தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி, வங்கி கடன் பெற்று, பல கோடி மதிப்பு கொண்ட 28 கார்களை வாங்கி, அவற்றை பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கேரளா மாநிலத்தில் நடைப்பெற்றதுள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் வங்கிகள், பல்வேறு வகையான மோசடிகளை சந்தித்து வரும் நிலையில், கேரளாவில் வித்தியாசமான முறையில் வங்கி கடன் பெற்று மோசடி செய்யபட்டுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது,

இந்த மோசடியில் ஈடுபட்ட நபரின் பெயர் விபின் கார்த்திக். இவரது தாயார் ஷியாமளா வேணுகோபால். இவர்கள் இருவரும் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்படி என்ன வித்தியாசமான மோடியில் இவர் ஈடுபட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

விபின் கார்த்திக் தன்னை ஒரு காஷ்மீரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி கொண்டு, போலியாக ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் லோன் பெற்றுள்ளார். இந்த லோன்கள் மூலம் 28 கார்களை வாங்கியுள்ளார். இதில் 12 கார்களை குருவாயூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலும், மீதமுள்ள 16 கார்களை நடபுரம், தலசேரி, கோட்டயம், திருவனந்தபுரம், கலாமாசேரி, எர்ணாகுளம், கோய்லாண்டி மற்றும் வடகர ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளிலும் பெற்றுள்ளார். வங்கி கடன் பெற்று தான் வாங்கிய கார்களை உடனடியாக, பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் விற்பனை செய்து பணத்தை பெற்று கொள்வார். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...for-bank-scam/