சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவுக்கு அவருடைய தாயார் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இவர் பரிசாக பெற்றுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் கார் இந்தியாவில் 10 கோடி ரூபாய் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹன்சிகாவுக்கு அவருடைய தாயார் மோனா மோத்வானி ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் காரை பரிசாக வழங்கியுள்ளார். சரும நிபுணராக பணியாற்றும் அவர், ஹன்சிகாவுக்கு மேலாளராகவும் உள்ளார்.

பாலிவுட்டில் குழைந்தை நட்சத்திரமாக அறிமுகமாமி பின்நாளில் தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் கால் தடம் பதித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தற்போது, கோலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் மிகப்பெரிய நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர் ஆவார்.

ஹன்சிகா பெற்றிருக்கும் இந்த காரை அவ்வளவு எளிதில் யாராலும் பெற்றுவிட முடியாது என்பது ஊர் அறிந்த ஒன்று. இந்த காரை வாங்க வேண்டும் என்றால், அவர் மிகுந்த செல்வந்ததாரராக இருக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் நபரின் பின்னணியை விசாரிப்பார்கள். அது அந்த நிறுவனத்திற்கு திருப்தி தந்ததால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...ft-by-her-mom/