ஒகினாவா ஸ்கூட்டர்கள் புதிய ஸ்லோ ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஒகினாவா லைட் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் விலை 59 ஆயிரத்து 990 ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த ஸ்கூட்டர்கள் அண்மையில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இளைய தலைமுறை மற்றும் பெண்களை குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர்கள் நகரில் குறைந்த தூர பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதாவது பள்ளி, காலேஜ் அல்லது ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஏற்றது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் எளிதாக நாள்தோறும் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருப்பதுடன், எளிதாக கழற்றி மாற்றக்கூடிய வகையிலான லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஒகினாவா லைட்களில் கூடுதலாக, 3 ஆண்டு வாராண்டி கொண்ட மோட்டார் மற்றும் பேட்டரிகளுடன் கிடைக்கிறது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் குறித்து பேசிய ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜீதேந்தர் சர்மா, புதிய LITE-களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போதைய மார்க்கெட் பல்வேறு வகையான ஸ்லோ ஸ்பீட் ஸ்கூட்டர்களை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. முற்றிலும் புதிய ஒகினாவா லைட்-கள் மார்கெட்டில் பெரிய புயலை கிளப்பி, வாடிக்கையாளர்களுக்கு டெக்னாலஜிகளுடன் புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் இந்திய இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு தேவையான சிறந்த பேலன்ஸ் கொண்டதாக இருப்பதுடன், எளிதாக பயன்படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்றார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...oter-launched/