கேடிஎம் நிறுவனம் முற்றிலும் புதிய 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்களுக்கான புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் எதிர்வரும் லிட்டர் கிளாஸ் ஸ்ட்ரீட்பைட்டர் பைக்களுக்கான தெளிவான வியூ வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்கள் இத்தாலியின் மிலனில் நடந்த EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேயா நாட்டை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் நிறுவனம், புதிய கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்களுக்கான முழுமையான புரோட்டோடைப்களை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், காட்டப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் ரேஸ் டிராக்கில் சோதனை செய்யப்படுவது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த புரோட்டோடைப்களில், எந்த வகையான லைட்களும் இடம் பெறவில்லை. ஆகையால், ஹெட்லைட் இல்லாமலும், டெயில்லைட் அல்லது இன்டிக்கேட்டர்கள் இல்லாமலும் இருக்கிறது. ஆனாலும், இந்த வீடியோவில் மொத்த கேடிஎம் பைக்களுக்கான டிசைனை காட்டுவதாக அமைந்துள்ளது.

புதிய கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்களில் ஸ்போர்ட்ஸ் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள டிரில் பிரேம்களுடன் காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் சில அப்-களும் இதில் இடம் பெற்றிந்தது. புதிய டிரில் பிரேம்களுடன் இன்ஜின்களுடன் கூடிய உபகரணங்களுடன், போல்ட் செய்யப்பட்ட காஸ்ட் அலாய் சப் பிரேம்களுடன் இருக்கும்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...-teased-video/