இந்தியாவிற்கு முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை 1983ம் ஆண்டில் பெற்றுத் தந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். ஹரியானா ஹரிக்கேன் என்ற செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துடன், பல்வேறு பொறுப்புகளையும் வகித்த கபில்தேவ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் கபில் தேவ். அவர் ஜீப் காம்பஸ் காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள், ஜீப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் வாங்கியுள்ள காரின் நிறம் ரெட் கலரில் உள்ளது. இந்த ஜீப் காம்பஸ் வகைகள் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மஹேந்திர சிங் டோனி அண்மையில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹவாக் எடிசனை வாங்கியுள்ளார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...th-rs-26-lakh/