டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 விதிக்குட்பட்ட டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிக் ஸ்டார்ட் அலாய் வகைகள் 51 ஆயிரத்து 750 ரூபாய் விலையிலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் வகைகள் 58 ஆயிரத்து 925 ரூபாயில் கிடைக்கிறது. டிவிஎஸ் ஸ்போர்ட் மிகச் சிறந்த பைக்காக இருப்பதுடன், இதுவரை 25 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-51-750/