பேய்ப் படம்


- ஆர். தர்மராஜன்


அந்த தொண்ணூறு நிமிட பேய்ப் படத்தைத் தனி ஒருவனாய் திரையரங்கில் இரவு ஆட்டம் பார்க்கத் தயார்
என்று வந்தான் பிரதீப். அவனை நன்கு செக்-அப் செய்து... அரங்கில் உட்கார வைத்தார்கள் போட்டி நடத்துனர்கள்.

முப்பது நிமிடத் திகிலிலேயே பிரதீப் வாயிலிருந்து ரத்தம் வழிந்து... தலை ஒரு பக்கம் சாய...
ஓடி வந்தவர்களில் இருந்த ஒரு மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு... “போயிட்டான்!” என்றார்.

ஈமக் காரியங்கள் முடிந்த மறுநாள்... பிரதீப்பின் மனைவிக்கு அவன் பெட்டியிலிருந்து ஒரு கடிதம் கிடைத்தது.

ராணி... எல்லாம் போயிட்ட இந்த நிலைமைல என் லை∴ப் இன்ஷியூரன்ஸ்தான் இனி உன்னையும் நம்ம மகளையும் காப்பாத்தும்.
ஆனா நான் சூசைட் பண்ணிக்கிட்டா பணம் வராது. ஸோ... நான் பேய்ப்படம் பாக்கற போட்டியில கலந்துகிட்டு உயிரை விட்டுடறேன்.
இன்ஷியூரன்ஸ் பணம் முப்பது லட்சம் உனக்கு வரும்.

இந்த லெட்டர் வெளியே தெரியக் கூடாது... படிச்சதும் எரிச்சுடு. குட்பை டார்லிங்... பிரதீப்.


(முற்றும்)