இயலாமையை எண்ணி....
ஏங்கித் தவிக்கிறோம்...
ஏக்கமுடன் தத்தளிக்கிறோம்..!

சுகந்தக் காற்றை
சுவாசிக்க வேண்டிய சுஜித் -
சுவாசக் காற்றை இழந்து விட்டான்...!

மைதானத்தில் விளையாடியது போதுமென
மயானத்தில் ...விளையாடச் சென்று விட்டான்...!

பிரசவத்திற்கு முன்பே...
பிறர் சவக்குழி வெட்டி விட்டனர்..!

ஆழ்துளைக் கிணறு...?!
அல்ல...அல்ல..
ஆள் கொலைக் கிணறு...!

மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டி..?!
இல்லை.. இல்லை..
பிணப்பாறை - சுடுகாட்டுப்பட்டி..!

இயலாமையை எண்ணி....
ஏங்கித் தவிக்கிறோம்...
ஏக்கமுடன் தத்தளிக்கிறோம்..!

மன்னித்து விடு சுஜித்..!
நீ உணர்த்திய பாடத்தால்..
பிற உயிர்கள்...
மரணிக்காமல் கவனம் கொள்கிறோம்...!

நிலத்திலிருந்து...
நிலவினைத் தொடும் விஞ்ஞானமே...
நிலத்திலும் சிறிது கவனம் கொள்...!
நிலத்தடியிலும் சிறந்து பயணம் செய்..!

உழைப்பால் ...
பயிர்களைக் காப்பது போல்...
உணர்வால்...
உயிர்களைக் காத்திடு...!

வேண்டி நிற்கிறோம்...
விரைவினில் செயல்படு... விஞ்ஞானமே.....!
தரையினில் செயல்படுத்து...மெய்ஞ்ஞானமே.....!