அமைச்சர் ஒருவர் தனது காருக்கான டயர்களை வெறும் 2 ஆண்டுகளில் 34 முறை மாற்றியிருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த அமைச்சர் யார்? அவர் இதற்காக செய்த செலவு எவ்வளவு? என்பதை குறித்து தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

கார்களை பயன்படுத்துபவர்கள், தங்கள் காரை சிறப்பாக பராமரித்து கொள்வது மிகவும் நல்லது. இதனால், கார் சிறப்பாக செயல்படுவதுடன் அதன் லைப் டைம் அதிகமாகும். காரில் உள்ள டயர்களை பராமரிப்பது, தடையற்ற பயணத்திற்கு மிகவும் உதவும். இந்த டயர்களை பராமரிக்க பல்வேறு முறைகள் உள்ளன. ஆட்டோதுறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளபடி கார் டயர்களை பராமரித்து வந்தால், பல ஆண்டுகளுக்கு டயர்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி இருக்கையில் அமைச்சர் ஒருவர் தனது காருக்கான டயர்களை வெறும் 2 ஆண்டுகளில் 34 முறை மாற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த மாதிரி டயர்களை மாற்றி, அரசுக்கு செலவு வைத்த அந்த அமைச்சர் பெயர் எம்.எம். மணி. இவர் கேரள மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர்தான் கடந்த 2 வருடங்களில் 34 முறை டயர்களை மாற்றியுள்ளார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்வியில், கேரளாவில் உள்ள அமைச்சர்களின் கார் டயர்களை மாற்றுவதற்காக மாநில அரசு கருவூலத்தில் இருந்து எவ்வளவு செலவிடப்பட்டு இருந்தது கேள்வியை முன் வைத்திருந்தார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...es-in-2-years/