பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், இதற்கு மாற்று வழிகள் குறித்து ஆட்டோமொபைல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது, பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள்தான் சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த என்ஜின்களின் விலை இருமடங்கு அதிகமாக இருப்பதால், இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அதிக கால அவகாசமும் தேவைப்படுகிறது. இந்நிலையில், தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின் ஒன்றை தயாரித்துள்ளார் இஸ்ரேலை சேர்ந்த மெக்கானிக் ஒருவர். இஸ்ரேலை சேர்ந்த மெக்கானிக் யெசுடா ஷ்மியூலி-யால் நிறுவப்பட்ட அமெரிக்காவில் உள்ள Maymaan Research LLC, சுற்றுச்சூழலுக்கு உகந்த மலிவு விலையில் எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி அருகே செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தை, இவர் தனது மகன்கள் ஐதன் மற்றும் டோரன் ஆகியோர் துணையுடன் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மேமான் நிறுவனத்தின் தீவிர ஆராய்ச்சியில், பிஸ்டனில் இயங்கும் கார் எஞ்சினில் குறிப்பிட்ட மாறுதல்களுடன் தண்ணீர் மற்றும் எத்தனால் அல்லது வேறு எந்த வகை ஆல்கஹால் கலவையிலான எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றி உருவாக்கியுள்ளார்.

View Source: https://www.autonews360.com/tamil/ne...water-alcohol/