உலகின் அதிவேக கார் என்ற பெருமை கொண்ட லம்போர்கினி உரூஸ் காரை, பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ரோஹித் ஷெட்டி. இவர் தயாரிப்பில் கோல்மால் சிரீஸ், சிங்கம் பிலிம் சிரீஸ், பால் பாச்சன், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் திவாலே போன்ற வெற்றி படங்களில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இதுமட்டுமின்றி பல்வேறு டிவி தொடர்களையும் தயாரித்து, இயக்கி வருகிறார்.

இவரிடம் ஏற்கனவே பல்வேறு ஆடம்பர கார்கள் இருந்து வரும் நிலையில் தற்போது புதிதாக லம்போர்கினி உரூஸ் காரை வாங்கியுள்ளார்.

ஆடம்பர கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்ட இவரிடம், ஃபோர்டு முஸ்டாங், மசராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளன.

இந்த கார்களுடன் அவரது கேரேஜ்ஜில் புதிய வரவாக தற்போது லம்போர்கினி உருஸ் கார் இணைந்துள்ளது. இந்த காரை இவர், மும்பையில் உள்ள டீலர்ஷிப்பிடம் இருந்து சில தினங்களுக்கு முன்பு டெலிவரி பெற்றுள்ளார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...rus-super-suv/