முன்னாள் கடற்படை வீரர் ஒருவர், போலீஸ் உடையில் சென்று சொகுசு காரை கடத்தியுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்த்தவர் ஓய்வு பெற கடற்படை வீரர் பரத்சிங். இவர் அதிக விலை கொண்ட சொகுசு காரில் பயணிப்பதை மிகவும் விரும்புவார். இருந்தாலும், அதிக விலை கொண்ட ஆடம்பர காரை வாங்கும் அளவும் வசதி கொண்டவர் இல்லை.

இந்நிலையில், தான் விரும்பும் ஆடம்பர காரை ஓட்டி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை கெத்தாக காட்டி கொள்ள விரும்பினார். இதற்காக ஆடம்பர கார்களில் லிஃப்ட் கேட்டு சென்று அந்த காரை கடத்தி கொண்டு சென்று, தன் உறவினர்கள் மத்தியில் பந்தா காட்டியுள்ளார்.

இதற்கு முன்பு அவர் பல முறை காரை திருடுவதற்காக லிஃப்ட் கேட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாத பரத் சிங், போலீஸார் உடையணிந்து கொண்டு சாலை ஓரத்தில் நின்றவாறு சொகுசு கார்களை குறி வைத்து லிஃப்ட் கேட்க ஆரம்பித்துள்ளார். அப்போதுதான், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 லக்சூரி காரை அவர் கடத்திச் சென்றுள்ளார்.

பரத் சிங் கடத்தியுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரக கார், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்றது. இவர் வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்தது. அவரை ஏர்போர்ட்டில் இறக்கிவிட்ட ஓட்டுநர், வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...bmw-x5-busted/