ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட ஐ20 ஆக்டிவ் வகைகளில் இந்தாண்டுக்கான மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் மார்க்கெட்டில் 7.74 லட்சம் ரூபாய் துவக்க விலையில் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

2019 ஹூண்டாய் ஐ 20 ஆக்டிவ் கார்கள் மூன்று வகைகளில் அதன்படி ஐ20 ஆக்டிவ் எஸ். எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ். டூயல்-டோன் வேரியண்ட்களில் கிடைக்கிறது என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

2019 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் வகைகளின் புதிய உயர்த்தப்பட்ட விலைகள், பழைய ஐ20 ஆக்டிவ் மாடல்களின் விலையை விட தோராயமாக 2000 ரூபாய் அதிகமாகவே உள்ளது. இதில் உள்ள புதிய பாதுகாப்பு சிஸ்டம், விரைவில் அமலுக்கு வர உள்ள பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பாதுகாப்பு வசதிகள், ரிவர் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், டிரைவர் மற்றும் பயணிகள் சீட்பெலட் ரீமைண்டர் மற்றும் பல வழக்கமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

வெளிப்புறமாக பார்க்கும் போது, 2019 ஹூண்டாய் ஐ 20 ஆக்டிவ் கார்களில் ஸ்போர்ட்ஸ் மாடல்களுக்கு உண்டான டிசைன் லாங்க்வேஜ்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முன்புறத்தில் புரொஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப்களுடன் கூடிய எல்இடி டிஆர்எல்கள் மற்றும் கார்னிங் லேம்ப்கள், பனிக்கால விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், திமிங்கில துடுப்பு போன்ற ஆண்டனா, உறுதியான பிளாஸ்டிக் கிலேடிங்கள் இடம் பெற்றிருக்கும். இதன் டாப்-வகை மாடல்களில் டைமண்ட் கட் அலாய் வீல் களை கொண்டிருக்கும். கூடுதலாக, ஃப்க்ஸ் ஸ்கீட் பிளேட்கள், ரூஃப் ரெயில்களுடன் முன்புறம் மற்றும் பின்புற பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-74-lakh/