கமர்ஷியல் வாகனங்களை இயக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்கி தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பால் வர்த்தக வாகனம் ஓட்டுபவர்களுக்கு என்ன நம்மை ஏற்படும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1989ன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பஸ், லாரி மற்றும் டாக்ஸி போன்ற கமர்ஷியல் வாகனங்களை இயக்க வேண்டுமென்றால், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கல்வி தகுதியாக இருந்து வந்தது.

இந்த விதிகள் உருவாக்கப்ப்த்டிருப்பதற்கு காரணமே, வெளிமாநிலங்களுக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் டிரைவர்கள், ஊர்களின் பெயர்களை படிக்க வேண்டும், வழியில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை படிக்க வேண்டும் என்பதும் , போக்குவரத்து எச்சரிக்கை பலகைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே இப்படி ஒரு விதிமுறை உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...ving-licenses/