மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்

பூமி சிறிதானது.பெய்த சிறுநீர், பகீரதன்

வரவழைத்த புனித நதியெனப்

பிரவாகமெடுக்கின்றது.பிடரி சிலிர்த்த குதிரைகள்

கோவேறு கழுதையாய் மாறி

தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தன*.

கம்பெடுத்தவன் தண்டல்காரன்.திசையெங்கும் அவள் அரிதாரம்.

கற்றவை மறந்து தேடி அலைகிறாள்

சிவப்புத் தாமரை சரஸ்வதி.

படிச்சிப் படிச்சி நீர்த்தாள்,

சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்

மூளைக்காரனிடம்.கடலுக்குள் நிசப்தமென

அறிவுலகம் துகில் கொள்கிறது.

நன்றி இனிது மின்னிதழ்