டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான சர்வதேச அளவிலான பிரிமியர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த கார்கள் எதிர்காலத்திற்கு மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கும் குறிப்பிட்ட சில மார்க்கெட்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம், விரைவில் வெளியிட உள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைகட்சூ நிறுவனம் ராக்கி என்ற பெயரில் காம்பேக்ட் வகையிலான எஸ்யூவிகளை கடந்த வாரம் டோக்கியோவில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் வெளியிட்டது. புதிய டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி-கள், இந்தியாவில் விற்பனையாகி வரும் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்கள் போன்று சிறந்த திறன் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய டொயோட்டா காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் Daihatsu Rocky எஸ்யூவியின் அடிப்படையில் இருப்பதுடன், டொயோட்டா பிராண்டில் ரெய்ஸ் என்ற பெயரில் வெளியாக உள்ளது. புதிய டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி-கள் சர்வதேச அளவில் வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை டொயோட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...-image-leaked/