மாருதி சுசூகி நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்குப்பட்ட வெர்சன் செலிரோ எக்ஸ் இந்தியாவில் 4.90 லட்சம் ரூபாய் விலையில் விஎக்ஸ்ஐ வகையாகவும், டாப் ரேஞ்ச் வகையான இச்ட்எக்ஸ்ஐ (ஓ) வகைகளின் விலை 5.67 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் 2020 மாருதி சுசூகி செலிரோ எக்ஸ் பிஎஸ்6 மாடல்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் கிடைக்கிறது. இந்த கார்கள் VXI, VXI (O), ZXI மற்றும் ZXI (O) வகைகளில் கிடைக்கிறது. தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாருதி சுசூகி நிறுவனம், தனது புதிய செலிரோ எக்ஸ் காரை வெர்சுவல் முறையில் அறிமுகம் செய்வதாக இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-4-90-lakh/