குழந்தைகள் தின வாழ்த்துகள்
..........................

* அழகெல்லாம்
அழகாய் வந்து பிறந்த
அழகு
அழகு குழந்தைகள்.

* குழந்தை என்றாலே
குதூகலம்.

* கண்ணழகில்
புன்னகை காட்டி
காண்போரை சுண்டி இழுக்கும்
காந்த வசீகரம்.

* பூக்களைப் பறிப்போம்
ஆனால்
குழந்தைப் பூக்கள்
நம்மைப் பறித்து விடும்.

* குழந்தைத்தனம் கொண்ட
அனைவரும் குழந்தைகளே!

* ஆனந்த மழையை
அளவின்றி சொரியும்
அன்புக் குழந்தைகளுக்கு
அன்பான வாழ்த்துகள்.

- கேப்டன் யாசீன்