எம்ஜி மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் மார்க்கெட்டில் தனது தயாரிப்பான ஹெக்டர் கார்களுக்கு அறிமுகம் செய்துள்ளது முதல் இதுவரை 38 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஹெக்டர் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தமாக 3 ஆயிரத்து 536 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஏராளமான எதிர்பார்ப்புகளுடன், ஹெக்டர் கார்கள் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வந்தது. துவக்கத்தில் எதிர்பாராத அளவு முன்பதிவு அதிகரித்தையடுத்து, ஜூலை 18-ம் தேதியன்று முன்பதிவு நிறுத்தப்பட்டது.

இருந்தபோதிலும், இந்த முன்பதிவும் செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 8 ஆயிரம் முன்பதிவை பெற்றது. இருந்த போதிலும் இந்த கார்களுக்கான விலை அதன் வகைகளை பொருத்தது 30 முதல் 40 ஆயிரம் அதிகமாக உள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி-யான இந்த காரின் மாதந்திர விற்பனை 35 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 2,608 யூனிட்களை விட அதிகமாகும். ஹெக்டர்கள் குஜராத்தில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஐந்து சீட் கொண்ட மாடல்கள் வரும் 2020-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தயாரிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படுவதும் இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். கடந்த அக்டோபர் மாத இறுதி வரை ஹெக்டர் கார்களின் உள்நாட்டு விற்பனை அளவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) தகவல்களின் படி வெறும் 8,000 யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View source: https://www.autonews360.com/tamil/ne...-october-2019/