கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கேரள மாநில முதல்வரின் காரே விதிமுறை மீறில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்து உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அபராதம் எதுவும் விதிகப்பட்டதா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணாலாம்.

இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகள் அறிமுகமாகியுள்ள நிலையில், பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு விதிமுறை மீறல்களுக்காக அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் கார்கள் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறி அதிவேகமாக பயணித்துள்ளது, public challan portal-லில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலின் படி, கேரள முதல்வர் பினராயி விஜயனின் இரண்டு அதிகாரப்பூர்வ டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்கள் ஸ்பீடு லிமிட்டை பல முறை மீறி பயணம் செய்துள்ளது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...ound-speeding/