் .

    நிர்மலா வேலை முடிந்து வீடு வந்த பிறகும், டிபன், காபி, சாப்பாடு என்று அவளை ஒரு வேலை பண்ண விடவில்லை நிர்மலாவும், அத்தை பேரில் , “ அத்தை அத்தை” என்று கொள்ளை பிரியமாக இருந்தாள். இந்த மாதிரி மாமியார் யாருக்கு கிடைக்கும் ?

    ***
    ஆறு மாதம் போனதே தெரியவில்லை . இருந்தாலும், நிர்மலாவுக்கு ஒரு ஆசை. தனிக் குடித்தனம் என்பது வாழ்வில் ஒரு சுகமான கால கட்டம் தானே ?சொட்டைத்தலையானாலும் , கணவனுடன், எப்போதும் தனிமையாக இருக்க , கூட்டுக் குடித்தனம் ஒரு தளைதானே?

    அதனால், கல்யாணமான ஆறாவது மாதத்திலேயே , நிர்மலா கணவனுக்கு தூபம் போட்டாள். அவளது ஆபிசில் , போட்டுக் கொடுக்கும் எத்தனை பேரை அவள் பார்த்திருக்கிறாள் ? அவளுக்கு தெரியாத டெக்னிக்கா? நாடகம் ஆட அவளுக்கு தெரியாதா என்ன ?
    ஒரு நாளைப் போல கணவனிடம் புலம்பல் ! “ இதை பாருங்க ! என் கை புண்ணாய் போயிடுச்சி ! அத்தை, க்ரைண்டரில் அரைக்க சொன்னாங்க. என்பாள்

    ஒரு நாள். “ இதோ பாருங்க, அத்தை தன் குணத்தை காட்டறாங்க, பாத்திரமெல்லாம் கழுவசொல்றாங்க ! நானே ஆபீஸ்லேருந்து அலண்டு போய் வீட்டுக்கு வாரேன் ! இதிலே இவங்க பிடுங்கல் வேறே !" என்று இன்னொரு நாள்.

    “ இப்பவே தனி குடித்தனத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க . இல்லாட்டி, நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் “ என்று அரித்தாள்.
    வேறு வழியின்றி, மனைவி சொல்லே மந்திரம் என்று, நிர்மலாவின் கணவன் மணியும் , ஆபிஸ் தூரம் என காரணம் காட்டி, தன் அம்மாவையும் அப்பாவையும் விட்டு, புரசைவாக்கத்திலிருந்து பல்லாவரத்திற்கு ஜாகை மாற்றினான்.

    மணியை விட நிர்மலாவுக்கு சம்பளம் அதிகம் . அவள் பேச்சை கேட்டுத்தானே ஆகவேண்டும் . “ பணம் பேசும்” காலம் தானே என்றும் . ?
    புதுக் குடித்தனம் ஆரம்பம் நன்றாகவே இருந்தது. கணவன் மனைவி சொன்ன சொல்லுக்கு தப்பாமல் தாளம் போட்டான் . இதற்கு நடுவில், ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது.

    ஆண் குழந்தையாக இருக்குமோ என பயந்த எல்லோருக்கும் பெண் குழந்தை பிறந்தவுடன் “பெண் குழந்தை பெண் குழந்தை ” என கொள்ளை சந்தோஷம். யாருக்கு இருக்காது, இந்த காலத்தில் ! வரதட்சினை, கல்யாண செலவு எல்லாம் பிள்ளை வீட்டுக்கு தானே !

    கொஞ்ச நாள் ஆனது. நிர்மலாவுக்கு தனி குடித்தனம் கசந்து விட்டது. கணவனுக்கு சாமர்த்தியம் போதாது. அவன் சமையல் சகிக்க வில்லை. ஹோட்டல் சாப்பாடு அலுப்பு தட்டி விட்டது . குழந்தையையும் சரியாக பார்த்துக் கொள்ள தெரியவில்லை. என்ன ஆனாலும், நிர்மலாவும் ஒரு தாய், தாய். தாய் தானே !

    அதனால், அவள் கணவனிடம் கறாராக சொல்லி விட்டாள். இனி தனிகுடித்தனம் வேண்டாம் . பேசாமல் அத்தைக்கு போன் போடச்சொன்னாள். தங்களுடன் இனி எப்போதும் கூட இருக்க சொல்லி மனைவி சொல்லி மாற முடியுமா மணியால் ? அத்தையும் தன் கணவனுடன் உடனே புறப்பட்டு வந்து விட்டாள்.

    குடும்பம் மீண்டும் இனிக்க ஆரம்பித்து விட்டடது நிர்மலாவுக்கும் மணிக்கும் . அத்தை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். ஒரு பிரச்னையும் இல்லை .சமையல் சூப்பர்.

    ****
    “ அத்தை, இன்னும் ஒரு தோசை போடுங்க ! வெங்காய தோசை பிரமாதம் “ என்று மணி சமையலறை பக்கம் பார்த்து கூவினான் . “ இதோ வரேன்” என்று மணியின் அத்தை., தோசையுடன் வெளியே வந்தாள்.

    எப்போது மணியின் அம்மா. நிர்மலாவுக்கு அத்தையோ, அப்போது, நிர்மலாவின் அம்மா,மணிக்கு அத்தை தானே !

    ****

    இருபத்து ஐந்து வருடங்களுக்கு பிறகு . நிர்மலாவின் மகளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. அவள் அவளது கணவன் சொல்லிற்கேற்ப தனி குடித்தனம் போய்விட்டாள். இப்போதெல்லாம் ஆண்களுக்கு தான் மவுசு . வேலை வாய்ப்பு அவர்களுக்கு தான். பெண்களுக்கல்ல !
    உலகம் உருண்டை ! கால சக்கரம் உருள்கிறது !

    நேற்று சியாமளா !
    இன்று நிர்மலா !
    நாளை யாரோ ?
    ****முற்றும் .

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    சுவையான கதை, வாழ்த்துகள்.
    அன்புடன் ஆதி



  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஆதி !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •