நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்து கூடப் பெறமுடியாத நிலையில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பிறகு காங்கிரஸ் ஜார்கண்ட் மாநிலத்தவர் அஜோய் ராய் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வரிசையாக ஒடிசா, உத்திர பிரதேசம், கர்நாடக, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Source: https://tamil.southindiavoice.com/in...ess-president/