“மாடு கட்டி போரடித்து மாளாது என்று யானை கட்டி போரடித்த நிலம்” தமிழ் நிலம். உலகிலேயே முதலில் பதம் பார்த்து பயிரிடப்பட்டது தஞ்சை தரணி என்கிறது ஆய்வு. வரப்பிற்குமேல் ஏறி நின்று கையை உயர்த்தினால் கை நுணிக்கும் மேலே வளர்ந்த கம்பீரமான மாப்பிள்ளை சம்பா, கருடஞ்சம்பா போன்ற நெல்மணிகளெல்லாம் புகைப்பட ஆவணமாக்கிவிட்டோம். தஞ்சை ஒரு போகம் விளைந்தால் தமிழகத்திற்கே உணவளிக்கலாம்.

Source: https://tamil.southindiavoice.com/ta...-in-thanjavur/