ரெனால்ட் ட்ரைபர் சப் காம்பேக்ட் 7 சீட் கொண்ட கார்களை, வெறும் இரண்டே மாதத்தில் 10 ஆயிரம் கார்களை டெலிவரி செய்து புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. 10,001-வது கார் அண்மையில் மும்பை டீலர்ஷிப்பில் ட்ரைபர் காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது.

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தனது தயாரிப்பான ட்ரைபர் கார்களை அதிகளவில் விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் அக்டோபர் மாத மொத்த விற்பனை 11 ஆயிரத்து 516 யூனிட்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டடத்தில் நடந்த விற்பனையுடன் ஒப்பிடும் போது, இந்த விற்பனை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ட்ரைபர் கார்களின் விற்பனை மைல்கல்லைப் பற்றி பேசிய ரெனால்ட் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ரம் மாமிலப்பல்லே, பண்டிகைக்கால சீனனை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் நல்ல விற்பனையை சந்தித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, இதற்காக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதே போனற வரவேற்பு தொடர்ந்தால், எங்கள் ரெனால்ட் ட்ரைபர்கள் இந்தியா மார்க்கெட்டில் புதிய மாற்றத்தை உண்டாக்கும் வகையில் மாறி விடும் என்றார்.

மேலும் பேசிய அவர், ஏற்கனவே 10 ஆயிரம் கார்களை டெலிவரி செய்து ஸ்டிரங்கான புக்கிங் பைப்லைனை பெற்றுள்ளோம். அதிகரித்து வரும் விற்பனைக்கு ஏற்ற வகையில், தயாரிப்பு பணிகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உயர்தரம் கொண்ட கார்களை தயாரிக்க பணிகளில் முழு கான்சன்டிரேசன் செய்து வருகிறோம். மெட்ரோ சிட்டிகளில் ரெனால்ட் ட்ரைபர்-கள் இந்தியாவ்வின் நகர்ப்புற மார்க்கெட்டில் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளளோம் என்றார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...in-two-months/