குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் பல இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் அவரது மகன் முக.ஸ்டாலின் மேயர் முதல் துணை முதலமைச்சராகவும். கட்சி பணிகளில் அடிப்படை உறுப்பினரில் ஆரம்பித்து செயல் தலைவராகவும் இருந்தது ஊரறிந்தது. அதே பார்முலாவை தான் செயல்படுத்தப் போகிறது இன்றைய திமுக. ஆம், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் என்ற முக்கிய பொறுப்பில் அமர்த்தப் படுகிறாராம்.

Source: https://tamil.southindiavoice.com/ta...ate-secretary/