மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 பொலிரோ வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. பிஎஸ்6 மஹிந்திரா பொலிரோ வாகனங்கள் 7.76 லட்சம் ரூபாய் விலையில் துவங்கி 8.78 லட்சம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது. இந்த வாகனத்தின் இன்ஜினில் பெரியளவிலான அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் எம்ஹாவக்75 இன்ஜின்கள் 75 bhp ஆற்றலில் 3,600 rpm-லும், பீக் டார்க்கான 210 Nm-ல் 1,600 முதல் 2,200 rpm-லும் இயங்கும் இந்த இன்ஜின் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்க் திறன் 60 லிட்டர் அளவு கொண்டதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-76-lakh/