இந்தியாவில் வாகனங்களில் வேகமாக வந்து நடந்து செல்பவர்களின் செல்போன், செயின் போன்றவற்றை பறித்து கொண்டு செல்லும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த திருட்டில் ஈடுபடும் பெரும்பலானவர்கள் வாகனத்தில் வந்து விலை உயர்ந்த பொருட்களை நொடி பொழுதில் திருடி செல்கின்றனர். அதிவேகமாக செல்வதால் இவர்களை உடனடியாக பிடிக்க முடியாது.
பெங்களூரில் நடந்த இதுபோன்ற சம்பவம் ஒன்றில், தனது கேடிஎம் 250 பைக்கில் வந்த ஒருவர் திருட்டில் ஈடுபட்டவர்களை துரத்தி பிடித்து தற்போது ஹீரோவாகியுள்ளார் ஒருவர்.

இந்த சம்பவத்தில் ஹீரோவான நபரின் பெயர் ஃப்ரெட்ரிக் ஆண்ட்ரூஸ் ( Fredrik Andrews). சம்பவத்தினறு இவர், ஹெயின்ஸ் ரோட்டில் கால்ஸ் பார்க் அருகே கேடிஎம் 250 டியூகில் சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்கையில், இரவு 9.30 மணியளவில், தனது பைக்கை பார்க் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த நேரத்தில் கொஞ்சம் கூட்டமாகவே இருந்தது.

அந்த நேரத்தில், என் செல்போனை பறித்து கொண்டு செல்கிறார்கள், பிடியுங்கள்… பிடியுங்கள்… என்று இளைஞர் ஒருவர் கத்தி கொண்டே ஒரு ஸ்கூட்டரை நோக்கி ஒடி கொண்டிருந்ததை பார்த்தேன். உடனே எனது டியூக் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு செல்போனை பறிகொடுத்த நபரிடம் சென்று, செல்போனை பறித்து கொண்டு சென்றவர்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தேன். அவர் சொன்ன தகவலின்படி, அவர்கள் சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் சென்றதை தெரிந்து கொண்டேன்.

இதையடுத்து அவர்களை துரத்த துவங்கினேன். நீண்ட தூர துரத்தலுக்கு பின்னர் டிரீம் வேர்ல்ட் கனரா வங்கி அருகே அவர்களை பிடித்து நிறுத்தினேன். அவர்கள் திருடி விட்டு வந்துள்ளதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை சரமாரியாக அடித்தனர் என்று ஃப்ரெட்ரிக் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, திருட்டு குறித்து புகாரை பதிவு செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசரானையில் திருட்டுக்காக அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டரின் நம்பரும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அந்த ஸ்கூட்டரை பஜாஜ் பைக்கின் கீ-ஐ வைத்து அவர்கள் திருடி உள்ளதும் தெரிய வந்தது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...rs-on-scooter/