டொயோட்டா ரைஸ் எஸ்யூவி கார்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து அதற்குண்டான வசதிகளுடனும், உறுதியான எஸ்யூவி-யாகவும் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த கார்கள் ஃபன் டிரைவ்களுக்கு ஏற்றதாக இருக்கும். டொயோட்டா ரைஸ் எஸ்யூவி கார்கள், DNGA platform-ஐ அடிப்படையாக கொண்டதுடன், டொயோட்டாவின் விலையுயர்ந்த டி.என்.ஜி.ஏ கட்டமைப்பின் டைஹாட்சுவின் பதிப்பாகவும் வெளியாகியுள்ளது.

டைமன்சனை பார்க்கும் போது, டொயோட்டா ரைஸ் எஸ்யூவி கார்கள் 3 ஆயிரத்து 995 mm நீளம், ஆயிரத்து 695 mm அகலம் மற்றும் ஆயிரத்து 620 mm உயரம் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவிகளின் மொத்த பூட் ஸ்பேஸ் 360 லிட்டர் அளவு கொண்டிருக்கும்.

புதிய டொயோட்டா ரைஸ் எஸ்யூவி கார்கள், டைஹாட்சு ராக்கி மாடல்களை அடிப்படையாக கொண்டிருந்த போதும், இதில் முன்புறம் மற்றும் பின்புற பகுதியில் சில மாற்றங்கள் கொண்ட புதிய பம்பர்களுடன் இருக்கும். டொயோட்டா ரைஸ் எஸ்யூவி-கள் பொதுவாக, சமீபத்திய டொயோட்டாக்களில் உள்ளது போன்று ட்ரெப்சாய்டல் கிரில்களுடன் இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்-களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 17 இன்ச் மேக் வீல்கள் மற்றும் ஃப்ளோட்டிங் டைப் டிசைன்களுடன் கூடிய டி-பில்லர்களும் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-japan/