பண்டிகை கால சீசன் முடிவடைந்த நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முதல் முறையாக புல்லட் 350 ஏபிஎஸ் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட் 350 பைக்கள் கடந்த 2019-ம் ஆண்டு இரண்டு வகைகளில் அறிமுகமாகியது. இதன் விலை முறையே 1,12,000 ரூபாய் விலையிலும், 1,26,000 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது பண்டிகை கால சீசன் முடிவடைந்த நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், இந்த பைக்களின் விலையை முறையே 1,14,755 ரூபாய் விலையிலும், 1,30,365 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் என்ஃபீல்ட் 350 ஏபிஎஸ் பைக்கள் புல்லட் சிலவர், புல்லட் ஒனிக்ஸ் பிளாக் மற்றும் சாபையர் புல்லட் ப்ளு ஆகிய ஆறு கலர் ஆப்சங்களில் கிடைக்கிறது. இந்த பைக்களின் உயர்தரம் கொண்ட வகைகள், ரீகல் ரெட், ஜெட் பிளாக் மற்றும் ராயல் ப்ளு ஆகிய கலர் ஆப்சன்ங்களில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்ட் 350 ஏபிஎஸ் பைக்கள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து வெளியான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஒரே மோட்டார் சைக்கிளாகும். இந்த பைக்களின் டிஸ்க் பிரேக்கள் முன்புற வீல்களிலும், டிரம் பிரேக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...up-to-rs-4000/