இந்தியாவின் முதல் பென்ட்லி முல்சேன் ஈ.டபிள்யூ.பி கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் British Biologicals MD வி எஸ் ரெட்டி என்பவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. நிறுவன ஊழியர்களின் ஒத்துழைப்பால் பெரிய வெற்றியை எட்டியுள்ளதை கொண்டாடும் வகையில் ரெட்டி இந்த காரை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து வி எஸ் ரெட்டி தெரிவிக்கையில், 20 ஆண்டுகால பயணத்தில், எங்கள் நிறுவனத்தின் கனவு, பென்ட்லி முல்சேன் ஈ.டபிள்யூ.பி மூலம் நினைவாகியுள்ளது. இந்த காரை டெலிவரி செய்ய எந்த ஒரு சிறப்பு நாளையும் திட்டமிடவில்லை. ஆனாலும், எங்கள் நிறுவனத்தின் நீண்ட கால பயணத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த அளவுக்கு தான் முன்னேறியுள்ளதற்கு எனது ஊழியர்களின் உழைப்பை காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

British Biologicals நிறுவனம் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்ததுடன் குறிப்பிட்ட பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த முன்னணி தயாரிப்புகளே இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. இந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பென்ட்லி முல்சேன் ஈ.டபிள்யூ.பி கார்கள் டாப் டீலர்களிடம் கிடைப்பதுடன், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதிக ஆடம்பர வசதிகள் கொண்ட கார், வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்யப்பட நிலையில் சிறப்பு டச் அம்சங்களுடன் வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இவை பெர்சனல் டச்-களுடன் பீபோகஸ் பிரேக்கள் மற்றும் மரத்திலான வேலைப்பாடுகள், லெதர் பினிஷ்களுடன் இருக்கும்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...-in-bangalore/